Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வரிக்குதிரையின் விலை 11 லட்சம்... சிட்டுக்குருவி 750 ரூபாய்... ஒரு ஜூ பட்ஜெட் தெரியுமா?

நியூசிலாந்தில் இருக்கும் ஹாமில்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது, பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

வரிக்குதிரையின் விலை 11 லட்சம் 

நியூசிலாந்தின் ஹாமில்டன் பகுதியில், 1969ல் பவல் என்பவர் தனக்கு சொந்தமான சில ஏக்கர் தோட்டத்தில் பந்தயப் பறவைகளை வளர்த்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக, அதில் சில மிருகங்களையும் வளர்க்கத் தொடங்கினார். 1976ல் சில காரணங்களால் அவரால், தன் பறவைகளையும், மிருகங்களையும் தொடர்ந்து பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் பகுதி மக்களுக்கு, அது மிகவும் பிடித்தமான இடமாக இருக்கவே, அதை ஹாமில்டன் நகராட்சி விலைக்கு வாங்கி மிருகக்காட்சி சாலையாக உருவாக்க வேண்டும் என்று மக்கள் பலரும் குரல் கொடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஹாமில்டன் நகராட்சி அந்தப் பகுதியில் மிருகக்காட்சி சாலையை உருவாக்கியது. 

வரிக்குதிரை இருக்கும் ஹாமில்டன் பூங்கா

இது தான் ஹாமில்டன் மிருகக்காட்சி சாலையின் சிறு வரலாறு. இன்று 62 ஏக்கர் பரப்பளவில், மொத்தம் 600க்கும் மேற்பட்ட மிருகங்கள் மற்றும் பறவைகளைக் கொண்டு உலகளவில் பிரசித்தி பெற்ற மிருகக்காட்சிப் பூங்காவாக ஹாமில்டன் திகழ்கிறது. இதுவரை, இந்தப் பூங்காவில் மிருகங்கள் எப்படிக் கொண்டு வரப்படுகின்றன ,அதற்கு எவ்வளவு செலவிடப்படுகிறது போன்ற விஷயங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதில்லை. நம் நாட்டில் இருக்கும் "தகவல் அறியும் உரிமைச் சட்டம்" போன்றே நியூசிலாந்திலும் " அலுவலக தகவல் சட்டம்" என்ற ஒன்று உண்டு. அதன் கீழ், கேட்கப்பட்ட விவரங்களுக்கு, மிருகங்கள் வாங்கப்பட்ட விலை உட்பட பல விவரங்களை அந்த மிருகக்காட்சி பூங்கா வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வரிக்குதிரை 11 லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக சொல்லியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு மிருகக்காட்சிப் பூங்காவை நடத்துவதில் இவ்வளவு செலவுகள் இருக்கிறதா என்று பலரும் புருவம் உயர்த்துகிறார்கள். 

வரிக்குதிரை, காண்டாமிருகம், நியூசிலாந்து

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ஹாமில்டன் பூங்காவில் வரிக்குதிரைகளை வளர்த்து வருகிறார்கள். அதை வலிமையான பொலிக் குதிரைகள் கொண்டு இனப்பெருக்கம் செய்தும் வருகின்றனர். சில மாதங்களாக இனப்பெருக்கம் செய்வதற்கான வரிக்குதிரை இல்லாமல் இருந்த நிலையில், மலாவி என்ற பெயர் கொண்ட இந்த பொலிக்குதிரையை பூங்காவிற்கு கொண்டு வந்துள்ளனர். இதற்காக 11 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. "நியூசிலாந்து மிருகங்கள் இனப்பெருக்க கூட்டமைப்பின்" உறுப்பினராக இருக்கும் ஹாமில்டன் பூங்கா, காசு கொடுத்து இது போன்ற இனப்பெருக்க குதிரைகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. மலாவியைக் கூட அவர்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை. அதைக் கொண்டு வருவதற்கான பயணச் செலவு, அனுமதிக்கட்டணம், அதற்கேற்ற மாதிரியான வண்டியை உருவாக்கியது போன்ற காரணங்களுக்காகவே இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது 

வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, நியூசிலாந்து

இதே போன்று 2007ல் 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு காட்டெருமையை ( Bison ) கொண்டு வந்தார்கள். அதே ஆண்டு, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற மிருகங்களையும் கூட பூங்காவிற்குக் கொண்டு வந்தார்கள். 2015ல் ஆஸ்திரேலியாவிலிருந்து 4.5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு "சாலி" என்ற பெயர் கொண்ட ஒரு புலியை வாங்கி, பூங்காவிற்குக் கொன்டு வந்தார்கள். 

வரிக்குதிரை 11 லட்சம், சிட்டுக் குருவி 750 ரூபாய்

ஹாமில்டன் மிருகக்காட்சி பூங்காவிலேயே மிகக் குறைந்த விலையில் வாங்கப்பட்டது சிட்டுக்குருவிகள் தான். ஒரு சிட்டுக் குருவி 750 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இவ்வளவு செலவுகளை சமாளித்து, மிருகங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வருவது பாராட்டத்தக்கது என நியூசிலாந்து மக்களில் பலரும் ஹாமில்டன் மிருகக்காட்சி பூங்காவைப் புகழ்ந்து வருகின்றனர். 

- இரா. கலைச் செல்வன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close