Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”மீமுக்காக தேமுதிக ஆட்கள் மிரட்டினாங்க” - மீம் பாய்ஸின் கலாட்டா சந்திப்பு!

மீம்

இவர்கள் உருவாக்கிய ஜாலி கேலி மீம்ஸ் ஆல்பம் இங்கே

டூட். இது மீம்ஸ் வேர்ல்ட். விஜயகாந்த் மேடையில பேசிட்டு கீழே இறங்குறதுக்குள்ளே, கபாலி டீசர் வெளியான அடுத்த நிமிஷத்துல, இந்தியா கிரிக்கெட் மேட்ச் ஜெயிச்ச அந்த  நொடியிலனு டக்கு டக்குனு மீம்ஸ் கிரியேட் செய்து சோஷியல் மீடியாவில் வைரல் ஆக்குவதுதான் இன்றைய இளைஞர்களின் லேட்டஸ்ட் ஹாபி. இணையத்தில் அதிகம் ஹிட் அடிக்கும் மீம்ஸ் பேஜ் அட்மின்களின் அட்ராசிட்டி மீட்டிங்தான்ஜி இது. 

சென்னை மட்டும் இல்லாமல் தமிழகத்தையே மீம்ஸ் செஞ்சு கலாய்க்கும் 'சென்னை மீம்ஸ்' பேஜ் அட்மின்கள் ஸ்ரீகணேஷ், ஜெயகாந்தன். "பாஸ். எங்க மீம்ஸ் எல்லாரும் சூப்பர்னு சொல்லுறாங்க. நீங்க சொல்லுங்க எங்க பேஜ் நல்லா இருக்கா?" என ஃபீட்பேக் கேட்கிறார் ஸ்ரீகணேஷ். 

”யார் பாஸ் நீங்களாம்? எங்க இருந்து வறீங்க?”

" எங்க டீம்ல மொத்தம் 10 பேர் இருக்கோம். காலேஜ் ஸ்டூன்ட்ஸ்ல தொடங்கி எல்லாருமே வேற வேற வேலைகளில் இருப்பவங்க. இந்த பேஜ்ஜை 2014-ல ஸ்டார்ட் பண்ணது எங்க ப்ரெண்ட் கெளதமும், பரத்தும்தான். அப்பதான் இங்க 'மீம்ஸ்' ரசிக்க ஆரம்பிச்ச டைம். நாங்க ஃபேஸ்புக்ல சுத்திட்டு இறக்கும்போது இந்த மீம்ஸ் எல்லாம் செம ஜாலியாக இருக்கேனு... நாங்களும் மீம்ஸ் பண்ணிக்கொடுத்தோம். எங்க ஆர்வத்தை பார்த்துட்டு எங்களையும் பேஜ் அட்மின் ஆகிட்டாங்க. அப்புறம் தினமும் மீம்ஸ் போட்டு பழகி, இப்போ மீம்ஸ்களாகத்தான் யோசிக்கவே தோணுது." என எமோஜி சிரிப்பு சிரிக்கிறார் ஸ்ரீகணேஷ். 

"மீம்ஸ் கிரியேட் பண்ணதும் போஸ்ட் செய்ய மாட்டோம். எங்க வாட்ஸ்அப் குரூப்ல போட்டு எல்லாரும் அப்ரூவ் கொடுத்தால் தான் போடுவோம். நிறைய கேர்ள்ஸ் உங்க கூட ப்ரெண்டாக இருக்கணும்னு நம்பர் கேட்பாங்க.மனசுக்குள்ள நம்பர் கொடுத்திடலாமானு ஆசை இருந்தாலும் எங்க டீம் ரூல்ஸ்படி கொடுக்கக் கூடாது என்பதால் கனத்த மனத்தோட தவிர்த்துடுவோம். யாரும் எங்களுடைய பர்சனலாக பேஜ் பயன்படுத்தக்கூடாதுன்னு பல ரூல்ஸ் வைச்சு இருக்கோம் ஜி." நம்பர் தர முடியாத சோகத்துடன் சொல்கிறார் ஜெயகாந்தன். 

”மீம்ஸ்னால மிரட்டல் எதாவது வந்திருக்கா ப்ரோ?”

"ஒரு தடவை விஜயகாந்த் மீம்ஸ் போட தே.மு.தி.க மெம்பர்ஸ் எல்லாரும் ஒன்று சேர்ந்து 'வாங்கடா... வாங்கடா'னு இன்பாக்ஸ் மெசேஜ்ல மிரட்டினாங்க.எங்க பேஜ்ஜை என்ன காரணம்னு சொல்லாமலே ஏப்ரல் 16-ம் தேதியில இருந்து மே-16 தேதி வரைக்கும் பிளாக் பண்ணிட்டாங்க. இத்தனைக்கும் நாங்க யாருக்குமே சப்போர்ட் கிடையாது. எங்களுக்கு அந்த ஒரு மாசம் கை உடைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. இன்னோரு பேஜ்ஜை உடனே ஸ்டார்ட் பண்ணினோம். ஒரு மாசத்துலயே 1 லட்சம் லைக் வாங்கினோம்.”

"சென்னை மழை வெள்ளத்துல பல நூறுபேருக்கு ஹெல்ப் செஞ்சதில் ரொம்ப சந்தோஷம். ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் தொடங்கி, திருப்பதியில காணாமல் போன பாட்டி வரைக்கும் கண்டுபிடுச்சு கொடுத்திருக்கோம். இப்படி எங்களால் முடிஞ்ச உதவிகளை இந்த மீம்ஸ்களால் செய்ய முடியுதுன்னா அதை விட வேற என்னங்க வேணும். மக்களை என்டர்டெய்னும் பண்ணுறோம், உதவியும் செய்யறோம். டூ இன் ஒன்.  எங்களுக்கு 'சென்னை மீம்ஸ்' பேஜ் கொடுத்தது மார்க் ஸூக்கர்பெர்க் மூலமா கடவுள் கொடுத்த கிப்ட் தான்." என்கிறார் எனர்ஜியாக. 

"எங்க குரூப்ல நாலு பேரும் லயோலா காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கறோம். முதலில் எங்க கேங் லீடர் ஆட்ரியன் பேசுவார்." என கலாய் இன்ட்ரோ கொடுக்கிறார் தீபன் ராஜ்.  

"லயோலாவுல யூனியன் எலக்‌ஷன் செம அட்ராசிட்டியாக இருந்துச்சு.அப்ப 'லயோலா காலேஜ் பேர்'லயே ஒரு பேஜ் உருவாக்கி மீம்ஸ் போட்டேன். பத்தாயிரம் மாணவர்கள் இந்த கேம்பஸில் இருக்கிறதால உடனே லைக் பண்ணி ஷேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப எங்க காலேஜ் தாண்டி எல்லா காலேஜ் பத்தியும் மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டோம். பல ஆயிரம் லைக்ஸ் தாண்டி பேஜ் எங்கயோ போய்ட்டு இருக்கு." என அட்ரியன் நிறுத்த தொடர்கிறார் இன்னோரு அட்மின் தீபன்.

"நான் ஒருநாள் ஃபேன் மேட் மீம்ஸ் கிரியேட் பண்ணி பேஜுக்கு அனுப்பினேன். என் பேர்ல  கிரெடிட்ஸ் கொடுத்து மீம்வந்திருந்தது. உடனே எங்க இருக்கீங்கன்னு ஜாலி சாட் பண்ண... கிளைமேக்ஸ்ல அட, நம்ம காலேஜ் தானானு உடனே டீம்ல ஜாயின்ட் பண்ணியாச்சு. நாங்க மீம் கிரியேட் பண்ணுறது எல்லாமே எங்க ஸ்மார்ட் போனில் தான்.  ஒரு மீம்கிரியேட் பண்ண ஒரு நிமிஷத்துல இருந்து அதிகட்சம் 20 நிமிசம் வரைக்கும் ஆகும் ஜி" என புல்ஸ்டாப் வைக்க தொடர்கிறார் பரத்.  

“எங்க இருந்து ஐடியாஸ் பிடிக்கறீங்க?”

"ஐடியாஸ் எப்படி வரும்னே தெரியாது. சில நேரம் தூங்கும்போது எல்லாம் ஐடியாஸ் வரும்... தூக்கத்துல எழுந்திருச்சு உடனே மீம் போட்டுடுவேன். சும்மா இருக்குற நேரத்துல எல்லாம் பிரபலங்களோட வித்தியாசமான எக்ஸ்பிரசன்ல ஸ்கிரீன் ஷாட் எடுப்பதுதான் எங்க வேலையே. ஏதாவது ஒரு சமயத்துல அது மீமாக பயன்படும்.  எங்களுக்கு பேஜ் வியூஸ் ரொம்ப முக்கியம். எங்களுடைய ஆடியன்ஸ் 18 வயசுல இருந்து 24 வயசு வரைக்கும் தான். நாங்களும் அந்த வயசு என்பதால், மீம் ஹிட் அடிப்பது ரொம்ப சுலபம்.

எங்க காலேஜ்ல இருந்த நிறைய சீனியர்ஸ் கூட நிறைய பேர் சப்போர்ட். அதுனால டெய்லியும் ரெண்டு மூணு மீம்ஸ் ஆவது போட்டுவோம்.  அதுவும் லீவுன்னா எல்லாருமே மீம்ஸ் போட்டுட்டே இருப்போம். சில ஹிட் அடிக்கும். சிலது அதிகம் ஷேர் ஆகும். சில நேரம் லைக்ஸ் கூட ரொம்ப கம்மியாக வரும். அதுக்கு எல்லாம் கவலைப் படமாட்டோம்.  இதுவரைக்கும் யார் இந்த பேஜ்க்கு அட்மின்னு காலேஜ்ல யாருக்கும் தெரியாது. இப்ப விகடன் மூலமா தான் தெரியப்போகுது." என்கிறார் பரத்.

"கபாலி டீசர் வந்த அடுத்த அஞ்சாவது நிமிஷம் ரஜினி சொல்லும் டயலாக்கை 'லயோலா' ஒப்பிட்டு வைச்சு மீம்ஸ் போட்டோம். 'இப்பதானடா டீசரே வந்தது. அதுக்குள்ள போட்டுடீங்களா?'னு கலாய்ச்சாங்க. மீம்ஸ் போட்டுகிட்டே இருக்கனால படிப்புல மக்கு பசங்கனு நினைச்சுடாதீங்க ஜி. எங்களுக்கு மீம் பண்ணுறது ஒரு ஹாபி. மத்தபடி நாங்க எல்லாரும் காலேஜ்ல குட் மார்க் வாங்கும் குட் பாய்ஸ் தான்" என  மொபைலில் விநாடி பொழுதில் இந்தப் பேட்டிக்கும் மீம்கிரியேட் பண்ணுகிறார் ஜோஜி என்ற இன்னோரு அட்மின்.

கலக்குங்க பாய்ஸ்.    

இவர்கள் உருவாக்கிய ஜாலி கேலி மீம்ஸ் ஆல்பம் இங்கே

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள் : கே. ராஜசேகரன். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close