Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது பைக்குகளின் விளம்பர ரேஸ்! #VintageCommercials

பைக்

இந்திய வாகன சந்தையில், இரு சக்கர வாகனங்களின் பங்கு அளப்பரியது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா 2 வீலர்ஸ் ஆகிய இருபெரும் பைக் தயாரிப்பாளர்களின் மாதாந்திர விற்பனையைக் கூட்டினால், 11 லட்சத்தைத் தாண்டுவதே இதனை உணர்த்திவிடுகிறது. எனவே இதற்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய தொலைக்காட்சி விளம்பரங்களில், சிறந்த ஐந்து தற்போது உங்கள் பார்வைக்கு...!

 

பஜாஜ் பல்ஸர் 220: 

 

 

இளைஞர்களின் பல்ஸை எகிற வைத்த பல்ஸர் 220  விளம்பரத்தில், பைக் ஸ்டண்ட்டில்  நன்கு பயிற்சி பெற்ற குழுவினர், பல்ஸர் 220 ல் நிகழ்த்தும் த்ரில்லிங்கான கண்ணைக் கவரும் சாகசங்களே மூலக்கரு. இதன் வாயிலாக, பல்ஸர் ஒரு சாதாரண கம்யூட்டர் பைக் அல்ல, ''இவன் வேற மாதிரி'' என்பதை நச்சென புரியவைத்தது. தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன் படம் முழுதும், கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே பல்ஸர் பைக் வந்ததே, இதன் அழியா புகழுக்குச் சாட்சி!

 

டிவிஎஸ் அப்பாச்சி 180: 

 

 

மிக அற்புதமாக படமாக்கப்பட்ட இந்த விளம்பரம், ஒரு சிறுவன் ஆர்வமிகுதியில் சைக்கிள் ஓட்டுவதில் தொடங்கி, பைக்கை முதன்முறையாக பைக் ஓட்ட ஆரம்பித்து, இறுதியாக பைக் ரேஸிங்கில் பங்குபெறும் இளைஞன் என ஒரு ஆணின் பரிணாம வளர்ச்சியை உள்ளது உள்ளபடி காட்டியது. ''சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?'' என வடிவேலு கேட்பதுபோல, முதன்முறையாக சைக்கிள்/பைக் ஓட்டும்போது கீழே விழுவது, அடிபடுவது ஆகியவையும் இதில் சொல்லப்பட்டதுதான் ஸ்பெஷல். எனவே உண்மையான பைக் ஆர்வலர்கள், தோல்விகளால் அவ்வுளவு சீக்கிரம் துவண்டுவிட மாட்டார்கள் என இளைஞர்களை இந்த விளம்பரம் ஊக்கப்படுத்தியது. சுருக்கமாகச் சொல்வதென்றால், பைக் விளம்பரங்களில் பிரேமம் வகையறா இதுதான்! 

 

ஹீரோ ஹோண்டா கரிஸ்மா: 

 

 

இது முதல் தலைமுறை கரிஸ்மா விளம்பரம். இதில் பைக்கின் வேகம், ஸ்போர்ட்டி தன்மை ஆகியவை காட்சிபடுத்தப்பட்டது. ''க்ரிஷ்'' படப் புகழ் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த இந்த விளம்பரத்தில், கரிஸ்மாவின் ஆக்ஸிலரேஷனுடன் போட்டி போட முடியாமல், ஜெட் விமானமே தோற்றுப் போகிறது எனத் தெலுங்குப் படப் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.

 

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ட்வின் ஸ்பார்க்: 

 

 

சுவாரஸ்யமான விளம்பரங்களில் இது ஒன்று. இதில் ஒரு தாய், தனது மகன் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதற்காக, டாக்டர்கள் தொப்புள் கொடியை வெட்ட வரும்போது அதனை மறுக்கிறாள். பின்பு நாளடைவில் அந்த பையன் வளர்ந்து ஸ்கூல், விளையாட்டு மைதானம், கழிப்பிடம், வீடு என எங்கிருந்தாலும் அவனது தாய் உடன் இருக்கிறாள். ஒருநாள் தாயுடன் வெளியே செல்லும்போது, ஷோருமில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கைப் பார்க்கிறான். அதை அவன் வாங்கிய பிறகுதான் ட்விஸ்ட்டே! தாயைத் தனியே தவிக்கவிட்டு, அவன் பைக்கில் பயணம் மேற்கொள்வதுடன் விளம்பரம் அழகாக முடியும்.

பஜாஜ் பல்ஸர் 200: 

 

 

அதிக ஜன நடமாட்டத்துடன், டிராஃபிக் நெரிசலால் தவிக்கும் ஒரு சாலையில், இரு இளைஞர்கள் பஜாஜ் பல்ஸர் 200 பைக்கில் வந்து நிற்பதுடன் விளம்பரம் தொடங்கும். அங்கிருக்கும் கூச்சல் குழப்பத்தைப் பார்த்துவிட்டு, வழக்கத்திற்கு மாறான பாதையில் பயணித்து, தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வது அட்டகாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். உயரமான கட்டிடங்கள் மீது, வீடுகளின் உள்ளே புகுந்து என அவர்கள் வெரைட்டியாக புரியும் பைக் சாகசங்கள் தான் கான்செப்ட். பல்ஸர் 220 விளம்பரத்தைப் போலவே, இதிலும் பைக் ஸ்டண்ட்டில் அனுபவம் வாய்ந்த இருவர் பங்கேற்று, தங்கள் மொத்த வித்தையையும் இறக்கியிருந்தனர். 

-ராகுல் சிவகுரு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close