Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வச்சு செய்வீங்களா சூர்யா? - டவுட்ஸ் ஆப் தி வீக் !

வாரவாரம் என்ட்ரி ஆகி  எகிடுதகிடான டவுட்டுகளை எல்லாம் கேட்டு வைக்கிறது வழக்கம். இதெல்லாம் இந்த வாரத்துக்கான டவுட்டுகள். பார்த்து யாராச்சும் க்ளியர் பண்ணிட்டுப் போங்கப்பு....

டவுட்ஸ் ஆஃப் தி வீக்

* சும்மாவே 'சிங்கம் 3' டீஸரைப் பார்த்துட்டு சுட்டி டி.வி பார்க்கிற சுட்டீஸ்ல இருந்து நொட்டை சொல்றதையே வேலையா வெச்சிருக்கிற நெட்டிசன்ஸ் வரைக்கும் கலாய்ச்சுத் தள்ளிட்டு இருந்தாங்க. இது போதாதுனு இப்போ 'சிங்கம் 3' பாடல் டீஸர் ஒண்ணு விட்டிருக்காங்க. பாட்டு என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனா 'ஓ சோனே சோனே'னு  ஆரம்பிக்கிற அந்தப் பாட்டோட நடுவுல 'வெச்சு செய்வேனே நான் ரொம்ப யூனிக்' னு  சூர்யா பாட்டாவே வேற பாடுறாரு. இதுதான் எதுக்கான குறிடீடுனு தெரியலை. ஒருவேளை அப்படி இருக்குமோ?

* ஷ்டப்பட்டு ஒரு படத்தை  எடுத்து அதை சென்சாருக்கு அனுப்பினா, அசால்ட்டா சர்டிஃபிகேட்டை மாத்திப் போடுறாங்க. எங்களுக்கு  அரசின் வரிவிலக்கு கிடைக்கக் கூடாதுங்கிற ஒரே நோக்கத்துலதான் இப்படி எல்லாம் பண்ணுறாங்கனு கன்னாபின்னா குற்றச்சாட்டை  வெச்சு கோடம்பாக்கத்தையே கதறவிட்டிருக்கு 'கன்னாபின்னா' படக்குழு. இதைப் பார்க்கும்போதுதான் இன்னொரு விஷயம்  ஞாபகத்துக்கு வந்துபோகுது. சமீபத்துல வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு இங்கே 'யூ' சர்பிகேட் கொடுத்துருக்காங்க. ஆனா இதே படத்துக்கு தெலுங்குல யூ/ஏ கொடுத்துருக்காங்களாம். ஏன் இப்படி பண்றாங்க?

டவுட்ஸ் ஆஃப் தி வீக்

* ன் எதுக்குனே தெரியலை. எங்கே பாத்தாலும் ஒரே கையெழுத்துப் பிரச்னையாதான் இருக்கு. முதலில் இடைத்தேர்தலுக்கான  அ.தி.மு.க. ஏ ஃபார்ம்ல கையெழுத்து இருந்துச்சு; பி ஃபார்ம்ல இல்லைனு புகார் வந்துச்சு. அடுத்ததாக, ஆறு மாசத்துக்கு முன்னாடியே அச்சடிக்கப்பட்டதாக  சொல்ற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுல அப்போ கவர்னர் பதவியில் இருந்த ரகுராம்ராஜனோட கையெழுத்துதானே  ஆக்சுவலா இருக்கணும். இப்போ இருக்குற உர்ஜித் படேல் கையெழுத்து ஏன் இருக்குனு அரசல் புரசலா ஆரம்பிச்சாங்க. இப்போ  என்னடான்னா சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாமலே பட்டமளிப்பு விழா வைக்கிறாங்களேனு கடும்  கண்டனம் தெரிவிச்சிருக்காரு அன்புமணி ராமதாஸ். அன்புமணின்னதும்தான் இன்னொரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகுது. ஒருவேளை முதல் நாள் முதல் கையெழுத்துனு சொல்லி இந்த வருஷத்தை ஆரம்பிச்சு வெச்சதுதான் இதுக்கெல்லாம் காரணமாக இருக்குமோ?

 * ஊருக்குள்ள இருந்த ஏ.டி.எம். மெசின்கள் எல்லாம் ஆயுத பூஜைக்கு அலம்பிவிட்டது மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்கு. கல்யாணத்துக்குப்  பணம் எடுக்க முடியாது போலயே பேசாம கல்யாணத்தையே தள்ளி வெச்சிடலாமானுகூட பல பேர் யோசிச்சிட்டு இருக்கிற  இந்த    நிலையில வட மாநிலத்துல ஒரு மாப்பிள்ளையும், பொண்ணும் கையில ஸ்வைப் மெசினோட உட்கார்ந்து போஸ் கொடுக்கிற  போட்டோவை ஹர்பஜன் சிங் ட்விட்டர்ல ஷேர் பண்ண செம வைரல் ஆகிருச்சு. இந்த ரெண்டு விஷயத்தையும் ஒண்ணா வெச்சு  பார்க்கும்போதுதான் ஒரு விஷயம் மைண்ட்ல தோணுச்சு. அந்தத் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியாங்கிற திட்டங்கள்லாம்  இதுதானோ?

டவுட்ஸ் ஆஃப் தி வீக்

* பிரதமரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், 'இதுவரை எந்த நாட்டிலாவது வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாத சூழல்  ஏற்பட்டுள்ளதா, இதுதான் பதுக்கல் பணத்தை ஒழிக்கும் வழியா'னு  கறுப்புப்பண ஒழிப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துல  கேள்விகேட்ருக்காரு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கேள்விலாம் சரிதான். ஆனால் பொருளாதார நிபுணராக இருந்து, ரிசர்வ் பேங்க்  கவர்னராக இருந்து, நிதி அமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைமையில்  பத்து வருஷமாகப் பிரதமரா  இருந்து கறுப்புப்பண ஒழிப்புல என்ன நடவடிக்கை எடுத்தாருங்கிறதுதான் சத்தியமா தெரியலை மக்களே!
 

- ஜெ.வி.பிரவீன்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ