Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நீங்க சொன்னா லீவ் எல்லாம் விடுவாங்களே...!' - மிஸ் யூ ரமணன் சார்

மழைனு சொன்னதும் சிலருக்கு இளையராஜா பாடல்கள் ஞாபகம் வரும், சிலருக்கு ஏ.ஆர் ரகுமான். சென்னையில் இருக்கிறவங்களுக்கு செம்பரம்பாக்கம் ஞாபகம் வரும். ஆனா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோருக்கும் ஞாபகம் வருகிற ஒரே ஆள் ரமணன்தான். ரெயின் காட் வருணன் அப்படிங்கிறது மாறி ரமணன்தாங்கிற ரேஞ்சுக்கு மழைக்கும் நம்ம ரமணனுக்கும் அவ்வளவு தொடர்பு இருக்கு. இப்போ மறுபடியும் மழை. இந்த நேரத்துல ரமணனை எப்படியெல்லாம் மிஸ் பண்றோம் தெரியுமா...?

 ரமணன்


* தமிழ்நாட்டுல பெரிய பெரிய சிங்கர்ஸோட வாய்ஸுக்கு எல்லாம் எந்த அளவுக்கு ஃபேன்ஸ் இருக்காங்களோ அதே அளவுக்கு ரமணன் வாய்ஸுக்கும் நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அந்த வித்தியாசமான, கொஞ்சம் கரகரப்பான வாய்ஸைக் கேட்கிறதுக்கே நிறையப் பேர் மழை காலத்துல காத்து இருந்ததெல்லாம் ஹிஸ்டரி பாஸ்

* ரமணன் பேசுறப்போ யூஸ் பண்ற அந்த வித்தியாசமான வாக்கிய அமைப்பைக் கேட்காம இருக்கிறதே நிறையப் பேருக்கு கஷ்டமாதான் இருக்கும். `தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும்`னு கலவையா பேசுறது அழகோ அழகு ஃப்ரெண்ட்ஸ்.

* ஒவ்வொரு டைமும் புயலுக்கு புதுசா `விக்டோரியா', 'நிஷா', 'தானே`னு ஒரு பெயர் வெச்சு, அந்த வித்தியாசமான பேரை அவர் வாயால் சொல்ற அந்த அழகு இருக்கே... அது தனி ஃபீல் ப்ரோ!

* நாளைக்கு காலேஜ் எக்சாம், பத்தாவது பப்ளிக் எக்சாம் அப்படி எந்த எக்சாமா இருந்தாலும் ரமணன் மழை பெய்யும்னு ஒரு வார்த்தை சொன்னா போதும். உடனே லீவ் விட்டு எக்சாம் மாத்தி வைக்கிறதான் வழக்கம். ஏப்ரல் மாச வெயில்லகூட ரமணன் எதாவது சொல்லி எக்சாமுக்கு லீவ் விட மாட்டாங்களானு காத்திருந்தவங்கதான் அதிகம். 

* அவர் சொல்ற முக்கால்வாசி சயின்டிஃபிக் வார்த்தைகள், வீட்டுல குட்டீஸ் யாருக்குமே புரியலைனாலும் எல்லோரும் அவரைக் கண்கொட்டாமப் பார்க்கிறதே ஒரு ஃபீல் தான். குட்டீஸ் நியூஸ் பார்க்கிறதே அவரால் மட்டும்தான்.

* ஒரு காலத்துல மழை பற்றி அறிக்கை வெளியிட்டாலே அது சும்மா பொய்யா இருக்கும்னு நினைச்சதுபோய் `நாங்க சொன்னா நடக்கும் பாஸ்`ங்கிற மாதிரி மாஸா ஃபார்ம் ஆனது ரமணன் வந்த பிறகுதான்.

* ஒரு வானிலை நிபுணர், ஹீரோ ரேஞ்சுக்குக் கொண்டாடப்படலாம்கிறதை ப்ரூஃப் பண்ணி, யார் நினைச்சாலும் எப்போ வேணாலும் பெரிய ஆள் ஆகலாம் அப்படிங்கிறதுக்கு வாழும் எடுத்துக்காட்டா இருந்த ரமணன் உண்மையாவே கெத்துதான். 

* கடைசியா ரமணன்னு சொன்னாலே மழைதான்னு ட்ரெண்ட் க்ரியேட் பண்ணினதே மாஸ்தான். இன்னொரு டைம் ரமணனை டி.வி-யில் பார்க்கிறதுக்குதான் நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

வீ மிஸ் யூ ரமணன்.

- லோ.சியாம் சுந்தர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ