Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கந்தசாமி காமெடியும் நாராயணசாமி போட்டியும் - சாமி எங்களுக்கு சில உண்மை தெரிஞ்சாகணும்

வாராவாரம் வந்து வெந்துபோகிற எக்குத்தப்பு டவுட்ஸ்கள்தான் இதெல்லாம். அப்டியே யாராச்சும் கிளியர் பண்ணிவிட்டுட்டுப் போங்கப்பு..

                                                             

* திருப்பரங்குன்றத்துல மாம்பழ சின்னம் கிடைக்கலைங்கிற கோபத்துல பா.ம.க. வேட்பாளர் செல்வம்தான்  போட்டியிடாமல் வாபஸ் வாங்கினாருனு பார்த்தா, அதுக்குப் பிறகு  தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன்,  'கந்தசாமி'  படத்து விக்ரம் கெட்டப் போட்டு வந்த ஒருத்தரை  வெச்சு பிரசாரம் பண்ணியிருக்கிறாரு. இதெல்லாம் யதார்த்தமா  நடந்ததுதானா, இல்லை முருகனோட அறுபடை வீடுங்கிறதால  இதெல்லாம் நடக்குதா?

                                                                                                                     

* மிழ்நாட்டுல இடைத்தேர்தல், ஆளுங்கட்சிக்கு சாதகமா நடக்கிறதுனு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றவர் மு.க.ஸ்டாலின்.  அப்படிச் சொல்றதோட நிறுத்தினா பரவாயில்லை. ஆனா, இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு 89 ஆக இருக்கும் தி.மு.க-வின் எம்.எல்.ஏ  எண்ணிக்கை 92 ஆக கண்டிப்பாக உயரும் மக்களேனு பேட்டி கொடுக்கிறார். தெரியாமத்தான் கேட்கிறேன். ஆளுங்கட்சிக்கு சாதகமா  தேர்தல் நடந்தா தி.மு.க. எப்படி சார் ஜெயிக்கும்?

          

*ந்திய சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த எப்போதும் பாலிவுட் நடிகர்களை வெச்சே பண்ணுகிற இன்கிரடிபிள்  இண்டியா  விளம்பரத்தை இந்தத் தடவை பிரதமர் மோடியை வெச்சே(!) பண்ணப்போறாங்களாம். விளம்பரம்  நடிக்கிறதெல்லாம் ஓகே. அந்த  விளம்பரத்தையாவது இங்கே எடுப்பீங்களா இல்லை வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப்  போயி எடுப்பீங்களா? இல்ல, சும்மா ஒரு டவுட்தான்!

                                                                                                                

* விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நம்பி முன்மொழிந்தது என்னோட தப்புனு வைகோ சொல்றாரு. வைகோ ஒவ்வொரு    நாளும் ஒவ்வொரு விதமா பேசுகிற ஆளு அவரைலாம் நம்ப வேண்டாம்னு பிரேமலதா  சொல்லிருக்காங்க. வைகோ விஜயகாந்தை    நம்பினது தப்பா, வைகோவை விஜயகாந்த் நம்பினது தப்பா, இல்லை இவங்க ரெண்டு பேரையும் மக்கள் நம்பினதுதான் தப்பானு  இப்போவரைக்கும் தெரியலை சாமீஈஈஈ....

                                      
                                                                                                                                                                                                     

* ள்ளூர்ல ஒரு நிலைப்பாடு வெளியூர்ல ஒரு நிலைப்பாடுனு இந்தியன் டெஸ்ட் கிரிக்கெட் டீம் மாதிரியே இந்தக்  கட்சிக்காரங்களும்  பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. புதுச்சேரியில் அ.தி.மு.க-வுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு, புதிய  தமிழகம் காங்கிரஸுக்கு ஆதரவு, பா.ஜ.க,  அ.தி.மு.க-வுக்கு ஆதரவு, விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸுக்கு  ஆதரவுனு யார் யார் யாருக்கு ஆதரவுங்கிறதைப் புரிஞ்சிக்கிறதுக்கே  ஒருநாள் ஆகும்போல. அந்த அளவுக்கு லிஸ்ட் பெருசா இருக்கு. இதுல கொடுமை என்னன்னா இங்கே போட்டியிடாத பல பேருகூட அங்கே  நாராயணசாமிக்கு மரியாதை நிமித்தமான(!)ஆதரவு னு தெரிவிச்சுருக்காங்க. முதல்வரான நாராயணசாமி அங்கே போட்டியிடலைனா  இவ்வளவு மரியாதை நிமித்தமான ஆதரவை காங்கிரஸுக்கு சொல்லிருப்பாங்களாங்கிறதுதான் பில்லியன் டாலர், மில்லியன் யூரோ  டவுட்டு!

-ஜெ.வி.பிரவீன்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ