Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹீரோ பேனா...சாக்லெட் கவரு... எல்லா பப்பி லவ்வுக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக்தான்!

பப்பி 

  நம்மள சுத்தி என்ன நடக்குதுனே நமக்குத் தெரியாத வயசுல,நமக்கொன்னு அழகா தெரியும் அது தான் நம்ம பப்பி லவ். அத்தன நாளா ரஜினி சாரோட சண்ட சீன் பாத்திட்டிருந்த நம்மள கமல் சாரோட லவ் சீன் பாக்க வச்சது  பப்பி லவ் தான்.முதன் முதலில் கவிதை எழுத வெச்சது,முதன் முதலில் நம்ம ஹேர் ஸ்டைல வேற மாதிரி கட் பனண்ண வெச்சது, முதன் முதலில் சுட்டி டீவில இருந்து சன் மியூசிக் தேடிப் போக வெச்சது, முதன் முதலில் சைக்கிள் கீச்செயின் ஹார்ட்டின் வடிவத்தில் வாங்கி வாத்தியார்கிட்ட கிட்ட அடி வாங்க வெச்சது,முதன் முதலில் அங்கிள்களைக் கண்டு பயப்பட வெச்சது,முதன் முதலில் நம்மைக் கதாநாயகனாகக் கதாநாயகியாகவும் உணர வெச்சது, இப்படிப் பல 'முதன் முதலில்'க்கு 'உ' போட்டது இந்தப் பப்பி லவ் தான்.  

ப்ரபோஸலும், ப்ரபோஸல் நிமித்தமும்... 

நமக்குக் குட்டி வயசுல,இந்த லவ்வாங்கி வருவதற்கு முக்கியக் காரணம் நம்மள விட நம்ம கூடச் சுத்திக்கிட்டு இருக்கிற நண்பர்கள் என்ற அந்த நல்ல உள்ளங்கள் தான்."டேய்,அந்த பொண்ணு உன்னையே பாக்குதுடா", அடுத்து "ஆமாண்டி,அவன் உன்னையவே பாத்துட்டு இருக்காண்டி" ,இப்படி நம்ம கூடச் சுத்தறவங்க பேசுற குட்டி குட்டி வசனங்கள் தான் நம்ம மனசுல சலசலப்பு ஏற்படுத்தி நம்ம ஈஸ்ட்ரோஜன் டெஸ்ட்டோஸ்டீரான்  ஹார்மோனகளை நமக்குள்ள குதிக்க வெச்சிருது. அந்த வயசுல ஒரு பையன லவ் பண்ண வைக்கத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. ஆசிரியர் அட்டெடன்ஸ் எடுக்கிறப்ப அந்த பையன் பேர வாசிக்கும் போது அவன பாக்கனும்,TVS XLல அப்பா கூடப் போகும் போது கொஞ்சமாகத் திரும்பி பாக்கனும்,அப்பப்ப கியூட்டா சிரிக்கனும்... அது போதும் அந்தப் பையன் காலி. அடுத்து அதே, ஒரு பையன் ஒரு பொண்ண லவ்வாங்கிப் பன்ன வைக்கக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடின உழைப்ப போடணும். நல்லா படிக்கணும், அந்தப் பொண்ணு எங்க போனாலும் நம்மளோட பேர அதுக்குக் கேக்குற மாதிரி ஃப்ரெண்ட விட்டு கத்த சொல்லணும்.  பஸ்ல போகும் போது பஸ்ஸ மிஸ் பண்ணாம புடிச்சிரனும்,இதையே நாள் படச் செய்து வந்தால் அந்தப் பாப்பாவை அந்தப் பையன் இம்ப்ரஸ் செய்துவிடுவான். 

பப்பி லவ்வில் அடுத்தக் கட்டம் ப்ரபோஸ் பண்றது.  அதிகமான நேரங்களில் ஒரு பொண்ணு ஒரு பையன் மேல முதலில் ஆசை வைத்து விட்டால், எப்படியாவது அந்தப் பையனையே தானாக வந்து லவ் சொல்ல வெச்சுரும். அப்படி இல்லைன்னா ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு ஃப்ரெண்டு கிட்ட சொல்லி தூது அனுப்பிவிடும். 

   அதுவே ஒரு பையன் ப்ரபோஸ் பன்றான்னா அதுக்கு நிறையா ஹோம் வொர்க்கும் ,ஃபீல்ட் வொர்க்கும் அவசியம். பஸ்ல போகும் போது தமிழ் கோனார் உரைக்குள்ள லெட்டர் வெச்சுக் கொடுக்கிறது,டவுட்டுனு கேட்டு வாங்குன மேத்ஸ் நோட்டுல 143னு எழுதிக் கொடுக்கிறது(அப்ப தெரியாதே,I HATE YOUவுக்கும் 143 தான் வரும்னு),அந்த பொண்ணு நடந்து போகும் போது வேகமா சைக்கிள்ல வந்து லெட்டர கசக்கி கால் கிட்ட போட்டுட்டு போறது,அந்த பொண்ணோட பென்ச்சுல காம்பஸ் வெச்சு ஹார்ட்டின் போட்டு நம்ம இனிஷியல மட்டும் பதிச்சு வெச்சுட்டு வருவது,க்ளாஸ்ல இண்ட்ரவல் நேரத்தில்  அந்த பொண்ணு பேக்ல ஒரு டெய்ரி மில்க்கும் கூட ஒரு லெட்டரும் எழுதி போடுவது,அல்லது அந்தப் பொண்ணோட நண்பி நம்ம பக்கத்து வீடா இருந்தால் அவளிடம் சொல்லி விடுவது.. இப்படிப் பல வழிகள் இருக்கு. அப்ப நம்ம மேட்ரிமோனி,கல்யாண மாலை,ஜாதகப் பொருத்தம் எல்லாமே FLAMES தான்,இதுல லவ் வருமா,மேரேஜ் வருமா,அஃபெக்‌ஷன் வருமானு பாத்துட்டுத் தான் மத்த வேலையெல்லாம் நடக்கும். 

பப்பி லவ் பரிசுகள்: 

எப்படியோ அந்தப் பப்பி லவ்ல பொண்ணும் பையனும் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க,அப்புறம்,கேரளா, EA,ஃபன் மால்,ரங்கனாதன் தெரு,சத்யம் காம்ப்ளெக்ஸ் போன்ற எந்த இடத்துக்கும் போக முடியாது. மிஞ்சிப் போனா பள்ளிக் கூடத்திலேயே கல்விச் சுற்றுலா, அறிவியல் கண்காட்சி இந்த மாதிரி எதாவது கூட்டீட்டுப் போனா தான் உண்டு.அடுத்த வாய்ப்பு அந்தப் பொண்ணு அப்பா கூடச் சனிக் கிழமை ஆஞ்சனேயர் கோவில் வரும் போதும்,ஞாயிற்றுக் கிழமை சிவன் கோவில் வரும் போதும் பாத்துக் கொள்ளலாம்.அந்த பொண்ணு வீட்டு பக்கத்தில தப்பித் தவறி எதாவது ஒரு புறம்போக்கு இடம் இருந்திட்டால் போதும்,அத கிரிக்கெட் கிரவுண்டாக மாத்தி, அந்த இடம் நமக்குப் புன்னிய ஸ்தலமாக மாறும்.அடுத்து முக்கியமானது அந்தப் பொண்ணு போகிற ட்யூஷன் சென்ட்டர்,கம்பியூட்டர் செண்ட்டர்னு ஒன்னு விடாம எல்லா இடத்துலையும் ப்ரசண்ட்  போடனும், நம்ம எக்ஸ்ட்ரா கரிக்குலரையும் வளர்த்துக்கனும். புதுச் சட்டை எடுத்துட்டா ஒரு பத்து தடவையாச்சும் அவுங்க வீட்டு முன்னாடி வலம் வந்தரனும். 
  

கொலுசு சத்தம்,சைக்கிள் பெல்லு,சின்னச் சின்ன இருமல்,இவையெல்லாம் பப்பி லவ்வின் முக்கியமான சிக்னல்கள்.அடுத்த கட்டம் பரிசு வழங்குதல்,பர்த்து டே,வேலண்டைன்ஸ் டே,திடீர்னு ஒரு டே இந்த மாதிரி பல 'டே'க்களுக்குப் பரிசுகள் கை மாறும்.டெய்ரி மில்க்,ஜெம்ஸ் மிட்டாய்,கிட்கேட்,ஜெல்லி போன்றவை அதிசயங்களில் ஒன்றாக மதிக்கப்படும்,ஹீரோ பெண்ணும், கண்ணாடிக்குள் பூ இருப்பது போன்ற கிஃட்டுகள் எல்லாம் அடிக்கடி கிடைக்கும்.இந்த பப்பி லவ்வில் காஸ்ட்லி கிஃப்ட் எனப் பார்த்தால் பார்க்கர் பேனாவும்,வாட்சும் தான்.ஸ்கூல் முடியும் போது தனி ஸ்லாம் புக் கொடுப்பது இன்றியமையாதது. 

பப்பி லவ்வின் பிரச்சனைகள்: 

நம்ம அப்பா அம்மாக்கு தெரியாம அவுங்க உதவி இல்லாம நம்ம சொந்த முயற்சியில் செய்யுற முதல் காரியம் இந்தப் பப்பி லவ்வாகத் தான் இருக்கும்,அதனால் இதில் சூதானம் மிகவும் அவசியம்,இல்லையேல் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரும்,அவை பின்வருமாறு, அந்தப் பொண்ணு நம்மை லவ் பன்னுகிறதா என்று உறுதியாகத் தெரியாமல் நண்பனின் உசுப்பேற்றலால் அவளது பேக்கில் லெட்டர் போட்டால் அது நம் க்லாஸ் டீச்சர் கைக்குப் போகவும் ஏக போக வாய்ப்பிருக்கிறது, நடந்து போகும் போது சைக்கிளில் சென்று லெட்டரை கசக்கி போட்டுவிட்டுப் போனால் அடுத்த நாள் அவள் தன் பெரிய மீசை வைத்த அப்பாவுடன் வரவும் வாய்ப்பிருக்கிறது,நாம் காதலிக்கும் பாப்பாவையே நம் சீனியர் அண்ணாவும் காதலித்தால்,நாம் காதலிப்பது தெரிந்து அவர் வந்து நம்மை உதைக்கவும் வாய்ப்பிருக்கிறது,நாம் அந்தப் பாப்பாவிற்குக் கொடுத்த கிஃப்ட் அவள் அண்ணன் கையில் சிக்கினால் அவள் அண்ணனிடமிருந்து நமக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கிடைக்கவும் வாய்ப்பு அதிகம், இதில் எது நடந்தாலும் அம்மாவிடமும் சொல்ல முடியாது,அது இன்னொரு சோகம்.இருந்தும்,இவை அனைத்தும் தெரிந்தும் அதைச் செய்ய நமக்குத் தைரியமும் அதிகம். 

 

எத்தனை பிரச்சனை வந்தாலும்,அத்தனையும் ஏமாற்றம் ஆனாலும்,அந்த முதல் வந்த குட்டிக் காதல் அப்படியே இருக்கும்,அந்த பையனோ பெண்ணோ கொடுத்த ஹீரோ பெண்ணு ,புத்தகத்தில் வைத்த டெய்ரி மில்க் சில்வர் கவரு,எப்பவுமே பத்திரமாக வெச்சிருக்கிற ஸ்லாம் புக்கு,இவையெல்லாம் அப்படியே எவர்கிரீன் ஞாபகமாக இருக்கும்.பள்ளிக் கூடத்தில் எடுத்த க்ரூப் போட்டோ,அதுல ஜூம் பண்ணி பாக்க முடியாத நம்ம பப்பி லவ்வோட முகம், இவையெல்லாம் வீட்டுக்கு வெள்ளை பூசும் போது அதிர்ஷ்ட்ட வசமாகக் கிடைக்குறப்ப நம் மனசையும் ஒரு முறை வெள்ளை பூசிப் போகும்.இந்த பப்பி லவ் பள்ளியோடே நின்ற கதையும் இருக்கு,பள்ளி தாண்டி நம் பாதையில் பயணித்த கதையும் இருக்கு,ஆனால் அந்த டைரியை மூடி வைக்கப் போகும் போது இன்னொரு முறை முதலில் இருந்து படிக்கலாம் என்ற ஆசையும் இருக்கு,டைரியை மட்டும் அல்ல பள்ளியையும். 

சா.கவியரசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close