Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்போ எந்த மோட்ல இருப்பாங்கன்னே தெர்ல..! - அலுவலக அக்கப்போர்கள்

ஆபிஸ்ல பாஸுங்கிறவர் பக்கா ஏ.சி ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு, நேரம் தவறாம சாப்பிட்டுக்கிட்டு, மீட்டிங் போறேன்-ப்ரசன்டேஷன் பண்ணிக் கொடு, கிளைய்ன்ட்டை மீட் பண்ணப் போறேன்- கான்டாக்டை எடுத்துக்கொடுன்னு உயிரை வாங்குவார். போதாக்குறைக்கு பாஸ் வகையறாக்கள் சினிமா போக டிக்கெட்டைக்கூட நம்ம காசுல போட்டுக் கொடுக்கிற கொடுமையை எல்லாம் எங்கே போய் சொல்ல யேசப்பரே. நம்ம பாஸ்களின் கெத்து ரியாக்‌ஷன்களும், நம்முடைய பாவம் ரியாக்‌ஷன்களையும் கொஞ்சம் கவனிக்கலாம். பாஸ்கள் மன்னிச்சூ.

ஆபிஸ்

அலுவல் பணிகளுக்கு இடைப்பட்ட நேரத்துல அவரோட மேல் அதிகாரி, அவரோட மூடைக் கெடுத்தாருன்னா, நம்மை நோக்கிப் பறக்கும் சூடு,  அப்போ அவர் போவார் ஒரு எக்ஸ்ட்ரீம் மோடு.

1. ஸ்மைலி மோட் :

என்ன பாய்ஸ்... எல்லாம் சைலன்ட்டா இருக்கீங்க... ஜஸ்ட் சில் அண்ட் ஸ்டார்ட் சாட் வித் அஸ்னு சிரிச்ச மேனிக்குத்தான் பேச ஆரம்பிப்பார். சரி லேசு பாசா நாமளும் சிரிச்சி வைப்போமுன்னு லைட்டா பல்லைக் காட்டுவோம். அப்போதான் சைக்கிள்ள வந்த சைத்தான், நம் சிரிப்புக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சுன்னு புரிய வரும்போது நம்ம ரியாக்‌ஷன்... 

2. மீட்டிங் மோட் :

அதிரி புதிரியா ஒரு வேலை பாத்துக்கிட்டு இருப்போம். ஆல் டீம் மேட்ஸ் ஹஸ் டு அசெம்பிள் அட் மீட்டிங் ரூம் வித் இன் 10 மினிட்ஸ்னு பாஸ்கிட்ட இருந்து வாட்ஸ் அப் வரும். நாமும் அத்தனை வேலையையும் அப்புடியே விட்டுவிட்டு மீட்டிங் ரூமுக்குப் போவோம். 'இந்த வருஷம் முடிய இன்னும் 3 மாசம்தான் இருக்கு, அதுக்குள்ள நம்ம டார்கெட்டை பீட் பண்னணும், அதுக்கு என்ன பண்ணலாமுன்னு சொல்லுங்க'னு நல்லாத்தான் ஆரம்பிப்பாரு. ஆனா மீட்டிங் முழுக்க அவர் மட்டும்தான் பேசிக்கிட்டு இருப்பாரு. நம்ம மண்டையில, கம்பெனியையே தலைகீழா புரட்டிப் போடுற மாதிரி ஒரு பொறி வரும், அதைச் சொல்ல வர்றப்போ நம்ம ரியாக்‌ஷனும், நம்ம ஐடியாவைச் சொல்லவிடாமலேயே மீட்டிங் முடியறப்ப நம்ம ரியாக்‌ஷன் கய்ஸ். 

3. கழுவி ஊத்தும் மோட் :

மீட்டிங்கிறது ஆபீஸ் டைம்ல அஃபிஷியலா திட்டுறதுன்னு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதேதான் வேற வேற மொழி, நடை, உடை பாவனையில் செய்வார் நம் பாஸ். இத்தனைக்கும் அவர் திட்டுறதுக்கான காரணத்தை செஞ்ச மாமேதை, வேற டீம் மீட்டிங்ல ஜஸ்ட் லைக் தட்டுன்னு மில்க் பிக்கீஸ் பிஸ்கட்டோட மில்க் ஷேக் சாப்பிட்டுக்கிட்டு இருப்பான். ஆனா நாமோ ஹெட் செட் வைக்காமலேயே சிம்பு பீப் சாங் கேட்டுக்கிட்டு இருப்போமே.... அப்போ நம்ம ரியாக்‌ஷன். 

4. ரிவ்யூ மோட் :

ஒருநாளுடைய 24 மணி நேரத்துல 26 மணி நேரமும் ஆபீஸ் வேலையைத்தான் செஞ்சிருப்போம். ஆஹா நாம் எப்படி பெர்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருக்கிறோமுன்னு ஒரு சின்ன சந்தோஷத்தோடு அடுத்த நாள் ரிவ்யூ மீட்டிங்குக்குப் போவோம்... அப்போ கேப்பாங்க பாருங்க...

ஹெச்.ஆர் - ஏன் லாஸ்ட் மன்த் 3 நாள் 8 நிமிஷம் லேட்டா வந்திருக்கீங்க?

ப்ரொடெக்‌ஷன் டீம் - ஏன் நீங்க பண்ண 258 ப்ரோடெக்ட்டுல 3 ப்ரோடெக்ட் சரியா செயல்படலை?

அக்கவுன்ட்ஸ் டீம் - ஏன் சனிக்கிழமை வாங்கின சஸ்பென்ஸை அடுத்த நாளே க்ளெய்ம் பண்ணலை?

மார்க்கெட்டிங் டீம் - ஏன் உங்க ப்ரோடெக்ட்ஸுக்கு மார்க்கெட்டிங் பண்ணலை?

5. டெர்மினேஷன் மோட் :

சார் இவன், நமக்கு சரிப்பட்டு வர மாட்டான், அவனை வேலைய விட்டுத் தூக்கிடுங்கன்னு நம்மைக் கட்டம் கட்டுவாய்ங்க. சரி...  என்ன தப்பு பண்ணேன், என்னை ஏன் வேலையை விட்டுத் தூக்குறீங்கன்னு கேட்டா அடிப்பாங்க. முன்பு வேலை பார்த்த கம்பெனியில எதுக்கு வேலையை விட்டுத் தூக்கினாய்ங்கன்னு சொல்லிட்டுத் தூக்கினாங்க. இப்போ எந்தக் காரணத்தையும் சொல்லாமல் தூக்குறாய்ங்க மொமென்ட்  நம்ம ரியாக்‌ஷன்.

6. நம்மைப் பார்த்தா மட்டும் மோட் :

எல்லார்கிட்டயும் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருப்பார், நம்ம பாஸ். ஆனா திடீர்னு நம்மைப் பார்த்தா மட்டும் ஒரு பார்வை வருமே. ப்ளீஸ் சீ தட் மொமென்ட் டியூட்ஸ். 

இவை எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடுற 'காலடில போடுறேன் சார்' மோட் ஒண்ணு இருக்கு. இதையும் சொல்லித்தான் புரிய வைக்கணும்னா ரொம்பக் கஷ்டம் ப்ரோ..

- ராபின்ஹூட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close