Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹலோ..சம்பளம் வாங்காமல் நீங்கள் ஃபேஸ்புக்கிற்காக‌ வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா?

ஃபேஸ்புக்

வருஷம் முழுக்க சம்பளம் கிடையாது ஆனா இந்த ஆபீஸுக்காக நீ வேலை பாக்கணும்னு சொன்னா உங்க பதில் என்னவா இருக்கும், ஆனா நீங்க ஒரு கம்பெனிக்கு வருஷம் 365 நாளும் 24 மணி நேரமும் காசு வாங்காம வேலை பாத்துட்டு இருக்கீங்க. ஆமாம் ஃபேஸ்புக்காக தான் நீங்க வேலை பாக்குறீங்க. இதுக்கு உங்களுக்கு காசு தர முடியாதுனு சொல்லி இருக்கு சமீபத்திய ஃபேஸ்புக் அறிவிப்பு.

அட என்னப்பா, என் ப்ரோஃபைல் நா ஸ்டேட்டஸ் போடுறேன். இது எப்படி வேலையாகும்னு நீங்க கேட்கலாம். நீங்க போடுற ஸ்டேட்டஸ் ஆரம்பிச்சு, நீங்க படம் பாக்குறேன், பீச்ல இருக்கேன், அமெரிக்கா போறேன்னு போடுற எல்லாமே பிசினெஸ் தான். சமீபத்துல உங்களுக்கு ஃபேஸ்புக்ல இருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும். 

அதில் நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டர் பக்கத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள் . இதில் நீங்கள் தன்னார்வத்துடன் இணைந்துள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டராக தேர்ந்தெடுக்கப்படுவதால் நீங்கள் ஃபேஸ்புக்கின் ஊழியராகவோ, ஏஜென்ட்டாகவோ, கான்ட்ரிப்யூட்டரோ கிடையாது. இதற்காக உங்களுக்கு எந்த வெகுமதியும் அளிப்படமாட்டாது. 

உங்களது ஃப்ரோஃபைலில் தெரியும் லீடர் போர்டில் நீங்கள் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவீர்கள். இது நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தும் தரவரிசைப்படுத்தப்படும். தரவரிசைக்கான புள்ளிகள் நீங்கள் அளிக்கும் விவரத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்படும் என்கின்றனர். 

ஏன் இதனை செய்கிற‌து ஃபேஸ்புக்?

கிட்டத்தட்ட எல்லா தளங்களுக்கும் மாற்றாக அடியெடுத்து வைக்கும் ஃபேஸ்புக், பின் தங்கும் தளங்கள் என்பவை மேப்ஸ், சர்ச் இன்ஜின் போன்றவற்றில் தான். அதில் கூகுள் நிறுவனம் அசைக்கமுடியாத நிறுவனமாக உள்ளது. 

அதிலும் கால் பதிக்கும் நோக்கத்தில் தான் ஃபேஸ்புக் இந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. உதாரணத்துக்கு நீங்கள் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளதை பதிவிட்டிருந்தால் உங்கள் நண்பர் ஒருவர் அங்கு செல்லும்போது நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்கள் என்ற தகவல் அவருக்கு தெரியும், மேலும் ஒரு உணவகத்துக்கு நீங்கள் சென்று ரேட்டிங் அளித்துள்ளீர்கள் என்றால் உங்கள் நண்பர் அந்த உணவகத்துக்கு செல்லும்போது உங்கள் நண்பரால் மதிப்பிடப்பட்ட உணவகம் என்ற செய்தியும் அவருக்கு செல்லும். 

உலகில் டேட்டாக்களை கையாளும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஃபேஸ்புக்கும் ஒன்று, ஒருவரது தகவல்களை அவருக்கு அளிக்கும் போது அதனை ஏற்பவர் 100% நம்பிக்கையாக இருக்க வேண்டும் என நினைப்பதை விரும்புவார். அதேசமயம் பரிந்துரை செய்வது உங்கள் நண்பர் என்றால் நீங்கள் நம்புவீர்கள் என்பதை நன்கு அறிந்த ஃபேஸ்புக்கின் அதிரடி உத்திதான் இது.

இதன்படி பார்த்தால் நீங்கள் தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு அளிக்கிறீர்கள், அதனால் பல லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள், நீங்கள் ஸ்டேட்டஸ் போடுகிறீர்கள் அது பல லட்சம் பேருக்கு உதவும் டேட்டாவாக உள்ளது. இந்த வேலைகளை 24*365 செய்யும் நாம் இதற்காக எந்த சம்பளமும் வாங்காத பணியாளராக தன்னார்வத்துடன் இதனை செய்கிறோம்.

மார்க் உலகை இணைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் இதுவரை 2 பில்லியன் சம்பளம் வாங்காத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார் மார்க் . சூப்பர் பாஸ்!

 - ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ