Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெக்கெபிக்கேனு சிரிக்க இங்கேயும் இருக்கு டிப்ஸ்..! #SmilePlease

'இன்றைய தேதியில யாரும் அவ்வளவா சிரிக்கிறதில்லை. முகத்தை உம்முன்னு ஆப்பிரிக்கக் குரங்கு மாதிரி வெச்சுக்கிட்டு திரியிறாய்ங்க'ன்னு வல்லிசா ஒரு பிராது இருக்கு. 'சோகம் நெஞ்சக் கவ்விக் கிடக்கையில எப்படி சிரிப்பு வரும்?' என்று அந்த பார்ட்டிகளும் அதுக்கு சீரியஸாகவே பதில் சொல்லி, 'சிரிச்சா போச்சு' என சீரியஸ் மோடுக்கு முகத்தை அப்லோடிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பார்ட்டிகள் கெக்கேபிக்கேவென சிரிக்க சில டிப்ஸ்...

சிரிப்பு


* சீரியஸ் மூஞ்சி பார்ட்டிகள் தினமும் காலையிலும், மாலையிலும் அரைமணிநேரம் கிச்சாசனம் செய்யலாம். அது என்ன கிச்சாசனம் என்று குழம்ப வேண்டாம். தங்களது கைகளைப் பரஸ்பரம் தங்களது கழுத்தில் வைத்து கிச்சுக்கிச்சு மூட்டிக் கொள்வதுதான் அந்த ஆசனம்.

* அழுவதற்கு கிளிசரின் இருக்குன்னு ஊர்ப்பட்ட சினிமாக்களைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டோம். அதேபோல்,சீரியஸ் பார்ட்டிகளைச் சிரிக்க வைப்பதற்கு சித்த மருத்துவத்திலோ, அலோபதியிலோ மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியுமா என்று 'குரோர்பதி' அளவுக்குச் செலவு செய்தாவது ஆராயலாம்.

* அந்த பார்ட்டிகள் தூங்கும் ரூமில் நைட்டோடு நைட்டாக வடிவேலு பலவித சிரிப்பு கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களைப் பெரிய சைஸ்களில் சுவரில் ஒட்டி வைக்கலாம். காலையில் எழும் பார்ட்டி அதைப் பார்த்து லேசாக சிரித்தாலும், அவர் ஆடும் உம்முனாமூஞ்சி ஆட்டத்தில் தோத்தாங்குளி ஆகிட்டார்ன்னு முத்திரை குத்திடலாம்.

* அரசுப் பொதுத் தேர்வு காலங்களில் பிள்ளைகள் படிப்பதற்கு டிஸ்டர்ப் ஆகிடக்கூடாது என்பதற்காக பல வீடுகளில் கேபிள் கனெக்ஷனை கட் செய்வார்கள். அதேபோல,'உர்' பார்ட்டிகளை 'கொல்' என சிரிக்க வைக்க, ஒரு பத்து நாளைக்கு லோக்கல் கேபிள் டி.வி ஆபரேட்டரை விட்டு காமெடி சேனல்கள் விடுத்து இதர சேனல்களை கட் பண்ண சொல்லலாம். 

* காமெடி சேனல்களைப் பார்த்தும் சிரிப்பு வராதவங்க கூட தமிழகத்தில் நடக்குற அரசியல் காட்சிகளைப் பார்த்தா அந்தர்பல்டி அடிச்சுச் சிரிப்பாங்க மக்கா. அந்தளவுக்கு இருக்கு அரசியல். பி.ஜே.பி அறிவிச்ச குடியரசுத் தலைவர் வேட்பாளரை அ.தி.மு.க-வில் இருக்குற ஒவ்வொர் அணிக்காரவுகளும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வழிமொழியிறாகளாம். இதெல்லாம் பார்த்தா சிப்பு வராதா சிப்பு..!

* சிரிக்க அஞ்சும் பார்ட்டி ரஜினி ரசிகராக இருந்தால் ரொம்ப வசதி. அந்த உர்ராங்உட்டான் குரங்குகளிடம்,'நான் பவர்ஸ்டாரின் ரசிகன். அவரோட படங்களை வாரத்துக்கு ஒண்ணு பார்த்துட்டு சிரிச்சதுல, இப்போ வயித்து வலிக்கு மருந்து போட்டுக்கிட்டு இருக்கேன்' என்று சூப்பர்ஸ்டார் அந்த விழாவில் பேசினார், இந்த விழாவில் பேசினார்ன்னு கப்சா அடிச்சுவிட்டு பவர்ஸ்டார் படங்களை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைக்கலாம். அதுக்கும் அவருக்கு சிரிப்பு மசியலன்னா, மக்கா அந்த மனுஷனை அலேக்காக அண்டார்டிகா பனிமலைக்கு பார்சல் பண்ணிடுங்க!

* சீரியஸ் பார்ட்டிகளில் அநேகம் பேர் டாஸ்மாக்வாசிகளாக இருப்பதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக எங்கோ படித்த சைக்காலஜி சொல்வதால், டாஸ்மாக் விற்பனையாளர்களை விட்டு, 'சிரிச்சாதான் சரக்கு' என்று அன்பு மிரட்டல் விடுக்க வைக்கலாம்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close