Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடிவேலு சொல்லும் வெற்றி ரகசியங்கள்! #Morningmotivation #VadiveluRocks

Plan... Execute... Result... not succeed.? Try Again. ரசம் வைக்கறதில் ஆரம்பிச்சு ராக்கெட் செலுத்தறது வரை பல விஷயங்களும் இதன்படி நடத்திடலாம். நம்பலையா? இதையே நம்ம வைகைப்புயல் வடிவேலு வசனங்களை வெச்சு எளிமையா விளக்கறேன் வாங்க...

ப்ளான் பண்ணிப் பண்ணனும்

எப்போதும், எந்த விஷயத்தையும் ப்ளான் பண்ணிக்கனும். எந்த கண்ணாடியப் பார்த்தாலும் தலை வாரிக்க சீப்பு வெச்சிருக்கற மாதிரி, நைட் போற ட்ரீட்டுக்கு காலைல இருந்து வயித்த செட் பண்ணி வைக்கற மாதிரி, யாரெல்லாம் டேக் பண்ணா லைக் வரும்னு யோசிக்கற மாதிரி.... இப்படி எல்லாத்துக்குமே ப்ளானிங் ரொம்ப முக்கியம். பேங்க் போயி பணம் டெபாசிட் பண்ணனும்னு தெரியும், அதுக்கு ஃபார்ம் ஃபில் பண்ணனும்னு தெரியும். ஃபில் பண்ண பேனா வேணும்னு கூட தெரியும்... ஆனா, எத்தனை பேர் எடுத்துட்டுப் போறோம்...? இப்படி சின்னதும் பெருசுமா எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்.

ஏரியாவுக்கு வாடா

ப்ளானிங் எந்த அளவு முக்கியமோ, கூலா ஒரு விஷயத்தை ஹேண்டில் பண்றதும் முக்கியம். எந்தப் பிரச்னை வந்தா எப்படி சமாளிக்கணும்னு யோசிக்கலாம். சாத்தியமே இல்லாத அல்லது ரொம்ப அரிதா 'வந்தாலும் வரலாம்' பிரச்னையை கற்பனை பண்ணி பயப்படாதீங்க. மாடியில துணி காயப்போடறதுக்கு முன்னாலயே மழை வந்தா என்ன பண்றதுனு யோசிக்கற மாதிரி அது. அப்படியே எந்த பிரச்னை வந்தாலும் "ஏரியாவுக்கு வாடானு சொல்லி" சமாளிக்க உங்களால முடியும். ஏன்னா அடுத்த பத்திய படியுங்களேன்.

அப்ப நாங்கனாப்புள யாரு?

நீங்க ஒரு மாஸ், ஸ்பெஷல் பீஸ். எப்பவும் உங்க கெத்த யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க. அதுதான் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆனா, அதுக்காக எல்லாத்துக்கும் சண்டை போடணும்னு அர்த்தமில்ல. அப்பறம் நம்ம கெத்து என்னாவறது?

ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி

வாழ்க்கைல ரிஸ்க் எடுக்கலைனா குறிஞ்சிப் பூவுக்காக 12வருஷம் காத்திருக்கணும்ணு ஆர்யாவே சொல்லிருக்காரு. உலகத்தையே அழிக்கப் போற ரிஸ்க் எதையுமா எடுக்கவா போறோம்... இல்லையே. அந்த ரிஸ்க்தான் உங்களுடைய ஸ்ட்ரென்த் என்னென்னு உங்களுக்கே புரிய வைக்கும். இன்னும் எளிமையா சொன்னா, நீங்க விரும்பற பொண்ணுக்கிட்ட புரப்போஸ் பண்றது மாதிரி. இதை விட உலகத்தில பெரிய ரிஸ்க் இருக்குமா சொல்லுங்க...? ரிசல்ட் பாசிட்டிவோ, நெகட்டிவோ ஆனா பதில் தெரிஞ்சதனால ஒரு ஆறுதல்,  அப்புறம் நிறைய டைம் சேவ்.

த்ரிஷா இல்லனா திவ்யா

லைஃப் எப்பவும் எல்லாத்துக்கும் ஒரு ஆல்டர்நேட் வெச்சிருக்கும். நீங்க ரொம்ப நம்பி,  சரியா வரும்னு நினைச்ச விஷயம் சொதப்பினா எதுக்கு அவ்வளவு விரக்தி? அத்தனையும் உங்களுக்கான அனுபவமா மாறிடும். ப்ளான் ஏ சொதப்பினா ப்ளான் பி, அதுவும் சொதப்பினா ப்ளான் சி. அதுவும் சொதப்பினா கூட என்ன இப்போ? நமக்கு இஸட் வரை எழுத்து இருக்கு பாஸ். பெப்ஸி உமா,  ஷோ முடிவில் சொல்றதுதான், Keep trying keep on trying better luck next time.

நானும் ரவுடி தான்

இது செமயான மோட்டிவேஷன். நான் மேல சொன்ன எல்லாத்தையும் அழிச்சிடுங்க. "உங்களுக்கு உங்கள விட யாரு மோட்டிவேஷன் கொடுத்திட முடியும்?" எவ்வளோ சொன்னாலும் நீங்க நினைச்சாதான் அது மோட்டிவேஷன். இல்லனா, 'இங்கு போஸ்டர் ஒட்டாதீர்', 'வீடு வாடகைக்கு, ஒத்திக்கு விடப்படும்', 'புல் தரையில் நடக்காதீர்' மாதிரி வெறும் வாசகம்தான். லவ் ஃபெயிலியர் ஃப்ரெண்டுக்கு, ஆறுதல் தேவைப்படும் நபருக்கு, இன்னும் பல இத்யாதிகளுக்கு "வாழ்கைங்கறது"னு ஆரம்பிச்சு நீங்களே எத்தனை முறை அட்வைஸ் சொல்லியிருப்பீங்க... அதுவே உங்களுக்கு வந்தா முடியாதா? முடியும். ஏன்னா நீங்களும் ரவுடிதான் பாஸ்!

-பா. ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close