Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் - சீனா இடையே 12000 கி.மி ரயில் சேவை தொடங்கியது

சீனாவின்  யிவு நகரத்தில் இருந்து லண்டனுக்கு இடையேயுள்ள  தொலைவு சுமார் 7500 மைல்கல் அதாவது 12,000 கிலோ மீட்டர். லண்டன் - சீனா இடையேயான வர்த்தக போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. எல்லா பணிகளும் முடிந்த நிலையில், முதல் முறையாக லண்டனில் இருந்து சீனாவுக்கு பயணித்திருக்கிறது சரக்கு ரயில்.

   சரக்கு ரயில்

உலகின் அதிக தொலைவை கடக்கும் சரக்கு ரயில்களில் இது டாப் இடத்தில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி, லண்டனில் இருந்து பீர், பால், மருந்துகள், மெஷின்கள் என பலவற்றையும் சுமந்து தடதடக்க ஆரம்பித்தது ஈஸ்ட் வின்ட் என பெயரிடப்பட்ட சரக்கு ரயில் . லண்டனில் இருந்து பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான், வழியாக பயணித்து நேற்று சீனாவின் யிவு பகுதிக்கு  ரயில் வந்தடைந்தது.  

 கப்பலில் இந்த தூரத்தை கடக்க வேண்டுமென்றால், இன்னும் முப்பது நாட்கள் தேவைப்படும், ஆனால் கப்பலில் 10 ஆயிரம் , 20 ஆயிரம் கண்டெயினர்கள் வரை சரக்கு எடுத்து வரலாம். ஆனால் இந்த ரெயிலில் 88 கன்டெயினர்கள் அளவுக்கு மட்டுமே சரக்கு எடுத்துவர முடிந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close