Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெஸ்பாவின் மெகா காஸ்ட்லி என்ட்ரி

பியாஜியோ நிறுவனம் வெஸ்பா 946 Emporio Armani என்ற ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 4 ஆயிரத்து 970. பியாஜியோ குழுமத்தின் 130-வது ஆண்டை முன்னிட்டு இந்த காஸ்ட்லி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வண்டி காஸ்ட்லி என்பதால் ஆர்டரின் அடிப்படையில் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது வரை இரண்டு பேர் இந்தியாவில் இந்த ஸ்கூட்டருக்கு ஆர்டர் செய்துள்ளனர். குறிப்பாக தற்போது இந்தியாவில் இது இரண்டாவது காஸ்ட்லி டூ வீலர் (அப்ரிலியா எஸ்.ஆர்.வி 850 ஏ.பி.எஸ்.க்கு அடுத்து) என்றும் கூறப்படுகிறது. நமது விருப்பத்திற்கேற்ப அட்ஜஸ் செய்து கொள்ளும் custom floating seat, எல்.இ.டி விளக்குகள், டபுள் டிஸ்க், 125 சி.சி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ