Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகளைப் பார்த்து தானும் பாக்ஸிங் கற்றுக்கொண்ட அம்மா!

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ளது 'ஷாஹீன் பாக்ஸிங் கிளப்'. இங்கு அந்த அம்மா - பெண் ஜோடி எதிரெதிரே நின்று சண்டைப்போட்டுக்கொண்ட காட்சி உலகளவில் பிரபலமாக... பாக்ஸிங் புன்னகை தருகிறார்கள் தாயும் மகளும்!

மகள் ரசியா பானுவுக்கு வயது 19. சென்ற வருடம் குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானபோது, இறுதி ஊர்வலத்தில் அவருக்காகத் திரண்ட ரசிகர்களைப் பார்த்த ரசியாவுக்கு, தானும் குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்று ஆசை வந்தது. அதை அவர் தன் தாய் ஹலீமா அப்துல் அஜிஸிடம் சொன்னபோது, அவர் தயங்கினார். கணவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன, மகளின் ஸ்கூல் ஃபீஸ் கூட  கட்டமுடியாத ஏழ்மை. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானில் ஒரு பெண் குத்துச்சண்டைக் கற்பது என்பது, கட்டுப்பாடுகளை மீறுவதாகும் என்பதுடன், அதனால் தன் மகளின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்... இப்படி அந்தத் தாயின் தயத்துக்குப் பின் இருந்த காரணங்கள் பல. இருந்தாலும், மகளின் விருப்பத்துக்குச் சம்மதித்தார் ஹலீமா. 'பாகிஸ்தானில் குத்துச்சண்டைக் கற்கும் முதல் பெண்' என்ற பெருமையுடன் பாக்ஸிங் கிளப்புக்குச் செல்ல ஆரம்பித்தார் ரசியா.

பாக்ஸிங்

குறைவான நாட்களிலேயே பாக்ஸிங் விளையாட்டின்  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் ரசியா. தன் மகளின் பாய்ச்சலைக் கண்டு, ஹலீமாவுக்கும் பாக்ஸிங் கற்க ஆசை வந்தது. தனக்கு 35 வயது ஆன போதிலும், ஆர்வத்துடன் பாக்ஸிங் கிளப்பில் சேர்ந்து மகளுடன் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். ஹலீமா போலவே, ரசியாவின் தைரியத்தைக் கண்டு பாக்ஸிங் கிளப்பில் 20 பெண்கள் சேர, வகுப்புகள் ஜோராக நடந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான், அந்த பாக்ஸிங் கிளப்பில், மாணவர்கள் தாங்கள் கற்ற திறமையை வெளிப்படுத்த ஒரு பாக்ஸிங் போட்டி நடத்தப்பட்டது. அதன் பல சுற்றுகளில் ஒரு சுற்றில், எதிர்பாராத விதமாக ரசியாவும் ஹலீமாவும் மோத நேரிட, பாக்ஸிங் மேடையில் அம்மாவும், பொண்ணும் எதிரெதிரே நின்று சண்டையிட்ட காட்சி பார்ப்போரை பரவசப்படுத்தியுள்ளது.

''ஆண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால் பெண்கள் வீட்டு வாசலை தாண்டினாலே வீடு திரும்பும்வரை வீட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்காது. அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை  வெளியே அனுப்பத் தயங்குகிறார்கள். என் மகளின் வாழ்வு தைரியமும் தன்னம்பிக்கையும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்றுதான் அவளை பாக்ஸிங் வகுப்புக்கு அனுப்பினேன். இப்போது நாங்கள் இருவருமே பாக்சர்ஸ்'' என்கிறார் ஹலீமா.

பள்ளி ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரியும் ரசியா பானு, ''வேலை முடிந்ததும் மாலை நேரக் கல்லூரில் படிப்பு, கல்லூரி முடிந்ததும் பாக்ஸிங் பயிற்சி என்று பரபரப்பாகச் செல்கிறது வாழ்க்கை. உள்ளூர்வாசிகள் சிலர் பெண்கள் பாக்ஸிங் கற்பது பிடிக்காமல் எங்கள்  பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பாக்ஸிங் கிளப்பையே மூடவேண்டும் என்றெல்லாம் மிரட்டினர். அதற்கெல்லாம் எங்கள் பயிற்சியாளர் கான்பரானி அரசவில்லை. அவர் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும்கூட இங்கு பாக்ஸிங் பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் ரசியா.

பாக்ஸிங் பயிற்சியாளராக வேண்டும் என்பது ஹலீமாவின் ஆசை. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பது ரசியாவின் துடிப்பு. இந்த அம்மா - பெண் ஜோடி, இப்போது பாகிஸ்தான் பெண்களிடம் தன்னம்பிக்கை விதைத்து வருகிறது!

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ