Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னங்க மோடி சார் உங்க திட்டம்!!? - சில்லறை சிக்கலில் பப்ளிக்

 

ரூபாய்

டிவேலு ஒரு படத்தில் வத்தலகுண்டிலிருந்து சென்னை வந்து இறங்கியதும். ஒரு போலீஸ்காரர் "உங்க ஊரையும் சென்னையவும் பிரிச்சுட்டாங்க, உங்க ஊர் பணமெல்லாம் இங்கே செல்லாதே இங்கே டாலர் தான செல்லும். சரி பரவால்ல கொடு எதுக்கும் இருக்கட்டும்" என பீதி கிளப்புவார். அப்படி இருக்கிறது எல்லோருடைய மனநிலையும்.

500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது , இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏடிஎம் மையங்கள் செயல்படாது போன்ற அதிரடி அறிவிப்புகளால் கலங்கி போய் இருக்கிறார்கள் மக்கள். திரும்பும் இடமெல்லாம் இந்தப் பேச்சாகத்தான் இருக்கிறது. பெட்ரோல் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என சொல்லப்பட்டாலும் எங்குமே வாங்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை நிலையாக இருக்கிறது. மருந்து கடைகளில் கூட குறிப்பிட்ட தொகைக்கு மருந்து வாங்கினால் தான் சில்லறை கொடுப்போம் என நிபந்தனை போடுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் என காட்டிக்கொள்ளாமல் பேருந்து நிலையம், மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்களிடம் பேசினோம்..,  

ஞ்சாவூரிலிருந்து சென்னை வந்த முதியவர் ஒருவர்,  "காலையில தான் சார் வந்தேன், இங்க வந்தா பணம் செல்லாதுன்னு சொல்றாங்க, சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருக்கு. கொஞ்சம் சில்லறை கொடுங்க சார்" என நடத்துநர் ஒருவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். நடத்துநரிடம் கேட்டால் "காலையிலேயே எங்க ஆபிஸருங்க 500 ரூபாய் நோட்டை வாங்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க சார். நாங்க வாங்கி எப்படி கலெக்சன் ஒப்படைக்கறது." என்கிறார்.

பெட்ரோல் நிலையங்களில் தான் நோட்டு வாங்கிக்கொள்ளப்படும் என சொல்கிறார்களே என அங்கும் சென்றோம்.., எல்லா பெட்ரோல் பங்குகளிலும் உள்ளே நுழையும் பொழுதே "500, 1000 ரூபாய் நோட்டு வைச்சுருந்தா அப்படியே திரும்பிடுங்க என்கிறார்கள். அப்படி இல்லனா 500 ரூபாய்க்கு வேணா பெட்ரோல் போடுறோம். சில்லரையெல்லாம் இல்லை. நிறைய பேரு சில்லறை வாங்குறதுக்காகவே பெட்ரோல் போட வராங்க. எவ்வளவு பேருக்கு தான் நாங்களும் சில்லறை கொடுக்க முடியும்" என்கிறார்கள்.

பிச்சைக்காரர்களிடம் 500 ரூபாய்க்கு சில்லறை இருக்குமான்னே எனக் கேட்டு பார்த்தோம். "இப்போதான் சார் வந்தோம் சுத்தமா இல்லை. ஆமா அதென்ன காலைலேர்ந்து நிறைய பெரு சில்லறை கேக்குறாங்க" என கேட்டு விஷயம் தெரிந்ததும் "ஓ அதான் விஷயமா?" எனச் சிரிக்கிறார்கள். 

ரூபாய்

 

டிசம்பர் 30-ம் தேதிக்கு முன்னர் வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ பணத்தை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். தி.நகர் தலைமை தபால் நிலையத்துக்கு சென்றிருந்தோம்.., வாசலிலேயே இன்று வேலை நாள் இல்லை என தகவல் பலகையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். சில்லரைக்காகவும், ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் நிறைய பேர் குவிந்திருந்தார்கள்.

அதில் ஒரு வயதான மூதாட்டி, "கையில சுத்தமா காசில்லங்க, இங்க மாத்திக்கலாம்னு வந்தோம். இங்கயும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற எந்த கடைகள்ல கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேங்குறாங்க. என்ன சார் இது மோடி சர்க்கார் இப்படி பண்றாங்க. நம்ம கஷ்டம் என்னனு அவங்களுக்கு புரியாதா? இதோ இங்க இருந்து தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு போகணும். அங்க போறதுக்கு கூட கையில சில்லறை இல்ல. அவ்ளோ தூரம் நடந்தா போக முடியும். கொஞ்சமாச்சும் நம்ம பிரச்னைய பத்தி யோசிக்க வேணாமா. இப்படி திடீர் திடீர்னு சட்டம் போட்டா என்ன சார் பண்றது?" என்கிறார்.

- பிரம்மா, க.பாலாஜி, 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close