Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி அபராதத்தைக் குறைக்க 5 வழிகள்!

ஒரு சில வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லையென்றால் கட்டணம்; வங்கி கிளைகளில் ஐந்து முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்; குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைக்கு பிறகு பணம் எடுக்கும்போது அல்லது பணம் டெபாசிட் செய்வதாக இருந்தால்கூட கட்டணம் என்ற பெயரில் அபராதம் வசூலிக்கிப்படுகின்ற்து.  

வங்கிகள்

 

இந்த நிலையில் ஆறுதலான ஒரே விஷயம் பணமில்லா பரிவர்த்தனைதான். எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் பணமில்லா பரிவர்த்தனை என்பது சாத்தியம் இல்லாத விஷயம்தான். எனினும் இத்தகைய சூழ்நிலைகளில் அபராதம் செலுத்தாமல் உங்களுடைய பணத்தை பாதுகாக்க ஒரு சில வழிகள். 

உங்களுக்குக் கைக்கொடுக்க சில டிப்ஸ்கள்!

1. குறைந்தபட்ச தொகை இருப்பில் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களுடைய வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகையை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆகையால், உங்களுடைய வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை வங்கி கணக்கில் இருக்கிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும். உங்களது வங்கியில் எவ்வாறு சராசரி தொகையினை கணக்கிடுகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அதிகளவில் பணம் வைத்திருக்கும் போது நிறையச் சேவையினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

உதாரணத்துக்கு, உங்களுடைய வங்கி கணக்கில் சராசரியாக 1000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை வைத்திருந்தால் ஐந்து முறை மட்டும் ஏடிஎம்-யில் பணத்தை எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் அபராதம் உண்டு. ஆனால், உங்களுடைய வங்கி கணக்கில் 25,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்-ல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். உங்களுடைய வங்கி கணக்கில் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் அனைத்து ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். 

ஒரு சிலர் நான் சம்பள கணக்கை மட்டும் வைத்திருக்கிறேன் எனக்கு எல்லாம் கட்டணம் கிடையாது என்பார்கள். சம்பள கணக்கு என்றாலும் அதற்கு அபராதம் உண்டு. நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கணக்கினை உடனே மூடி விடவும். இதற்கும் கட்டணம் என்பது மிகவும் இன்னொரு சோகமான விஷயம் தான். 

2. உங்களுடைய வங்கி கணக்கை தரமிறக்கி கொள்ளலாம் 

உங்களுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட அளவு தொகையை தொடர்ந்து வைத்திருக்க முடியாத சூழ்நிலை இருந்தால், அந்த வங்கி கணக்கினை தரமிறக்கி அடிப்படை சேமிப்பு கணக்கு பிரிவில் மாற்றிக்கொள்ளலாம். அடிப்படை சேமிப்பு கணக்குக்கு வருடாந்திர கட்டணம் எதுவும் கிடையாது. டெபிட் கார்டு வழங்குகிறார்கள். ஆனால், இந்தக் கணக்கில் மாதத்தில் நான்கு முறை மட்டும் பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் முடியும். 

3. தனியார் நிதி கார்டுகளைப் பயன்படுத்துங்கள் 

தனியார் நிதி சேவை அமைப்புகள் பல்வேறு கார்டு வசதிகளைத் தருகின்றன. இந்த கார்டுகள் டெபிட் கார்டுகளாகவும் செயல்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி தேவையான அளவு பணத்தை ஏடிஎமில் எடுத்துக்கொள்ளலாம். இந்த கார்டுகளை பயன்படுத்தும் போது கட்டணம் எதுவும் (இதுவரை) இல்லை என்பதால் இந்த வசதியினையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. பொருட்களை வாங்க டெபிட் கார்டை பயன்படுத்துங்கள் 

இதுநாள் வரை பொருட்கள் வாங்கும் போது பணம் கொடுத்தும், காசோலை கொடுத்தும் பொருட்கள் வாங்கி இருப்பீர்கள். இனிமேல் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கப் பழகுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் மளிகைக்கடையில் பொருட்களை வாங்கும் போதும் உங்களுடைய டெபிட் கார்ட்டை பயன்படுத்துங்கள். டெபிட் கார்ட்டை பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மேலும், அவ்வவ்போது போனஸ் புள்ளிகளும், தள்ளுபடிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

5. ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது கொஞ்சம் கூடுதலாக பணம் எடுத்து பழகிக்கொள்ளுங்கள்

இதுநாள் வரை 100 ரூபாய் என்றாலும் எடிஎம்-ல் பணம் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்போம். இனி வரும் காலங்களில் வாரத்துக்கு அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்ற வகையில் ஏடிஎம்-ல் இருந்து கொஞ்சம் கூடுதலாக பணத்தை எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளலாம். பொருட்களை வாங்குவதற்கு டெபிட் கார்டுகளையும், இ-வாலட், யூபிஐ போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவராக இருந்தால் அந்தந்த வங்கியின் யூபிஐ மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பண பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தலாம். 

ஒவ்வொரு ரூபாயையும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால், எந்தவித நியாயமும் இல்லாமல் வங்கிக்கு அபராதம் செலுத்துவது சரியாகாது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்படுத்தி அபராதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாமே.

- ஞா. சக்திவேல் முருகன் 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close