Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேண்டி கிரஷ் எல்லாம் பழசு... இந்த கேம்கள் தான் புதுசு..! #TrendingFBGames

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் ஃபேஸ்புக் கேம்கள் பற்றித் தெரிந்திருக்கும். சில நண்பர்கள் மூலம் நோட்டிபிகேசன் வழியாக அறிமுகமாகி, நம்மையும் விளையாடத் தூண்டும். ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு கேம் ஃபேஸ்புக்கின் ட்ரெண்ட் செட்டராக அமையும். ஃபார்ம்வில், கேண்டி கிரஷ் போன்ற விளையாட்டுகள் கொடி கட்டிப்பறந்தது அந்தக் காலம். தற்போது ஃபேஸ்புக்கின் ட்ரெண்ட்டிங்கில் முன்னிலை வகிக்கும் கேம்கள் இவை தான்!

Gardenscapes - New Acres :

ஃபேஸ்புக் கேம் - Gardenscapes - New Acres கேம்கள்

புகழ்பெற்ற ஃபார்ம்வில் மற்றும் சில கேம்களின் அப்டேட்டட் வெர்சன் என்றே இதைச் சொல்லலாம். தோட்டம் வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், மூன்று வெவ்வேறு சிறிய கேம்களும் இதில் அடக்கம். ஒவ்வொரு லெவலிலும் வெல்லும் பாய்ன்ட்களுக்கு ஏற்ப உங்கள் தோட்டத்தினை நீங்கள் அலங்கரிக்கலாம். ஃபேஸ்புக் நண்பர்களை சேர்த்துக் கொள்வதோடு, புதிதாகப் பலரையும் இந்த கேம் விளையாட அழைப்பு விடுக்கலாம். 12 வித்தியாசமான கதாபாத்திரங்கள் இந்த விளையாட்டுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.  கடந்த ஆண்டின் சிறந்த கேம் என ஃபேஸ்புக் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்க் - https://www.facebook.com/games/gardenscapes/?fbs=133

 

Critical Ops :

ஃபேஸ்புக் கேம் - Critical Ops

ஆக்சன் விரும்பிகளுக்கு என இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் SWAT (Special Weapons And Tactics) குழுவை அடிப்படையாக வைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. பேரழிவை ஏற்படுத்தும் தீவிரவாதிகளை ஆயுதங்கள் கொண்டும், மதி நுட்பத்தாலும் தாக்கி அழிப்பது தான் இதன் தீம். விளையாட ஆரம்பித்த நொடி முதல் கேம் முழுவதும் அதிரடி ஆக்சன்களுக்குப் பஞ்சம் இல்லை. இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பேர் இதை விளையாடி வருகிறார்கள்.

லிங்க் - https://www.facebook.com/games/criticalops 

 

Traffic Motorbike :

ஃபேஸ்புக் கேம் - Traffic Motorbike

நிஜ வாழ்வில் வாகன நெரிசலில் சிக்கித் தவிப்பவர்கள், வர்ச்சுவல் உலகில் வாகன நெரிசல்களுக்கு மத்தியில் பல சாகசங்கள் புரிவதற்கென இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல் மிகுந்த பொதுவெளியில் பல தடைகளைத் தாண்டிச் செல்வதோடு, எதிரிகளின் கார்களை இடித்துச்  செல்ல வேண்டுமென்பது தான் இந்த விளையாட்டின் தீம். மோட்டர் பைக்குகளையும், வாகன ஓட்டிகளையும் கூட பயனர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். பைக்கின் எஞ்சின் சத்தமும், தத்ரூபமான வடிவமைப்பும் யதார்த்தத்துக்கு நெருக்கமான உணர்வைத் தருகிறது. பைக் கேம்களில் இது தான் தற்போதைய ட்ரெண்ட்.

லிங்க் - https://www.facebook.com/games?app_id=1075860615801108

 

Star Wars: Commander :

ஃபேஸ்புக் கேம் - Star Wars: Commander

உலகப் புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் கருவை அடிப்படையாக வைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. டார்த் வாடெர் போன்ற கதாநாயக கதாபாத்திரத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நீங்கள் விளையாடலாம். போருக்கு பயிற்சி அளிப்பது, எதிரிகளின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வது, எதிர்த்துத் தாக்குவது போன்ற பல அம்சங்கள் இந்த கேமில் உள்ளன. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தவும் முடியும். ஸ்டார் வார்ஸ் படத்தின் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும் என டெவலப்பர்கள் சூடம் ஏத்தி சத்தியம் செய்கின்றனர்.

லிங்க் - https://www.facebook.com/games/star-wars-commander

Inside Out Thought Bubbles :

ஃபேஸ்புக் கேம் - Inside Out Thought Bubbles

நேரத்தைப் போக்கவும், டென்சன் இல்லாமலும் ஒரு கேம் வேண்டும் என நினைப்பவர்களுக்கான கேம் இது. புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் வடிவமைத்திருக்கும் இது, 'இன்சைட் அவுட்' என்ற அனிமேசன் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. சிறு வயதில் ஆடிய bubble-shooter வகையில், 'இன்சைட் அவுட்' படத்தின் கதாபாத்திரங்களின் விதவிதமான ரியாக்சன்களோடு இது மனதை அள்ளுகிறது. லெவல், பாய்ன்ட் போன்றவை பற்றிக் கவலைப்படாதவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாம். விளையாடும் போதே எண்ணற்ற விளம்பரங்கள் திரையில் தோன்றுவது மட்டும் இதன் மிகப்பெரிய மைனஸ்.

லிங்க் - https://www.facebook.com/games/iothoughtbubbles

கேம் விரும்பிகளைக் கவரும் வகையில் தனது கேம்ரூம் (https://www.facebook.com/FacebookGameroom) பக்கத்தில் தினம் ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக்.

- கருப்பு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close