Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த விஷயங்களுக்கு எல்லாம் ஆப் இருந்தா நல்லா இருக்கும்ல!

நம்ம முன்னோர்கள் காலத்துப் பணமான பழைய ஐநூறையும், ஆயிரத்தையும் தடை பண்ணிட்டதால ஆளாளுக்கு `பாயசம் எங்கடா'னு கேட்கிற ரேஞ்சுக்கு  `பணம் எங்கடா'னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம பர்ஸ்லயும் பணம் இல்லை, ஏ.டி.எம்-லயும் பணம் இல்லைனு பேங்குக்குப் போனா அங்கேயும் பணம் இல்லைனுதான் சொல்றாங்க. யார்கிட்ட தான் பாஸூ பணம்லாம் இருக்குனு கேட்டா `நீங்க pay டி.எம் யூஸ் பண்ணலாமே ஃப்ரெண்ட்ஸ்`னு ஈசியா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. காசு இல்லைனா pay டி.எம் ஆப் யூஸ் பண்ண சொல்ற  நம்ம நாட்டுல இன்னும் எதுக்கெல்லாம் ஆண்ட்ராய்டை நம்பியே வாழச் சொல்வாங்க?

ஆப்

* இந்த கேஷ்லெஸ் நாடு மாதிரியே சாப்பாடு லெஸ் நாட்டையும் உருவாக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். இனி யாருமே சாப்பிட வேணாம் சும்மா கூகுள்ல சாப்பாடு போட்டோவை சர்ச் பண்ணி அதைப் பார்த்தே பசி ஆறிக்குங்க மக்களேனு சொல்லிடணும். சாப்பாடு செலவாவது மிச்சம் ஆகும்.

* இப்போலாம் அடிக்கடி ரெண்டு மாநிலங்களுக்கு இடையில தண்ணிக்கு சண்டைவந்து எல்லோரும் கஷ்டப்படுறாங்க. இனிமே தண்ணிப் பிரச்னையே வரக் கூடாது, யாருக்கும் தண்ணி தாகமே எடுக்கக் கூடாதுனா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. எல்லா மக்களுக்கும் வாட்டர் பாட்டில் கம்பெனிங்க அவங்க வாட்டர் பாட்டிலை pdf ஃபைலா அனுப்பிட்டா யார் தண்ணி கேட்பாங்க?

* இனிமே யாருமே காதலிக்கவே வேணாம் எல்லாரும் ஜாலியா கெளதம் மேனன் படத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா இருங்கனு சொல்லிடணும். கெளதம் படத்தைப் பார்க்கிறதுக்கு வசதியா ஹாட்ஸ்டார் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணித் தரணும். ஆமா எதுக்குக் காதலிக்கணும்? எதுக்குக் கையை அறுத்துக்கணும்?

* காதல்னா அடுத்து கல்யாணம்தானே பாஸ்! கல்யாணத்துக்குப் பையனோ, பொண்ணோ தேடுறதுக்குப் பதிலா மொபைல்லேயே பார்ட்னரை செலெக்ட் பண்ணிட்டு அதுலேயே கல்யாணம் பண்ணிட்டு அப்படியே டைவர்ஸ் தேவைப்பட்டா அதுலேயே வாங்கிக்கலாம்னு சொல்லிட்டா, கல்யாணச் செலவாவது குறையும். ஆப்புக்கு காதல் முதல் கல்யாணம் வரைனுகூட பேரு வைக்கலாம்.

* தமிழ்நாட்டுல எங்கே திரும்பினாலும் இன்ஜினீயர்ஸ்தான் இருக்காங்க. அதனால நாலு வருசம் காலேஜ் போய் இன்ஜினீயரிங் படிக்கிறதுக்குப் பதிலா வி.ஐ.பி-னு ஒரு ஆப் க்ரியேட் பண்ணி எல்லோரையும் அதுலேயே எக்சாம், அரியர் எல்லாத்தையும் எழுதச் சொல்லிட்டா ஹைவே ஃபுல்லா இன்ஜினீயரிங் காலேஜ் கட்டுறதாவது குறையும்ல.

* காலைல எழுந்திரிச்சதும் பால் பாக்கெட் வாங்க ஒரு டைம், காய்கறி வாங்க ஒரு டைம், கருவேப்பிலை வாங்க ஒரு டைம்னு மாத்தி மாத்தி மார்க்கெட்டுக்குப் போறதுக்கு பதிலா எல்லாருக்கும் ஒரு ஆப்பை இன்ஸ்டால் பண்ணிட்டு அப்படியே வீட்டுக்கும் டோர் டெலிவரி பண்ணச் சொல்லிடணும். இந்த மாதிரி ஆப் ஏற்கெனவே இருந்துச்சுனா அதை எல்லாரும் கண்டிப்பா யூஸ் பண்ணணும்னு அவசரச் சட்டம் கொண்டுவரணும்.

* என்னதான் படிச்சிட்டுக் கஷ்டப்பட்டு ஆபீஸ்ல வேலைக்குப் போனாலும் இந்த டார்கெட் முடிக்கிறது என்னவோ எல்லோருக்கும் கஷ்டம்தான். அதனால வேலைக்குப் போகாம வீட்டுல இருந்து ஆப் மூலமாவே வேலை பார்த்துட்டு, அதுவே டார்கெட் முடிச்சுக் கொடுக்கிற மாதிரி ஒரு ஆப் க்ரியேட் பண்ணா புண்ணியமாப் போகும்.

* எப்படியும் இன்னும் கொஞ்சநாள்ல ஆக்சிஜன் இல்லாம எல்லாரும் `ஆக்சிஜனைத் தேடி ஒரு பயணம்னு` தெருத்தெருவா சுத்தப் போறாங்க. அதுக்கு முன்னாடி நாமளே ஏன் ஆக்சிஜனை ஆண்ட்ராய்ட் ஆப்பா மாத்தி பிளேஸ்டோர்ல விடக் கூடாது? 

இதெல்லாம் சின்னச் சின்ன ஐடியாதான். இதைவிடப் பெரிய திட்டம் வந்தாலும் வரும்.....வரும்!

- லோ.சியாம் சுந்தர்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close