Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் முடிவும், டிரம்பின் வெற்றிமுகமும்.. பங்குச் சந்தையின் சரிவும்! 

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என்று மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் தெரிகிறது. இதனால் இன்று (9.11.16) பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து வருகிறது. நிஃப்டி 8,000 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளது.

பங்கு


இந்த நிலையில் இன்று பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்திக்க முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் அருள்ராஜனிடம் பேசினோம். 
 
முக்கிய காரணங்கள்! 
 
1. அமெரிக்க தேர்தலில் டிரம்ப், ஹிலரியைவிட கூடுதலான இடங்களை வென்று இருக்கிறார். இதை சந்தை உடனடி பாதகமாக பார்க்கிறது. இதனால் சந்தை சரிவடைந்து காணப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தை கடும் சரிவடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் சந்தை 5% முதல் 8% வரை சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை அதிபர் தேர்தலில் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற்றால் மார்க்கெட் மீண்டு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. டிரம்ப் எடுக்கும் முடிவுகள் தற்போதைய அமெரிக்க கொள்கைகளில் இருந்து மாறுபட வாய்ப்பிருக்கிறது. அது உலக அளவில் பல நாடுகளை பாதிக்கலாம். இந்தியாவை பொருத்தமட்டில், ஐடி மற்றும் ஃபார்மா துறைகள் பெருமளவு பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் இந்த துறைசார்ந்த நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி அடையும்போது வாங்குதல் நடக்கிறது.
 
2. உள்நாட்டு நிலவரமும் சந்தையை பாதிக்கிறது.   தற்போது கறுப்புப் பணத்தை கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகளை செல்லாததாக அறிவித்துள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்துக்கு நல்லதாக இருந்தாலும், குறிப்பிட்ட துறைசார்ந்த நிறுவனங்கள் உடனடி பாதிப்பு அடைய வாய்பிருக்கிறது. இது குறுகிய கால சந்தையை பாதிக்கும். அதாவது இதன் தாக்கம் வரும் ஒரு ஆண்டுக்குள் இருக்கும். 


3. இதில் குறிப்பாக கேஷ் பரிவர்த்தனை அதிகமுள்ள தங்கம் சார்ந்த வியாபாரங்கள் பாதிக்கப்படலாம். எனவே தங்க நகைவியாபாரம் செய்யும் நிறுவனங்களின் விலை 7 - 10%  வீழ்ந்து கொண்டு இருக்கிறது.

4. அமெரிக்க அதிபர் தேர்தலால் ஐடி நிறுவனங்கள் கடும் பாதிப்படைந்துள்ளது. இதன் தாக்கத்தினால் இந்திய சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 
 
4. இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் பங்குகளைப் பெருமளவில் வாங்கி வந்தாலும், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இன்று பங்குச் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் தாக்கத்தினாலும் சந்தை பலத்த அடி வாங்கியுள்ளது. 

இப்போதைக்கு இதுதான் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகிறது. நிஃப்டியைப் பொறுத்தவரை 8,000 புள்ளிகள் வரை சரிவடைந்து காணப்பட்டது. இப்போது மீண்டும் எழுச்சியடைந்து வர்த்தகமாகி வருகிறது. இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில் சந்தையின் லோயர் லெவலில் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை" என்றார்.
 

- சோ.கார்த்திகேயன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close