Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பவர் ரேஞ்சர்ஸ், டெக்ஸ்டர் இவங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?

90's  கிட்ஸ் ஒரு சில விஷயங்களை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அந்த வகையில் நாம் சின்ன வயதில் ரசித்து ருசித்த சில கார்ட்டூன்ஸ்!!!

Scooby Doo:

                               

ஸ்கூபி டூ என்று சொன்னவுடன் நினைவிற்கு வருவது அதில் வரும் 'கிரேட் டேன்' நாய் தான். நண்பர்களாக சேர்ந்து ஒரு பச்சை வண்டியில் பயணம் செய்து பல திகில் வாய்ந்த மர்ம சம்பவங்களை அனுபவிப்பார்கள். இந்த கார்ட்டூன் ஆனது 1969-ல் இருந்து இன்றுவரை வெவ்வேறு வெர்சனில் வருகிறது. ஹன்னா பார்பேரா ப்ரொடக்‌ஷனில் ஜோ ரூபி, கென் ஸ்பியர்சால் இந்த கார்ட்டூன் உருவாக்கப்பட்டது.

Popeye The Sailor Man:

                             

வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு பாப்பாய் தி செய்லர் மேன் பாம் பாம் என்று வரும் அவரை யாராலும் மறக்க முடியாது. ஆபத்து வரும்போது அவரிடம் இருக்கும் ஸ்பிநாச்சை எடுத்து சாப்பிட்டு எதிரிகளை துவம்சம் செய்வார். இந்த கார்ட்டூனின் கதாநாயகி ஆலிவை  ப்ளுடோ எனும் வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதுதான் கதை. இதற்கு பல்வேறு க்ரியேட்டர்ஸ் உள்ளனர். முதலில் E.C ஷேகர் என்பவர் இதை உருவாக்கினார்.

Tom And Jerry:

                                

இதைப் பார்க்காமல் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கே உரிய கார்ட்டூன் இது. அம்மாவிடம் அடம் பிடித்து இதை சிறு வயதில் பார்த்திருப்போம். ஜெர்ரி ஓட டாம் துரத்த ஜெம ஜாலியாக இருக்கும். இதில் வரும் டாமுடைய முதலாளி அம்மா முகத்தைக் கண்டவர் யாரும் இல்லை. 1940-ல் இதை வில்லியம் ஹன்னா, ஜோசப் பார்பேரா உருவாக்கினர்.

Power Rangers:

                              

ஸ்கூல் முடிந்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாய் ஓடிச்சென்று பார்க்கும் ஒரு நாடகம்தான் இது. பல கலர் ட்ரெஸ் அணிந்துகொண்டு தீய சக்திக்கு எதிராக போராடுபவர்கள். இது ஒரு படி மேலே சென்று பாதி மனிதன் பாதி அனிமாட்டேட் சீரியஸ் என வந்தது. இதில் எக்கச்சக்கமாக வெர்சன் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஃபேவரைட். முதல் வெர்சன்1993-ல் வந்தது.

Dexter's Laboratory:

                       

இதில் ஆரஞ்ச் கலர் மண்டையுடன் டாக்டர் போல ட்ரெஸ் பண்ணிக்கொண்டு ரகசிய லேப் ஒன்று வைத்து அதை அதனுடைய தங்கச்சி 'டீடீ'யிடம் இருந்து காப்பாற்றும் வில்லங்கமான கதைதான் இது. இதற்கு பல்வேறு இயக்குநர்கள் உள்ளனர். முதலில் இதை 1996-ல் கென்டி டார்டாவோஸ்கி இயக்கியுள்ளார்.

Pokémon:

இதைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது மஞ்சள் கலரில் கன்னத்தில் இரண்டு சிவப்பு புள்ளிகள் வைத்துக்கொண்டு பூனைக்குட்டி போல் இருக்கும் பிக்காச்சுதான். ஏரியா விட்டு ஏரியா சென்று சண்டையிடுவதுதான் கதைச் சுருக்கம். ஹீரோ ஒரு பந்தை எறிந்தவுடன் உள்ளே இருந்து வந்து சண்டையிடும். 1996-ல் சாட்டோஷி டஜிரியால் இயக்கினார்.

The Powerpuff Girls:

மூன்று பெண்கள் கொண்ட சூப்பர் ஹீரோயின்ஸ் கார்ட்டூன். இதில் மோசமான டெரர்ரான வில்லன் மோஜோ ஜோஜோ செய்யும் கெட்டதைத் தடுக்கும் மூன்று இளம் பெண்கள் தான் பவர் பப் கேர்ள்ஸ். குரங்கு மூஞ்சி போல தோற்றம் கொண்ட வில்லனைப் பறந்து பறந்து பந்தாடும் கதை. 1998-ல் கிரேக் மெக்ரேகன் இதை இயக்கியுள்ளார்.

Johnny Bravo:

கார்ட்டூன் ஹிஸ்டரிக்கே ஸ்டைலான ஸ்மார்டான ஹீரோதான் ஜானி பிராவோ. எப்பேர்பட்ட பெண்ணையும் தன் வசப்படுத்தி் திடகாத்திர உடலால் காதலிக்க வைத்து விடுவார். இதில் பல்வேறு சீசன்கள் உள்ளன. வான் பார்டிபல் இதை முதலில் இயக்கியுள்ளார். 1997-ல் வெளி வந்த கார்ட்டூன்.

Timon And Pumbaa:

இதைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் டைலாக் 'ஹ கூ ந ம டாடா'. அப்படியென்றால் கவலை ஏதும் இல்லை என்று அர்த்தம். டிமோன் என்ற காட்டுப் பூனையும் பூம்பா என்ற காட்டுப் பன்னியும் சேர்ந்து செய்யும் லூட்டிதான் இது. இரண்டு பேரும் மாறி மாறி சிக்கலில் மாட்டிக்கொள்ள ஒருவக்கொருவர் இருவரையும் காப்பாற்றிக் கொள்வர். 1994-ல் ஜோனாதன் ராபர்ட்சால் உருவாக்கப்பட்டது.

Courage The Cowardly Dog :

இந்த நாடகம் திகிலான ஒன்று. இப்போது இந்த கார்ட்டூனைப் பார்த்தால் சிரிப்புதான் வரும். ஏனென்றால் இந்த கார்ட்டூனானது குழந்தையின் நைட் மேராகும். இதில் வரும் கேரக்டர் தனது முதலாளிகளை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றும். 1999-ல் ஜான் R. டில் ஒரத் இதை இயக்கினார். 

- தார்மிக் லீ

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close