Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

⁠காதலில் வெற்றி கிடைக்கும் யோகம் யாருக்கு? #Astrology

காதலில் வெற்றி, தோல்வி, திருமணம் என்பது இப்போது சர்வசாதாரணமாகப் போய்விட்டது. அப்படி காதல் திருமணம் செய்பவர்களில் பலருக்கும் பெற்றோர், சகோதரர்களின்  எதிர்ப்பே மிஞ்சுகிறது. விதிவிலக்காக ஒரு சிலருக்கு பெற்றோர்களின் யோகம், ஆசீர்வாதம் கிடைத்து, அவர்களே தடபுடலாக நடத்திவைக்கும் நிலையையும் பார்க்கிறோம். 'எவருடைய காதல் திருமணத்தை, பெற்றோர்களே ஆசி வழங்கி நடத்திவைக்கும் யோகம் யாருக்கு அமையும்? ' என்று ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

யோகம்

 

''நகரம், மாநகரம், கிராமம் என்று இல்லாமல் இன்று, பல திருமணங்கள் காதல் திருமணங்களாகவே இருந்து வருகின்றன. அதுவும் பணிக்குச் செல்லும் ஆண்களும் சரி, பெண்களும் சரி சக பணியாளர்கள் மீதோ, தங்களின் பணி நிமித்தமாகச் சந்திக்கும் யாரோ ஒருவர் மீதோ காதல் வயப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. 

வித்யாதரன்காதல் வயப்பட்டதும், திருமணம் செய்துகொள்ள பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற முயல்கிறார்கள். அப்போது அவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டில் இருந்தோ, பிள்ளை வீட்டில் இருந்தோ அல்லது இரண்டுபேர்களின் வீட்டில் இருந்தோ எதிர்ப்பு ஏற்படுவதையும் நம்மால் காணமுடிகிறது. சிலருடைய காதலுக்கு இரு வீட்டாரின் சம்மதம் கிடைப்பதும் உண்டு. காதலுக்கு எதிர்ப்பு நிலை வரும்போது சிலர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கின்றனர். மற்றும் சிலருக்கு எதிர்ப்பை மீற முடியாமலே போய்விடுகிறது. இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
* ஒருவருடைய ஜாதகத்தில்  லக்னத்துக்கு 2, 8-ல் ராகு, கேது இருந்தாலும்  ராசிக்கு அதாவது சந்திரனுக்கு  2, 8-ல் ராகு, கேது இருந்தாலும் அவர்களது காதலுக்கு பலவித தடைகள் வரத்தான் செய்யும்.
*  லக்னத்துக்கு  7-ம் வீட்டுக்கு உடையவரும்  9 -ம் வீட்டுக்கு உடையவரும்  பரிவர்த்தனையாகி இருந்து  5-ம் வீட்டில் ஒரு பாவ கிரகம் இருந்தால், தடைகளுடன் காதல் திருமணம் நிறைவேறும். இவர்களுக்கு பெண் குழந்தைகள்தான் அதிகமாகப் பிறக்கும். 
* ஆண் ஜாதகமாக இருந்தால் 7 -ம் வீட்டுக்கு உடையவர்  ஜாதகருடைய பாதகாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது ராகு, கேதுவின் சாரத்தில் (அதாவது நட்சத்திரத்தில்) இருந்தாலோ காதல் திருமணம் நடக்கும். இத்தகைய அமைப்பில்  இருக்கும் ஜாதகங்கள் மதம் அல்லது ஜாதி மாறியும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

காதல்

* சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து 1, 4, 7, 10 - ம்  இடங்களில் நிற்க பிறந்தவர்கள், காதலில் தோல்வி அடைந்து, தனது பெற்றோர்கள்  விருப்பப்படியே திருமணம் செய்து கொள்வார்கள். இவர்கள் விரும்பிய காதல் நிறைவேறாது.
* பெண் ஜாதகத்தில்  8 - ம் வீட்டுக்கு உரியவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
* புதனுக்கு 2, 5, 7, 9, 12, -ம் இடங்களில் கேது இருந்தாலும், அல்லது புதனுடன் கேது சேர்ந்து இருந்தாலும், 18, 24 வயது நடக்கும் காலங்களில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதலா, நட்பா என்று சொல்ல முடியாத நிலையில் பழகி, பிறகு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும்.

ஜோதிடம்

* சூரியனுக்கு 2, 5, 7, 9, 12 - ம் இடங்களில் ராகு இருந்தாலோ அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்து இருந்தாலோ, ஜாதகரின் தந்தை காதல் விஷயத்தில் கடைசிவரை எதிர்ப்பாகத்தான் இருப்பார்.
* ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் வீட்டின் அதிபதி சுப கிரகத்தின் பார்வை பெறவேண்டும். அத்துடன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் இருக்க வேண்டும்.
*  சூரியனுடன் குரு அல்லது சூரியனுக்கு 2, 5, 7, 9, 12 - ம் இடங்களில் குரு இருந்தால்  தந்தையே காதல் திருமணத்தை நடத்தி வைப்பார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close