Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்ல  நோட்டு  -  கள்ள நோட்டு:  என்ன வித்தியாசம்..? இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமா?

ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒன்றிரண்டு கள்ள நோட்டுகளை விவரம் தெரியாமல் வைத்து இருப்பது என்பது பெரும் குற்றமில்லை; ஆனால், கள்ள நோட்டை வைத்துக்கொண்டு மற்றவரை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அதை விநியோகிக்கக்கூடாது. அப்படி விநியோகித்தால், அது சட்டப்படி தவறு. அந்த வாடிக்கையாளரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு.

சரி நல்ல  நோட்டுக்கும்,  கள்ள நோட்டுக்கும் என்ன வித்தியாசம்..? நல்ல தாளுக்கும் கள்ள தாளுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவது எப்படி?

பாதுகாப்பு இழை!

ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும், பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது, இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1,000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்தில், ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றம் அளிக்கும். ரூ.1,000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் 1,000, RBI என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.

மறைந்திருக்கும் மதிப்பெண் !

மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20, 50, 100, 500, 1,000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன் மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லை எனில், இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாக தெரியும்.

நுண்ணிய எழுத்துகள்!

மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும், செங்குத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. லென்ஸ் மூலம் இதனைத் தெளிவாகக் காணலாம். 

அடையாளக் குறியீடு!

ரூ.10 தாளைத் தவிர, மற்றவற்றில் நீர்க் குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20-ல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50-ல் சதுரம், ரூ.100-ல் முக்கோணம், ரூ.500-ல் வட்டம், ரூ.1,000-ல் சாய்சதுரம்). இது பார்வை அற்றவர்கள் அந்தத் தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.

செதுக்குருவம்!

மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.

ஒளிரும் தன்மை!

தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.

பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை!

ரூ.500 மற்றும் ரூ.1,000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும்       ரூ.1,000 -ன் மேல் லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில், பார்வைத் தோற்றத்தில் மாறுபடும். அதாவது, வண்ணம் மாறித் தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்களை கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால், இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும், ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீலமாகவும் தோன்றும்.

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இல்லாத தாள்கள் கள்ள தாள்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. இவை துல்லியமாகப் பரிசோதிக்கப் படுகின்றன.

சோ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ