Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்ட்டிக்கில் அதிகரித்த வெப்பநிலை... உலகிற்கு புது எச்சரிக்கை! #ClimateChange

ஆர்ட்டிக்

காடுகளை அழித்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள், மரங்களை அழித்து சாலைகள்... என நாம் இயற்கையைச் சிதைக்கும் அளவு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையும் அவ்வப்போது, சுனாமி, கடல் சீற்றம், புயல் மழை... எனப்பல ரூபங்களில் நமக்கு, தான் சிதைபடுவதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பூமியை வெப்பப்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. இயற்கையின் சமீபத்திய சமிக்ஞை... ஆர்ட்டிக் பகுதியில் உயர்ந்திருக்கும் வெப்பநிலை. பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவப்பகுதியின் வெப்பநிலை, பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 20 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரித்திருக்கிறது. 

ஆர்ட்டிக் பகுதியில் தற்போதைய பருவம் குளிர் பருவம். வழக்கமாக, இக்காலங்களில் சூரியனே அபூர்வமாகத்தான் வெளிப்படும். அதனால், கடல் நீர் பனியாக உறைந்து போய் பனிப்பாறைகளாகக் காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆண்டு, வெப்ப நிலை அதிகரித்திருப்பதால், பனிப்பாறைகள் உருவாகவில்லை. 1981-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரையிலான சராசரி உறைநிலையை விட, கடந்த அக்டோபர் மாதத்தின் உறைநிலை 28.5 % குறைவாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, வழக்கமாக வெப்பநிலை குறையும். ஆனால், அதற்கு மாறாக இந்தமுறை அதிகரித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக வானிலை நிறுவனத்தின் பொதுச்செயலாளர் பெட்டேரி டலாஸ், "ஆர்ட்டிக் ரஷ்யா பகுதியின் வெப்பநிலையானது நீண்டகால சராசரி அளவை விட, 10.8° பாரன்ஹீட் முதல்  12.6° பாரன்ஹீட் அதிகமாக இருக்கிறது. மற்ற ஆர்ட்டிக் பகுதிகளான அலாஸ்கா, வடமேற்கு கனடா போன்ற இடங்களில் வெப்பநிலை சராசரி அளவை விட 5.4° பாரன்ஹீட் அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டும் இப்படித்தான் வெப்பநிலை அதிகரித்திருந்தது" என்கிறார்.

இதன் பாதிப்புகள் என்ன?

கடந்த ஆண்டின் இறுதியில் இதேபோல வெப்பநிலை அதிகரித்திருந்தாலும் திடீரென்று ஏற்பட்ட புயலின் காரணமாக வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இப்படி அதிகரித்துள்ள  வெப்பநிலையால், அப்பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்குத்தான் முதல் பாதிப்பு. குறிப்பாக, துருவக்கரடிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். கடல் நீர் உறையாமல் போனால், நிலப்பரப்பின் அளவு குறையும்.பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகும் பட்சத்தில் கடலின் ஓரங்களில் வாழும் தீவுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு, இடம்பெயர வேண்டிய சூழலும் உருவாகும். காலமும், காலநிலையும் இந்தமுறை கைகொடுக்காவிட்டால் காலநிலை மாற்றத்தின் மற்றுமொரு வடுவாக இது அமையும். அதனால்தான் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பலரும் இப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

பூமியில் உபயோகப்படுத்தப்படும் பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருட்களால் ஏற்படும் மாசுகளும், குறைந்து வரும் வனப்பரப்பும்தான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன. உலக வானிலை நிறுவனத்தின் கணக்குப்படி 2016-ம் ஆண்டுதான் உலகின் அதிக வெப்பமான வருடம். கடந்த 2015-ம் ஆண்டின் மே மாதம் முதல் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து 16 மாதங்கள், பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், புவியின் துருவங்களில் நடக்கும் இந்த மாற்றங்கள், விரைவில் நம் நகரங்களிலும் எதிரொலிக்கலாம்.

- ஞா.சுதாகர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close