Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்ப்பரேட் உலகை கலக்க ஆறு வழிகள்! #MorningMotivation

கார்ப்பரேட்

கார்ப்பரேட் காம்பவுண்டுக்குள் வாழ்வதே ஒரு சவாலான விஷயம். அதை சமாளித்து அவரவர் வேலையில், கரியரில் அடுத்தடுத்த நிலைக்கு போக வேண்டுமென நினைப்பது சகஜம்தான். ஆனால், அதற்கு நம் வேலையை ஒழுங்காக செய்வது மட்டுமே போதாது. 'வேற வேற வேற" என இன்னும் சில ஸ்பெஷல்கள் வேண்டும். அந்த மாதிரி சில ஸ்பெஷல்களின் கேட்லாக்தான் இந்தப் பதிவு

1) என்ன அணிகிறீர்கள்?

     பல சமயம் நம் முகத்தை பார்க்கும் முன்னரே நாம் என்ன உடை அணிந்திருக்கிறோம் என்பதுதான் பிறர் கண்ணில் படும். ஃபார்மல் உடைகள் நீங்கள் வேலையில் கமிட் ஆன ஆசாமி என்பதை சொல்லாமல் சொல்லும். இதெல்லாம் மூட நம்பிக்கை என கார்ப்பரேட் பகுத்தறிவு பேசலாம் தான். ஆனால், பெரும்பாலான ஊழியர்களின் கணிப்பு இப்படித்தான் இருக்கும். கிரியேட்டிவ் ஆன வேலைகளில் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் ஃபார்மலில் செல்வதே சேஃப். ஒரு விதத்தில் அது தரும் கான்ஃபிடென்ஸும் நமக்கு தேவைதான். அதனால், நல்லா டிரெஸ் பண்ணுங்க. நாம என்ன பவர் ஸ்டாரா?

2) பொறுப்பை கையில் எடுங்கள்

    உங்கள் மேலதிகாரிகள் 3 பேரை தேர்வு செய்யுங்கள். அவர்கள் வரலாற்றை எப்படியாவது புரட்டி பாருங்கள். இப்போது அவர்கள் கைவசம் இருக்கும் அதிகாரங்களை யாரோ ஒருவர் தாம்பால தட்டில் வைத்து அவரிடம் தந்திருக்க மாட்டார். ஒரு சிக்கலில் அவர்களாக முன்வந்து காரியங்களை கச்சிதமாக முடித்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் வளர்ச்சி இருந்திருக்கும். எல்லா மேனேஜருக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக் தான் பாஸ். அதில் அவர்கள் செய்திருக்கும் ஒரு ஒற்றுமயான விஷயம் "பொறுப்பை கையில் எடுத்தது" ஆகத்தான் இருக்கும்

3) எதையும் தள்ளி வைக்காதீர்:

    சொன்னதை செய்பவர்களை விட, சொன்ன நேரத்தில் செய்தவர்கள் தான் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களைதான் நிறுவனமும், மேலதிகாரிகளும், கிளையண்டுகளும் விரும்புகிறார்கள். உங்கள் முதலாளி உங்களை சூப்பர் ஸ்டாராகதான் பார்க்கிறார். அதனால் நீங்க எப்படி வறீங்க, எதில் வறீங்க என்பதை எல்லாம் அவர் கவனிக்க மாட்டார். வர்ற வேண்டிய நேரத்தில் அவுட்புட்டோட வருகிறீர்களா என்றுதான் பார்ப்பார் மிஸ்டர்.சூப்பர்ஸ்டார்

4) நச் கம்யூனிகேஷன்:

உங்களுக்கு என்ன என்ன தெரியும் என்பதை உலகம் கணக்கிலே எடுத்துக் கொள்ளாது. உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என நீங்கள் சொல்கிறீர்களோ, அதை மட்டும்தான் எடுத்துக் கொள்ளும். இட்லி, தோசை, பூரி, பொங்கல் தொடங்கி வடைகறி வரைக்கும் உங்கள் மெனுவில் உள்ளதை தெளிவாக கம்யூனிகேட் செய்யும் திறமை வேண்டும். இல்லையேல், நாலு இட்லி என நிறுத்திக் கொள்வார்கள். பேச தெரிஞ்சவன் ஆள தயாராகிட்டான் என்பதை மறந்து விடாதீர்கள். கம்யூனிகேஷன் என்றதும் இங்கிலீஷ் தான என நினைத்தால் போச்சு. அது ஒரு கருவி மட்டும்தான்.

5) ஓவர் ஸ்மார்ட் உடம்புக்கு ஆகாது:

 அளவுக்கு மீறினால் ஆன்றாய்டும் டேஞ்சர்தான் ப்ரோ. வெடிச்சிடுதாம் சில சமயம். ஃபேஸ்புக் பாக்குறப்ப பாஸ் க்ராஸ் ஆனா விண்டோவ க்ளோஸ் பண்றதெல்லாம் ஸ்மமார்ட் ஆகாது சகோ. வேலையை சரியாக செய்வதும், அதை டிரான்ஸ்பரண்ட்டாக வைத்திருப்பதும் ஸ்மார்ட். அந்த லிமிட்க்குள்ள நிற்பதுதான் மிகப்பெரிய கலை. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், நேர்மையாக இருப்பதுதான் ஸ்மார்ட்

6) நோ சொல்ல தெரியுமா?

எல்லா அலுவலகங்களிலும் வேலைகளுக்கு பஞ்சம் இருக்காது. யாரிடமாவது அந்த வேலைகளை கொடுக்க வேண்டும் என்பது யாரோ ஒருவரின் வேலையாக இருக்கும். உங்களுக்கு அந்த வேலைகள் வந்தால், யோசியுங்க்ள். நீங்கள் அந்த சிஸ்டத்தில் இருப்பதன் தேவை என்ன? உங்களிடம் கொடுக்கப்படும் வேலை நீங்கள் செய்ய வேண்டியதா? உங்களாம் செய்ய முடியுமா? புராசஸ் படிதான் உங்களிடம் வருகிறதா என யோசியுங்கள். இல்லையெனில், அதை தவிருங்கள். பிச்சை எடுப்பதற்காக யாரும் யானையை வாங்குவதில்லை. உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து விடாதீர்கள். அதற்காக உங்கள் வேலையையே செய்யாமல் நோ சொன்னால், பின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல.

-கார்க்கிபவா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ