Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவா புகழ் கோவன் ஃபிஷ் கறி....ஈஸியாக செய்துவிடலாம்!#WeekEndRecipe

                                                           கோவன் ஃபிஷ்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை கோவன் ஃபிஷ் கறிநாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோவன் ஃபிஷ் கறி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மீன்(ஏதாவது ஒருவகை) - அரை கிலோ 
பெரிய வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பச்சைமிளகாய்(கீறியது) - 3
வினிகர் - ஒரு டீஸ்பூன்
முழுமல்லி(தனியா) - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் -  ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 
இஞ்சி - 10 கிராம்  
பூண்டு - 10 பல்
தேங்காய்த்துருவல் - 50 கிராம்
புளி - 15 கிராம்  
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். 

மீடியம் சைஸ் மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும். 

முழுமல்லி(தனியா), சீரகம், காய்ந்த மிளகாய் மூன்றையும் வெறும் வாணலியில்(எண்ணெய் விடாமல்) லேசாக வறுத்து ஆறவைக்கவும். அவற்றுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், அதில் வெங்காயம் சேர்த்து லேசான பொன்நிறம் வரும்வரை வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 

மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிடவும். 

கலவையில் கொதி வந்ததும் அதனுடன் ஊறவைத்துள்ள மீன் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். பின்னர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து, சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கினால் கோவன் ஃபிஷ் கறி தயார்.

கோவன் ஃபிஷ் கறி ரெசிப்பியின் செய்முறையை வீடியோ வடிவில் காண, கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்:
                                                                 

 

குறிப்பு:
* மீனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைப்பதால், மீனின் உள்புறமும் உவர்ப்பு சுவை செல்லும். அத்துடன் மீன் நல்ல நிறமாகவும் இருக்கும்.  

* கோவன் ஃபிஷ் கறி, கோவாவின் புகழ்பெற்ற அசைவ ரெசிப்பி. தற்போது நம் ஊரிலும் ஃபேமஸ் ஆகிவருகிறது.

- கு.ஆனந்தராஜ்

படம்: த.ஶ்ரீநிவாசன்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ