Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி எதிரொலி: கார் / பைக் விலையில் படையெடுக்கும் தள்ளுபடிகள்!

தற்போது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல பொருட்களின் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் விலையைப்போல தினசரி மாறக்கூடிய பெட்ரோல்-டீசல் விலை, விதிமுறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் உடனடியாகப் புதிதாக கார்/பைக் வாங்கும் முடிவிலிருக்கும் பலர், ஜிஎஸ்டி-யின் காரணமாக அதைத் தள்ளிவைத்துக்கொண்டே வருகின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்கள், ஜிஎஸ்டி அதிகாரபூர்வமாக வருவதற்கு முன்பாகவே, பிரதானமான கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்களும், தன் தயாரிப்புகளின் விலைகளை ஜிஎஸ்டி-க்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளனர். இது ஜூன் மாதத்தின் இறுதிவரை பின்பற்றப்படும் எனக் கூறப்படுகிறது. லக்ஸூரி கார் தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து, மற்ற கார் & பைக் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் விலை குறைப்புப் பட்டியல்...

 

பஜாஜ் ஆட்டோ:

பஜாஜ்

இந்தியாவில் பைக் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதல் ஆளாக, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் முன்பே விலை குறைப்பைக் கொண்டுவந்த முதல் நிறுவனம் பஜாஜ். அதற்கேற்பதான் விற்பனை செய்யும் விலை குறைந்த மாடலான CT100B முதல் விலை அதிகமான மாடலான டொமினார் D400 பைக் வரை அவற்றின் எக்ஸ் ஷோரூம் விலைகளில் 686 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை, மாடலுக்கு ஏற்ப விலை குறைப்பைப் பட்டியலிட்டுள்ளது பஜாஜ்.

CT100B               -    686 ரூபாய்
பிளாட்டினா      - 1,120 ரூபாய்
டிஸ்கவர் 125    - 1,265 ரூபாய்
V15                      - 1,552 ரூபாய்
பல்ஸர் 150       - 1,917 ரூபாய்
அவென்ஜர் 220 - 2,138 ரூபாய்

 

ஆடி இந்தியா:

ஆடி

வழக்கமான ஃபைனான்ஸ் & இன்ஷூரன்ஸ் ஆஃபர், சர்வீஸ் பேக்கேஜ்கள் தவிர, A3, A4, A6, Q3 ஆகிய கார்களின் விலைகளையும் ஜிஎஸ்டி-க்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கிறது ஆடி. இந்த நிறுவனத்தின் மற்ற மாடல்களிலும் விலை குறைப்பு இருக்கிறது என்றாலும், முன்பு சொன்னவை அனைத்தும் ஆடியின் டாப் செல்லிங் மாடல்கள் என்பதால், அவற்றின் எக்ஸ் ஷோரூம் விலையில் மட்டும் எவ்வளவு விலை குறைப்பு (8-14 சதவிகிதம்) செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. 

A3 Premium Plus TDI    -   2.31 லட்சம் ரூபாய்
A4 Technology TDI         -   6.31 லட்சம் ரூபாய்
A6 Technology TDI         -   7.26 லட்சம் ரூபாய்
Q3 Premium TDI            -   3.71 லட்சம் ரூபாய்
A8 Premium Plus           -   10      லட்சம் ரூபாய்

 

இசுஸூ இந்தியா:

இசுஸூ

`ஜெர்மன் லக்ஸூரி நிறுவனங்கள் மட்டும்தான் விலையைக் குறைக்குமா? நாங்களும் செய்வோம்ல' என்ற ரிதியில், ஜப்பானைச் சேர்ந்த இசுஸு நிறுவனம், தான் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் கார்களின் விலைகளை, ஜிஎஸ்டி-க்கு ஏற்ப மாற்றியுள்ளது. இதுபற்றி அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வராவிட்டாலும், ஒருசில டீலர்கள் பிக்-அப் வாகனமான D-Max V-Cross-ன் எக்ஸ் ஷோரூம் விலையில் 71 ஆயிரம் ரூபாயும், MU-X எஸ்யூவியின் இரண்டு வீல் டிரைவ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலையில் 1.5 லட்சம் ரூபாயும், நான்கு வீல் டிரைவ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலையில் இரண்டு லட்சம் ரூபாயும் குறைத்திருக்கிறார்கள்.

 

பிஎம்டபிள்யூ & ஜாகுவார் லேண்ட்ரோவர்:

ஜிஎஸ்டி

இந்த இரு நிறுவனங்களும் ஏற்கெனவே விலை குறைப்பை அறிவித்துவிட்டாலும், கூடுதலாக சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன்படி பார்த்தால், பிஎம்டபிள்யூ-வின் 3 சீரிஸ் காரின் விலை குறைப்பு, வேரியன்ட்டுக்கு ஏற்ப 50 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இதுவே ஜாகுவார் நிறுவனம், தன் XE காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 2 - 5.7 லட்சம் ரூபாயும், XJ காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 4 - 10.9 லட்சம் ரூபாயும், ரேஞ்ச் ரோவர் இவோக் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 3.3 - 7.5 லட்சம் ரூபாயும் முன்பைவிட குறைந்திருக்கிறது.

 

ஃபோர்டு இந்தியா:

ஃபோர்டு

ஒருபுறம் லக்ஸூரி கார் தயாரிப்பாளர்கள், ஜிஎஸ்டி-க்கு ஏற்ப விலை குறைப்பு செய்துவரும் நிலையில், பட்ஜெட் செக்மென்ட்டில் முதல் ஆளாக விலை குறைப்பை அறிமுகப்படுத்தியிருப்பது ஃபோர்டுதான்! எனவே, ஹேட்ச்பேக்கான ஃபிகோ மற்றும் காம்பேக்ட் செடான் காரான ஆஸ்பயர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில், வேரியன்ட்டுக்கு ஏற்ப 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது. இதுவே காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட் என்றால், அதன் எக்ஸ் ஷோரூம் விலையில், வேரியன்ட்டுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தின் ப்ரீமியம் கார்களான எண்டேவர் மற்றும் மஸ்டாங் ஆகியவற்றில், இதுவரை எந்தவிதமான விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. 

 

ராயல் என்ஃபீல்டு:

ராயல் என்ஃபீல்டு 

தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு பைக்கின் ஆன் ரோடு விலையிலும், ஜிஎஸ்டி-க்கு ஏற்ப, ஜூன் 17ம் தேதி முதல் விலை குறைப்பு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் President  ருத்ரதேஜ் சிங்!

 

மஹிந்திரா:

மஹிந்திரா

இந்தியாவில் யுட்டிலிட்டி வாகன விற்பனையில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா, ஜிஎஸ்டி-க்கு ஏற்ப தனது எஸ்யூவி-களின் விலைகளை மாற்றியிருக்கிறது. இதனால் KUV 1OO காரின் விலையில் 42 ஆயிரம் ரூபாயும், TUV 3OO காரின் விலையில் 36 ஆயிரம் ரூபாயும், XUV 5OO காரின் விலையில் 65 ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளன. இதனுடன் சில மாடல்களில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. 

 

ஹூண்டாய் இந்தியா:

ஹூண்டாய்

இந்தியாவில் டூஸான் தவிர்த்து, தான் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்துக் கார்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், 100 சதவிகிதம் ஃபைனான்ஸ் வசதி ஆகியவற்றுடன், ஜிஎஸ்டி-க்கு ஏற்ப விலை குறைப்பையும் செய்திருக்கிறது ஹூண்டாய்.

இயான்              - 45 ஆயிரம் ரூபாய்
கிராண்ட் i10     - 62 ஆயிரம் ரூபாய் (பெ) - 73 ஆயிரம் ரூபாய் (டீ)
எக்ஸென்ட்     - 25 ஆயிரம் ரூபாய் (பெட்ரோல்-டீசல்)
எலீட் i20           - 25 ஆயிரம் ரூபாய் (பெட்ரோல்-டீசல்)
வெர்னா           - 80 ஆயிரம் ரூபாய் (பெ) - 90 ஆயிரம் ரூபாய் (டீ)
சான்டா ஃபி     - 2.5 லட்சம் ரூபாய்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close