Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1.1 மில்லியன்..! ஆண்ட்ராய்டைக் குறை சொன்னவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை! #AndroidSecurityRewards

"நிறைகளை விட, குறைகளைத் தெரிந்துகொண்டு அதை உடனடியாக சரிசெய்தால் மட்டுமே வெற்றி வசப்படும்" என்பது மென்பொருள் துறையின் தாரக மந்திரம். ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல நிறுவனங்களும் இதைச் சரியாக புரிந்து வைத்துள்ளன. தங்களது தயாரிப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு வெகுமதி அளித்து, உடனடியாக அதை சரி செய்வதை பல முன்னணி நிறுவனங்களும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

ஆண்ட்ராய்டு

ஆபரேட்டிங் சிஸ்டமானது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதில் ஒரு குறை இருந்தால் கூட, ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தமாக ஆட்டம் காண வைத்துவிடுவார்கள். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு வழியாக உள்ளே நுழைந்து பரவி, உலகையே அதிர வைத்த வான்னாக்ரை ரான்சம்வேர் இதற்கு சமீபத்திய உதாரணம். எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக, பாதுகாப்புக் குறைபாடுகளைக் கவனித்து மென்பொருள் நிறுவனங்கள் தொடர்ந்து அதை சரிசெய்து வருகின்றன. ஆண்ட்ராய்டு நிறுவனம் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி ரிவார்ட்ஸ் (Android Security Rewards) என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு வெகுமதி அளித்து வருகிறது.

ஆண்ட்ராய்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மென்பொருள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அளித்த அறிக்கைகளில், மொத்தம் 450 அறிக்கைகள் அந்நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டில் மட்டும் 1.1 மில்லியன் டாலர் தொகையை, இதற்காக ஆண்ட்ராய்டு வெகுமதியாக அளித்துள்ளது. இதில் 'C0RE Team' என்ற மென்பொருள் ஆராய்ச்சிக் குழு மட்டும் 3 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதியைப் பெற்றுள்ளது. மேலும், 31 ஆராய்ச்சியாளர்களுக்கு தலா 10 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதியை அளித்துள்ளது ஆண்ட்ராய்டு.

பாதுகாப்புக் குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு வெகுமதி வழங்குகிறது. ஆண்ட்ராய்டின் ட்ரஸ்ட் ஜோனில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை 50 ஆயிரம் டாலர்களிலிருந்து 2 லட்சம் டாலர்களாக ஆண்ட்ராய்டு உயர்த்தியுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வெகுமதியை யாரும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டில் உள்ள சில பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போனில் ஊடுருவித் தகவல்களைத் திருடுவது மிக எளிது. இதைச் சரிசெய்து ஹேக்கர்களுக்கு 'செக்' வைப்பதற்காகதான் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் அவ்வப்போது செக்யூரிட்டி அப்டேட் கொண்டுவருவார்கள். மேலும், ஹார்ட்வேர் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும்விதமாகவும் புதுப்புது வசதிகளோடு ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்படும். எனவே, ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறையை சரிசெய்து அவ்வப்போது செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை ஆண்ட்ராய்டு வெளியிடும். மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் இதைத் தங்களது டிவைஸ்களில் உடனடியாக வெளியிட்டு, அப்டேட் செய்யும்படி பயனாளர்களை வலியுறுத்துகின்றன. நூற்றுக்கணக்கான மொபைல் நிறுவனங்கள் இதை உடனடியாக வெளியிட்டாலும், போர்க்கால அடிப்படையில் மொத்தம் 42 டிவைஸ்கள் மட்டுமே இதைச் சரியாக செய்வதாக ஆண்ட்ராய்டு அந்நிறுவனங்களைப் பாராட்டி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் மொபைல் மாடலும் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்.

ஆண்ட்ராய்டு - செக்யூரிட்டி அப்டேட் வெளியிட்ட 42 மொபைல் மாடல்கள்

சுமார் 8.5 மில்லியன் முதல் 36.5 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், ஜூடி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட் செய்தாலே இதுபோன்ற வைரஸ் தாக்குதல்களிலிருந்து எளிதாகத் தப்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close