Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிஃப்டுக்கு ஆசைப்பட்டு பர்த்டே ட்ரீட் வெச்சு ஏமாந்தவரா நீங்க?

வருசத்துக்கு ஒரு தடவைங்கிறதாலோ என்னவோ பிறந்தநாள்னா விவரம் தெரிஞ்ச புள்ளைல இருந்து பல்லு போன பாட்டி வரையும் கொண்டாட்டந்தான். இது பர்த்டே பற்றிய கொ(தி)ண்டாட்டம்...

பர்த்டே

* முதல் பிரச்னையே 12 மணி பிரச்னைதான்... 12 மணிக்கு பர்த் டே விஷ் பண்ணறவங்கதான் நம்ம மேல பாசமா இருக்கிறவங்கனு எவனோ கிளப்பி விட்டுருக்கான். அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை அன்னைக்குதான் பத்து மணிக்கே நமக்குக் கண்ணைக் கட்டும். 12 மணிக்கு போன் பண்ணி விஷ் பண்ணினவனும் இருக்கான்... யார்கூட பேசிக்கிட்டு இருந்தே... என்கேஜ்டாவே இருக்குனு சந்தேகப்படுறவனும் இருக்கான்.. ஆரம்பமே அதிருதுல!

* இதைவிட கொடுமை என்னன்னா பிறந்தநாளுக்கு விஷ் பண்ணலைனாகூட பரவாயில்லை...ஆனா பல இடங்கள்ல அட்வான்ஸ் ஹேப்பி பேர்த்டே சொல்லலைனு சில பல போர் நடக்கும். 'என் பொறந்த நாளை மறந்துட்டீல்ல.. அதை விட முக்கியமானதெல்லாம் உனக்கு நிறைய இருக்கு'னு பொங்கல் வைக்க வேண்டியது!

* பிறந்தநாள் ட்ரெஸ்னு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே தேடித் தேடி அலைஞ்சு பார்த்து வாங்குறதெல்லாம் மேட்டரே இல்லை. அதை தைக்கக் கொடுத்த டெய்லர்கிட்ட இருந்து ட்ரெஸ்ஸை வாங்குறதுதான் மேட்டரே. என்னமோ அவங்க ட்ரெஸ்ஸை நம்ம ஓசிக்குக் கேட்ட மாதிரி இப்ப தரேன் அப்ப தரேன்னு அலையவிட்டு அடுத்த பொறந்த நாளைக்காவது தந்துருவாங்களான்னு நம்மை யோசிக்க வெச்சு கடைசியா ’போய்த் தொல, எடுத்துட்டுப் போ'ங்கிற ரேஞ்ச்ல கரைக்டா பொறந்த நாள் அன்னைக்குக் கொடுப்பாங்க. நல்லாயிரு தெய்வமே...எங்கிருந்தாலும் வாழ்க!

* பிறந்தநாள் அன்னைக்குக் காலையில ஊரே வாழ்த்து சொல்லும்... வீட்ல ஒரு பய மதிக்க மாட்டான். 'இன்னைக்காவது குளி' இதுதான் குடும்பத்தில் காலம்காலமா தொன்று தொட்டு வாழ்த்தப்படும் பிறந்தநாள் வாழ்த்துப் பாரம்பர்யம்!

* மத்த நாள்லகூட சுமாரா இருப்போம். நைட் 12 மணி வரை முழிச்சதாலோ, காலையில சீக்கிரம் எழுந்திரிச்சதாலோ, இல்லை, அழகா இருக்கணும்னு மெனக்கெட்டதாலோ என்னமோ மூஞ்சி அம்புட்டு ’அழகா’ இருக்கும். என்னடா பாவம் பண்ணுனேன். பொறந்த நாள் அன்னைக்கு அழகா இருக்கணும்னு நினைச்சது ஒரு தப்பா?

* சரி ஆனது ஆகட்டும்னு பவுடர் போட்டு பட்டி டிங்கரிங் பண்ணி ஒரு லெவலுக்குக் கொண்டு வந்துட்டா வீட்ல உள்ளவங்களுக்குப் பொறுக்காது. தாத்தா, பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கனு சொல்லி அப்படியே நெத்தி ஃபுல்லா விபூதியையும் குங்குமத்தையும் கலந்து அடிச்சுவிட்டா.. அட அட.. என்ன அழகு..எத்தனை அழகு..கோடி மலர் கொட்டிய அழகு!

பர்த்டே மீம்

* கேக், பலூன், கிஃப்ட் அப்படி இப்படினு ஒரு சினிமாவில் வரும் பிறந்த நாள் சீன் போல கற்பனை பண்ணிக்கிட்டு காலேஜுக்கோ, வேலைக்கோ போனா.. இவனுங்க கேக் வெட்டுவானுகளா மாட்டானுகளா; ஃபர்ஸ்ட் கேக் வாங்கி வெச்சிருக்காய்ங்களா இல்லையா? இவிங்க மூஞ்சியெல்லாம் பார்த்தா ஃபர்த்டே செலிபரெட் பண்ணுன மாதிரியே தெரியலையேங்கிற ரேஞ்ச்ல நம்மைத் திரிய விடுறது. சர்ப்ரைஸாம்..அதிர்ந்துதான் போய்ட்டோம்.. அட ஏன்டா டேய்!

* வீட்லையும் சரி ஃப்ரெண்ட்ஸோட போனாலும் சரி. கேக்கை யாருக்கு ஃபர்ஸ்ட் ஊட்டப் போறோம்னு செக் பண்றதுல இவங்களுக்குள்ள சுவாரஸ்யம். அடடா..ஃபர்ஸ்ட் நம்ம யாருக்கு கேக் ஊட்டுறோமோ அவங்க மேலதான் நம்ம ரொம்ப பாசம் வெச்சிருக்கோம்னு எவனோ/ எவளோ நம்ப வெச்சிருக்காய்ங்க. இதிலேர்ந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கான்னு பார்த்தா ஒரு வழியும் இல்லை.. கூட இருக்கிறவங்க பக்கா டீசன்ட். பிறந்தநாள் அன்னைக்கு பர்த்டே பேபியை யாரும் திட்ட மாட்டாய்ங்க. அடுத்த நாள்தான் வெச்சுத் திணறத் திணற அடிப்பாய்ங்க!

* கை கொள்ளாத அளவு கிஃப்ட் கிடைக்கும்னு பகல் கனவு கண்டா இவனுங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காசைப் போட்டு ஒரே கிஃப்ட்டா வாங்கிட்டு வந்து கொடுக்கிறது.. ஏன்டா இப்படின்னு கேட்டா நாங்களே உனக்கு பெரிய கிஃப்ட் அப்புறம் எதுக்கு தனியா கிஃப்ட்னு ஆதிகாலத்து மொக்கை காமெடியைப் போட்டு சமாளிஃபிகேசன் பண்ணிடுறது. மொத்தமா கிஃப்ட்டைக் கொடுத்துட்டு தனித்தனியா ட்ரீட் பில் போடுறதெல்லாம் பாவம் மை சன்!

* கேக்க ஃபுல்லா முகத்தில் அப்பி செல்ஃபி எடுக்கிறதுக்காகத்தான் பர்த்டே கொண்டாடப்படுதுனு நினைக்கிறேன். பசங்களுக்கு ஓகே. முகம் கழுவினா இட்ஸ் கான். ஆனா பொண்ணுங்களுக்குத்தான் ஃபேசியல், ஹேர் ஸ்பானு ரெண்டாயிரம் ரூபாய் லாஸ். மணி டுடே கம்ஸ்... டுமாரோ கோயிங்யா... அதனாலென்ன, கொண்டாடலாம் கொண்டாடலாம் வா..!

- ரூபிணி தேன்மொழி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close