Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500, 1000 ரூபாய் இல்லையென்றால் என்ன ஆகிவிட போகிறது?

கடைசியாக, வாட்ஸ்அப் ஒரு உண்மைச்செய்தியை சொல்லிவிட்டது. ஆம், 2000  ரூபாய் நோட்டுகள் வரப்போவது உண்மை. 500, 1000 ரூபாய் தாள்கள் இனி ஓய்வெடுக்கலாம். விஷயம் உண்மைதான் என்றாலும் இதனால் என்ன என்ன சாதக, பாதகங்கள் வரப்போகின்றன என்பதுதான் முக்கியம். பொருளாதார நிபுணர்களின் கணிப்புகள் வெளிவரும் முன் ஒரு க்விக் பார்வை.

இது உலக அளவில் புதிய முயற்சி எல்லாம் இல்லை. அர்ஜெண்டினா, துருக்கி, ஜெர்மனி என பல நாடுகள் ஏற்கெனவே முயன்ற ஒன்றுதான். அது நல்ல பலனையும் கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு, சிஸ்டத்தில் கொஞ்சம் குழப்பும் நிலவும் நாடு இதுபோன்ற முயற்சியில் இறங்கியதில்லை. 

இதுவரை எத்தனை கோடி ரூபாய் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விட்டிருக்கிறதென்ற கணக்கு ரிசர்வ் வங்கியிடம் ஃப்ரெஷாக இருக்கும். அந்தக் கணக்கில் திரும்பி வரும் நோட்டுகள் குறைந்தால், அதை ரிசர்வ் வங்கியால் எளிதில் கண்டறிய முடியும். அதிக வேல்யூ கொண்ட நோட்டுகள் அதிகம் கண்ணிலே படாது.

இந்த முடிவு நிச்சயம் கறுப்புப் பணத்துக்கு முடிவு கட்டும். ஒருவர் கையில் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரால் பான் கார்டு இல்லாமல், வருமான வழிகளை காட்டாமல் வங்கியில் அதை மாற்ற முடியாது. அதனால், அந்த கறுப்புப் பணம் புழக்கத்திலே இல்லாமல் போகும். பணப்புழக்கத்தில் தேக்க நிலை ஏற்படும். இதனால், விலைவாசி குறையலாம்

500

வங்கிகளே இல்லாத கிராமங்களே நம் நாட்டில் அதிகம். அங்கு நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் கேஷ் மூலமாகவே நடக்கும். இனி, அவர்கள் பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால் செல்லாது. எனவே அதை மாற்ற வங்கிகளுக்கு வந்தே ஆக வேண்டும். நடக்கும் எல்லாம் பரிவர்த்தனைகளும் அரசின் பார்வைக்கு வந்தே ஆக வேண்டும்.

தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அனைவரும் கறுப்புப் பணத்தையே நம்பி இருக்கிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்றால், அவர்கள் அரசியலில் இருந்தே ஒதுங்க வேண்டி வரும். பணம் இருப்பவர்கள் ஜெயிக்கலாம் என்ற நிலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த முடிவு அமையலாம்.

கேஷ் டிரான்ஸாக்‌ஷன்ஸ் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே கொண்ட நாடாக மாறும். நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் கணக்கில் வரும்போது அரசின் வருமானம் கூடும். லஞ்சம் மற்றும் முறையற்ற, விஷயங்களை தவிர்க்க முடியும்.பெரும்பாலும் நல்ல விஷயங்களே இதில் இருப்பதாகத் தெரிந்தாலும் நிஜமான பாதிப்புகளை ஓரிரு மாதங்கள் கழித்தே சொல்ல முடியும். சின்னச் சின்ன சிரமங்கள் இருக்கும். நாட்டின் நலனுக்காக மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமரும் அறிவித்திருப்பதை கவனிக்க வேண்டும்.

-  கார்க்கிபவா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ