Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட் ஜாக்கெட்

கூகுள் மற்றும் லீவி நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் ஜாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜாக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்புக்கு ரூ.23,000 ஆகும். ஸ்மார்ட் ஜாக்கெட்டை தயாரிக்கவுள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் ஜாக்கெட்டில் இருக்கும் புளூடுத், நம்முடைய மொபைல் போனுடன் இணைப்பில் இருக்கும். அதன்மூலம் மொபைலுக்கு அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் வரும்போது ஒரு வகையான அதிர்வினை வெளிப்படுத்தும். புதிய டெக்னாலஜி வசதியுடன் இந்த ஜாக்கெட்டின் கைப் பகுதியில் புளுடூத்தை இணைக்கும் பகுதி உள்ளது. அதன் மூலம் நம்முடைய போனை இந்த புளுடூத்துடன் இணைக்க முடியும்.

ஸ்மார்ட் ஜாக்கெட்டுடன் ஜிபிஎஸ் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் நாம் செல்லும் வழியை அதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் பயண விரும்புகள் மத்தியிலும் தொழில்நுட்ப விரும்பிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர்களிடம் இருக்கும் வரவேற்பைப் பொறுத்து, மற்ற நாடுகளிலும் இதன் விற்பனை தொடங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

பல்சுவை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close