Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடியா-வோடபோன் இணைப்பு உறுதியானது!

வோடபோன் நிறுவனத்துடன்  ஐடியா நிறுவனம் இணைவதற்கு, ஐடியாவின் உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Idea-Vodafone

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. யுனினார் நிறுவனத்தின் இந்தியப் பங்குகளை ஏர்டெல் வாங்கியது.

அதேபோல, வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவது குறித்து, கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த மாத இறுதியில், இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, அடுத்த ஆண்டு இறுதிக்குள், இரு நிறுவனமும் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதன் வணிகம் விரிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த இணைப்பில், வோடபோன் நிறுவனம் 45 சதவிகிதம், ஐடியா ப்ரமோட்டர்ஸ்களுக்கு 26 சதவிகிதம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 9.5 சதவிகிதம் ( ஒரு பங்குக்கு ரூ.130 அடிப்படையில்) பங்குகள் பிரிக்கப்படும். 

இதற்கு, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா சி.இ.ஓ.வாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சி.எஃப்.ஓ-வை வோடபோன் தேர்ந்து எடுக்கும்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

பல்சுவை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close