Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்பவே இப்படி... அப்போ சம்பளம் போட்டதுக்கு அப்புறம்? - பயந்து வருதே!

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு 24 மணி நேர ஏ.டி.எம்-களின் வாசல்களில் 24 மணி நேரமும் வரிசை நிற்குது. இதெல்லாம் சும்மா! சம்பளத் தேதிக்கு அப்புறம்தான் மெயின் பிக்சரே இருக்கு என ஆளாளுக்கு குண்டை தூக்கிப் போடுகிறாங்க. ஒருவேளை இதே நிலைமை நீடிச்சதுன்னா என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தா...

ரூபாய்

* பார்பர் ஷாப்ல கொடுக்க சில்லறை இல்லாம, 'நோ ஷேவ் நவம்பர்' பாய்ஸ் எல்லாம் இன்னும் கொஞ்சநாளைக்குத் தாடி வளர்த்துக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். முகத்துல தாடி இருந்ததுக்குப் பதிலா... இனி தாடிக்கு நடுவுல முகம் கொஞ்சம் லைட்டா எட்டிப்பார்க்கும்.

* ஏற்கெனவே சில்லறைத் தட்டுப்பாடால வியாபாரம் 'சைஸ் ஜீரோ' இலியானா இடுப்பு மாதிரி ஆகிப்போச்சு. இதே நிலைமை நீடிச்சா வருசப்பிறப்பு வந்தா கொடுக்கிற காலண்டர், டைரியைக்கூட சில்லறைக்காசா கொடுக்கிறவங்களுக்கு முதல் மரியாதை செஞ்சு கொடுப்பாங்க போல! 

* அங்கங்கே வேலை செஞ்சுக்கிட்டுருக்கிற சில ஏ.டி.எம்-கள்லேயும் துண்டைப் போட்டுப் போட்டு விடிய விடிய வெறித்தனமா பணம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அப்புறம் தாம்பரத்துல ஆரம்பிக்கிற வரிசை செங்கல்பட்டு தாண்டிப்போய்... கடைசியில் சொந்த ஊர் வரைக்குமே போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

* இத்தனை நாளா 'சில்றை இல்லப்பா' என சாதாரணமாக சொல்லிக் கடந்த பிச்சைக்காரர்கள் 2,000 ரூபாய்க்கு சில்லறை கொடுக்க நம்மகிட்ட கமிஷன் வாங்குவாங்க. சொல்ல முடியாது, ஒரே பாட்டுல பெரிய கோடீஸ்வரனாகி கார்ல வந்துகூட இறங்கலாம்.

ரூபாய்

* இன்னும் கொஞ்ச நாளைக்குப் பழையபடி பண்டமாற்று முறையில் பக்கத்து வீட்ல இருந்து மிளகாய்த்தூளைக் கொடுத்துட்டு, அதுக்குப் பதிலா காப்பிப்பொடி வாங்க வேண்டி வரலாம். அதனால பக்கத்து வீட்டோட நட்புறவா இருக்கிறது ரொம்ப அவசியம்.

* வாடகையை வாங்க வேற வழி தெரியாம இதுவரை ஒரு யூனிட்டுக்கு எக்குத்தப்பா கரன்ட் பில் வாங்கிக்கிட்டு இருந்த ஹவுஸ் ஓனருங்க, மொத்தமா அதைத் தள்ளுபடி பண்ணலாம். பொதுவாகவே வாடகையை சரியா தராத நாங்க இப்போ மட்டும் தந்துருவோமா என்ன?

* கடன் வாங்கிட்டுப் பல காரணங்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிட்டுருந்த பயபுள்ளைக கொஞ்சம் அப்டேட் ஆகி, 'மச்சி ஏ.டி.எம்-ல பணம் வரலைடா', '2,000 ரூபாய்க்கு சில்லறை கிடைக்கலடா'னு புதுசு புதுசா காரணங்கள அடுக்கி நம்மளைக் கடுப்பேத்துவாங்க.

* சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறை இல்லாமல் அவர்களுக்கு வியாபாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தால் இந்த நிலைமை சரியாக வாய்ப்புகள் அதிகமெனத் தெரிவிக்கிறார்கள். பந்தியில் உட்கார்ந்து பாயசத்துக்காகக் காத்திருப்பதுபோல புதிய 500 ரூபாய் நோட்டுகள் வரும்வரை காத்திருப்போம்!

- கருப்பு

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ