Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களே தயாரிக்கும் ஆண்களுக்கான பைக்... டிசம்பரில் வருகிறது பஜாஜ் 400சிசி..!

பஜாஜ் 400சிசி பைக்

இந்தியாவின் பைக் மார்க்கெட்டில், பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, பஜாஜ் நிறுவனத்தின் பல்ஸர் பைக்கைப் போல அதிக ரசிகர்களை வேறு எந்த தயாரிப்பும் கவர்ந்ததில்லை. பல்ஸர் பைக்குகள் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது பஜாஜ். இந்த நிறுவனத்தின் புதிய 400சிசி பைக்கின் தயாரிப்பு பணிகள் அதிகாரபூர்வமாக நேற்று துவங்கிவிட்டன. இதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், பைக்கின் அசெம்பிளி லைனில் இருக்கும் அனைவரும் பெண்கள் என்பதுதான்! இதனை இணையத்தில் தற்போது வைரலாகப் பரவிவரும் படங்கள் உறுதிபடுத்துகின்றன.

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்தில், இந்த 400சிசி பைக்கை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெயரை இதுவரை பஜாஜ் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், CS400/VS400, Kratos, Dominar போன்ற பல பெயர்கள், பல்ஸர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு புதிய பிராண்டின் முதல் பைக்காக இது களமிறங்க இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான, விலை உயர்ந்த பைக்காக, இந்த 400சிசி பைக் பொசிஷன் செய்யப்பட உள்ளது. எனவே இதில் கேடிஎம் டியூக் 390 & RC 390 பைக்கில் இருக்கும் அதே லிக்விட் கூலிங், 4 வால்வு DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருக்கும் 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. 

ஆனால் பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தின் உதவியுடன், சுமார் 35bhp பவர் & 3kgm டார்க்கை வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜின் ரி-ட்யூன் செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பல்ஸர் CS400 என்ற பைக்கை பஜாஜ் காட்சிபடுத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த கான்செப்ட் பைக்கில் இருந்த LED ஹெட்லைட் - இண்டிகேட்டர் - டெயில் லைட், ஸ்பிளிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை தொடர்ந்தாலும், முன்பக்க USD ஃபோர்க்குக்குப் பதிலாக வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.

ஆனால் ஒற்றை இருக்கை, இருவர் வசதியாக உட்கார்ந்து செல்லும்படியான ஸ்பிளிட் சீட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இருபுறமும் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக் செட்-அப்பிற்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக அளிக்கப்படும் என்பது ப்ளஸ். பெனெல்லி TNT25, ஹோண்டா CBR250R, மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கப்போகும் இந்த பைக்கின் விலை, சுமார் 2 லட்சத்துக்குள் இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பல்ஸர் 200NS & கேடிஎம் டியுக் 200 பைக்குகளின் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எப்படியோ, அதே போல பஜாஜின் 400சிசி பைக் & டியூக் 390 இடையேவும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

தற்போது அடுத்த ஆண்டில் வரவிருக்கும் BS-IV மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தி வரும் பஜாஜ் நிறுவனம், அதில் அவென்ஜர் மற்றும் பல்ஸர் சிரீஸ் பைக்குகளை அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தும் என நம்பலாம். பஜாஜ் பைக்கிலே முதன்முறையாக, LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் மீட்டர்கள் இருப்பது இந்த 400சிசி பைக்கில்தான்! கடந்த 2001-ல் பல்ஸரின் வருகைக்குப் பின்பு, எப்படி பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டானதோ, அதே போல இந்த 400சிசி பைக்கும் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கப்போகிறது என நிச்சயமாகச் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளைக் கவரும்படியான RS400 பைக்கை வருங்காலத்தில் பஜாஜ் தயாரிக்கும் என நம்பலாம்.

 - ராகுல் சிவகுரு.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close