Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த மாதத்தை  இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்? #MotivateYourSelf

உங்கள் காலில் முள் குத்தினால், நீங்கள் தான் அதைப் பிடிங்கி ஓரமாக போட வேண்டும். முள் மாதிரி தான் பிரச்னைகளும். நமக்கான தீர்வுகளை நாம் தானல்லவா தேட வேண்டும். எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கத் தான் செய்கின்றன, எதை யார் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்து தான் வெற்றி தேவதை கை மாறுகிறாள்.

இந்த வருடத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம், இது கடைசி மாதம். இந்த ஆண்டு, எதையெல்லாம் நாம் இனி ஒழுங்காக செய்ய வேண்டும் என நினைத்து செய்யாமல் விட்டோமோ அதையெல்லாம், இப்போதாவது செய்து முடித்து விட வேண்டும் ஏன் உறுதி கொள்ளுங்கள். இந்த  இறுதி மாதத்தின் தொடக்கநாளான இன்றே அதைச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

ஆங்கிலத்தில் மோட்டிவேஷனல் கோட்ஸ் மிக பிரபலம், உலகம்முழுவதும் இணையத்தில் கலக்கும் பத்து கோட்ஸ் உடன் இன்றைய நாளை ஆரம்பிப்போம்.

உங்கள்

 

உங்கள் இலக்கு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடைய நீங்கள்  தொடர்ந்து முயற்சி செய்து  கொண்டே இருக்க வேண்டும், எப்போது விடாமுயற்சியை கைவிடுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் தோற்கிறீர்கள். 

 

ஒரு  விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள், ஆனால் அது கைகூட வில்லை என்றால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அந்த விஷயத்தை விட்டு ஒதுங்கிவிடக்கூடாது. 

 

 பயம். அது  தான் மிக மோசமானது. எந்தச் சூழ்நிலையிலும் பயம் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.  யார் தடுத்தாலும், உங்களால் உங்கள் கனவை அடைய முடியும் என்பதில் தெளிவாக இருங்கள்.

 

எல்லோருக்கும் ஆசைகள்  இருக்கின்றன, ஆனால் பலர் தங்களது ஆசைகளை அடைய செயல்வடிவம் கொடுப்பதே இல்லை. ஆசைகளை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு தியாகியாக வாழ நினைப்பது முட்டாள்தனம். உங்களது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வாருங்கள், சிறிய வட்டத்துக்குள் சுருங்காமல்  தைரியமான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். "இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிறணும்பா" எனும் வாழ்க்கை வேண்டாம். 

தவறுகள் எல்லோருக்கும் சகஜம் தான், உங்களுக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், அதற்கு முதலில் தவறோ, சரியோ நண்பர்களிடம் ஆங்கிலம் பேசி பழக வேண்டும். சிலர் ஊக்குவிக்கலாம், சிலர் கேலி செய்யலாம். ஆனால் கவலைப்படக் கூடாது. நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றாலே முயற்சிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.  தவறை எப்படி திருத்துவது என்பது தான் பார்க்க வேண்டுமே தவிர, இந்த விஷயம் நமக்கு சரி வராதுப்பா என அப்படியே ஒதுக்கி விட வேண்டாம்.

 தினமும் காலை எழுந்து, கண்ணாடி முன்பு நில்லுங்கள், என்னால் முடியும் என பத்து தடவை சொல்லுங்கள். பாசிட்டிவ் வார்த்தைகள் நம்மை மாற்றும். ஒவ்வொரு நாளையும் புது உத்வேகத்துடன் ஆரம்பியுங்கள். எவ்வளவு தோல்விகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் மூர்க்கத் தனமாக போராடுங்கள்.

அஜய்க்கு சைக்கிள் ஓட்ட வேண்டும் என ஆசை உண்டு. விஜய்க்கும் தான்.  அஜய் சைக்கிள் எடுத்து ஓட்டினான், தெருவில் ஒரு குப்பைத்தொட்டி அருகே ஒரு கம்பத்தில் மோதி படுகாயமடைந்தான். விஜய் சைக்கிள் ஒட்டவே முயற்சிக்கவே இல்லை. அஜய் காயம் குணமான பிறகு மீண்டும் சைக்கிள் எடுத்தான், ஒரே வாரத்தில் ஓட்ட பழகினான். இன்று அஜய் சென்னை நெரிசல்களில் லாவகமாக  ராயல் என்பீல்டில் செல்கிறான். விஜய்க்கு இன்னமும் எந்த வண்டியும் ஓட்டத் தெரியாது. நீங்கள் விஜய்யாக இருக்க  ஆசைப்படுகிறீர்களா அல்லது அஜய்யாக இருக்க ஆசைப்படுகிறீர்களா? 

வாய்ப்புகள் தானாக அமையாது, நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என கோச்சடையான் படத்தில் ஒரு வசனம் வரும்.  அது நிதர்சனம். உங்களுக்கு வாய்ப்பு வரும், புதையல் கிடைக்கும், அதிர்ஷ்டக் காற்று வீசும்  என்றெல்லாம் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்துங்கள், உங்களால் அந்த வாய்ப்பு மரியாதை கிடைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.

கொதிக்கும் தண்ணீரில்,  திட உணவான  உருளைக் கிழங்கை போட்டால் அது மிருதுவாக, உடைத்து தின்னும் வகையில் மாறி விடும். ஒருவேளை முட்டையை வைத்தால், அதில் உள்ளே இருக்கும் நீர்ம வடிவிலான பொருள்,  கெட்டியாகி  அவித்த முட்டையாக நமக்கு கிடைக்கும். உங்கள் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நிர்ணயிக்க கூடாது, உங்களுக்கு என பிரத்யேகத் தனித்தன்மை வேண்டும். அதில் எதையும் செய்து முடிக்கும் மன உறுதியும், ஆற்றலும்  இருக்க வேண்டும்.

 

ஆப்பிள் மொபைல் வாங்க வேண்டும் என்றாலும் சரி,  எவெரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்றாலும் சரி, உங்கள் ஆசைகள் குறித்து முதலில் யோசியுங்கள். முயற்சி செய்தால் சாத்தியம் என்பது தெரிந்தால், அடுத்து உங்கள் மேல் அளவில்லாத நம்பிக்கையை வையுங்கள், மூன்றாவதாக கனவு காணுங்கள். முடிவாக செய்து முடிப்பீர்கள். 

- பு.விவேக் ஆனந்த் 

எடிட்டர் சாய்ஸ்