Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேங்க்ஸ் கிவிங் டே'விற்கு தரணி தரும் சிறப்பு விருந்து..! sponsored content

அறை நண்பர்களான ரேச்சலும் ஸ்ருதியும் வெவ்வேறான கலாசாரங்களில் இருந்து வந்தவர்கள். ரேச்சல் அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தில் பிறந்து தந்தையின் பணிக்காக குடும்பத்துடன் நார்த் கரோலீனாவுக்கு குடும்பத்துடன் குடியேறி சிறுவயது முதல் அங்கேயே படித்து வருபவள். ஸ்ருதி, தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்து இன்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா வந்தவள். நார்த் கரோலீனா ஸ்டேட் யுனிவர்சிடியில் சேர்ந்தபோது ரேச்சலுடனான நட்பு ஏற்பட்டது. இருவருக்கும் மிகவும் பிடித்தமான பொதுவான விஷயம் இந்திய உணவு. தேடித் தேடி ஒவ்வொரு இந்திய உணவகத்துக்கும் சென்று உண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு.

இன்னும் சில தினங்களில் “தேங்க்ஸ் கிவிங் டே” எனப்படும் அறுவடைத் திருநாள் வர இருக்கிறது. அந்த தினத்தில் எந்த புதிய உணவகத்தில் உண்ணலாம் என்று எண்ணியபடியே கூகிளில் தேடிக் கொண்டிருந்தனர். “ஆமாம்மா, நம்ம ஊர் பொங்கல் மாதிரி இங்கே, தேங்க்ஸ் கிவிங். வீடுகளில் இருக்கிறவங்க வான்கோழி சமைத்துக் கொண்டாடுவாங்க. சரி நான் அப்புறம் பேசறேன்” என்று தாயிடம் கூறியபடி போனை அணைத்துவிட்டு ரேச்சலிடம் இந்த முறை ப்ளாக் ஃப்ரைடே அன்று எந்த உணவகத்துக்குச் செல்லலாம் என்று விவாதித்தாள். அவர்கள் யுனிவர்சிடிக்கு அருகே 19-ம் தேதி திறக்கப்படவிருக்கும் புதிய தரணி உணவகத்தைப் பற்றி ரேச்சலிடம் கூறினாள் ஸ்ருதி.

தரணி உணவகம் அவர்கள் கல்லூரியில் இருந்து சில மணித்துளிகள் தொலைவில் இருப்பதாகவும், தென்னிந்திய சுவை நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் கூறினாள். அந்த உணவகத்தின் சிறப்பு உணவுகளான நவாபி கோஃப்தா, பெசரட்டு கோர்மா, பூண்டு குழம்பு, வஞ்சிரம் வேபுடு, கொடி இகுரு, எண்ணெய் கத்திரிக்காய் மற்றும் செட்டிநாடு உணவு வகைகளைப் பற்றியும் கூறினாள். பிறப்பால் அமெரிக்கனாக இருந்த போதும் காரமான தென்னிந்திய உணவு வகைகளை விரும்பி உண்ணும் ரேச்சல் இந்த உணவகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உற்சாகமானாள். தோழிகள் இருவரும் தேங்க்ஸ் கிவிங் தினத்தன்று பரிமாறவிருக்கும் “மெகா லஞ்ச்” பஃபேவுக்காக காத்திருக்கத் துவங்கினர்.

ஆல்டாமவுண்ட் உணவகக் குழுமம் ராலேவில் துவங்க இருக்கும் இரண்டாவது கிளை இது. சுமார் நூறு பேர் அமரக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த உணவகத்தைத் திறப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தரணியின் நார்த் கரோலீனா கிளையின் பங்கு மேலாளர் சுரேஷ் கூறினார்.


இது குறித்து ஆல்டாமவுண்ட் உணவகக் குழுமத்தின் நிறுவனர் திரு.பாஸ்கர் ரெட்னம் பேசுகையில் “தரணியின் வளர்ச்சி மிகவும் பிரமாதமாக உள்ளது. நாங்கள் நியுயார்க்கில் லாதம், வர்ஜீனியா, மாசேசூசட்ஸ் மற்றும் டெக்சாஸில் புதிய கிளைகள் துவங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். உணவருந்த வரும் விருந்தினர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கிளையின் உள்கட்டமைப்பை அமைக்கிறோம், அதனால்தான் ஒவ்வொரு கிளை துவங்கவும் அதிக நேரமும், முயற்சியும் தேவைப்படுகிறது.” என்றார்.

இந்த விடுமுறை தினத்தை சிறப்பாகக் கொண்டாட தரணி இந்த “தேங்க்ஸ் கிவிங் டே” அன்று மாபெரும் “லஞ்ச் பஃபே” வழங்க உள்ளது. ஆல்டாமவுண்ட்டின் மற்ற நிறுவனங்கள் முறையே, தரணி, தரணி எக்ஸ்பிரஸ், மாவா ஹவுஸ் மற்றும் தரணி-கேலக்ஸி ஆகும்.

தரணி எக்ஸ்பிரஸ்:

3281 Avent Ferry Rd,
Suite 117,
Raleigh, NC - 27606
Inquiry: INFO@DHARANIUS.COM

தொடர்புக்கு:

Suresh. Ch
Ph: 919-821-7991
www.dharanius.com

எடிட்டர் சாய்ஸ்

MUST READ