Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜீத் தான் அ.தி.மு.கவோட அடுத்த வாரிசு- குறியீடு சொல்லுது பாஸ்!

அஜீத் தான் அ.தி.மு.க-வின் அடுத்த வாரிசுங்கிற விஷயத்தை யாரு ஆரம்பிச்சு வெச்சதுனு தெரியலை. ஆளாளுக்குக் குறியீடு கண்டுபிடிச்சு அட ஆமாப்புனு சொல்லிக்கிட்டு திரியறாங்க. நாமளும் ஒருவேளை இருக்குமோ?னு கொஞ்சம் குத்த வெச்சுக் கண்டுபிடிச்ச குறியீடுகள்தான் இதெல்லாம்...

அஜீத்

* தமிழ் எழுத்தின் முதல் எழுத்தும் அ. எங்க தலயோட முதல் எழுத்தும் அ. அதுனாலதான் எங்க தல யை தலையில இருந்து கால் வரைக்கும் பிடிக்கக் காரணம்னு தமிழ் எழுத்தின் முதல் எழுத்தே  தமிழ்நாட்டின் தலையெழுத்தேனு  சில தல ரசிகர்களே போஸ்டர் அடிச்சு  ஒட்டி அதை மாடு திங்கவிட்ட வரலாறெல்லாம் எடுத்து வெச்சுப் புரட்டிப் பார்த்தா, அ.தி.மு.க-வும் அ-லதான் ஆரம்பிக்குது. அம்மாங்கிறதும் அ-லதான் ஆரம்பிக்குது. அவ்வளவு ஏன் அஜீத் நடித்த முதல் தமிழ்ப்படமான அமராவதியே அ-ல தான் ஆரம்பிக்குது. அதனால அஜீத் அ.தி.மு.க-வுக்கு வர அட்டகாசமான, அமர்க்களமான, அசலான வாய்ப்பு இருக்கு.

* பத்திரிகையாளர்களை வாராவாரம் சந்திப்பேன்னு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா சொன்னதுதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கடைசி சந்திப்பாக இருக்கும்னு நினைக்கிறேன். அந்த அளவுக்கு  டிஸ்டர்ன்ஸ் மெயின்டெயின் பண்றாங்க. ஜெயலலிதாவுக்கெல்லாம் முன்னாடியே இதே பாணியை செவ்வெனே செஞ்சிட்டு இருக்கிறது வேற யாரு? இதே அஜீத்தான். இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?

* .தி.மு.க-வுக்கு எப்படி இரட்டை இலை சின்னம்னாலே தாறுமாறு தக்காளிச் சோறுனு தமிழ்நாட்டுல இருக்கோ அதே மாதிரி அஜீத்துக்கும் இரட்டை வேடத்துல நடிக்கிற பெரும்பாலான படங்கள் எல்லாமே அடிப்பொலி ஹிட்டாகும்ங்கிறது ரசிகர்களின் நம்பிக்கை. கூட்டிக் கழிச்சுப் பாருங்க சரியா வரலைனா கழிச்சுக் கூட்டிப் பாருங்க.
                                                                                                                        
                                          

* வெளியில் பார்க்கும்போதெல்லாம் வாலன்டியரா வணக்கம் வெச்சுக்கிட்டாலும்  அ.தி.மு.க-வுக்கு எப்படி தி.மு.க-வின் தளபதிதான் நிழல் எதிரியாக இருக்கிறாரோ அதே மாதிரிதான் என்னதான் ஆஃப் ஸ்க்ரீன்ல ஹாய் தளபதி, ஹவ் ஆர் யூ தல னு விஜய்யும் அஜீத்தும் மாறி மாறிக் கூப்பிட்டுகிட்டு செவத்தோரமா நின்னு செல்ஃபி எடுத்துப் போட்டாலும் ஆன் ஸ்க்ரீன்ல தலக்கு எதிரி என்னவோ தளபதிதான். ஆக அ.தி.மு.க-வுக்கும் அஜீத்துக்கும் தளபதிதான் எதிரி. இதுல இருந்து என்னா தெரியுது ஃப்ரெண்ட்ஸ்னு கேள்வி வேற கேட்கணுமா பிரண்ட்ஸ்?

* ற்ற நடிகர்களுக்கெல்லாம் ஊருக்குள் வைக்கிற ஃபிளெக்ஸ் பேனர்களையும் அஜீத்துக்கு வைக்கிற பேனர்களையும் தங்கப்ப தக்கம் மாதிரி பக்கத்தில் பக்கத்தில் சேர்த்து வெச்சுப் பார்த்தா, மேக்ஸிமம் அஜீத்துக்கு வேஷ்டிதான் கட்டிவிட்டுருப்பாங்க. இதெல்லாம் வேற எதுக்கான குறியீடுனு நினைச்சீங்க. எல்லாமே அரசியலுக்கு வர்றதுக்கான ஆரூடம்தான் பாஸு!

* ட! அவ்வளவு ஏங்க? அஜீத் அரசியல்வாதியாக நடிச்ச ஒரே படம்னா அது 'ஜி' தான் ஜி. அந்த ஜி படத்தை காபிரைட் வாங்கி வெச்சு வெச்சு வெச்சுப் போட்டுக்கிட்டு இருக்கிறது எந்த டி.வி.னு  யாராச்சும் யோசிச்சுப் பார்த்தீங்களா ஜி.  அது ஜெயா டி.வி-தான் ஜி. எத்தனையோ டி.விகள் இருக்க அந்தப் படத்தை கரெக்டா அவங்க வெச்சிருக்காங்கனா என்ன அர்த்தம் ஜி? அதான் அர்த்தம் ஜி!

ஹ்ம்ம்.. இதுக்கு மேலேயும் இன்னும் துப்பறிஞ்சு சொல்லலாம்தான். ஆனா இதையும் ஒரு குரூப் உண்மைனு நம்பி அஜீத் ஃபேன்ஸாக இருந்தால் இதை ஷேர் செய்யுங்கள், அ.தி.மு.க. ஃபேன்ஸாக இருந்தால் இதை ஷேர் செய்யுங்கள்னு கிளம்புவாங்களேங்கிறதை நினைக்கும்போதுதான்....

- ஜெ.வி.பிரவீன்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ