Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்கத்தாவில் அமிதாப் பச்சன் கோயில்... 6.2 அடியில் சிலை நிறுவப்பட்டது!

Amitabh Bachchan statue

இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் 'சர்கார் 3' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி, அனைத்து மேற்குவங்க அமிதாப் ரசிகர்கள் சங்கம் சார்பில், 6.2 அடிகொண்ட அவரின் சிலை, கொல்கத்தாவில் இருக்கும் அவரது கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

'சர்கார்' திரைப்படத்தில் வரும் அமிதாப் கதாபாத்திரத்தைப் போலவே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமிதாப் ரசிகர்களில் ஒருவர், ''அவருக்காக உருவாக்கப்பட்ட கோயிலில் 25 கிலோ எடையுள்ள அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஃபைபரால் ஆன இந்தச் சிலை அமிதாப்பைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்தச் சிலைக்கு மெருகூட்டும் நோக்கில் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மேற்குவங்கத்தில் இருக்கும் 50 அமிதாப் ரசிகர் மன்றங்கள் சேர்ந்து சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அமிதாப், அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இந்த ஆண்டு அமிதாப் பச்சனுக்கு 75 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close