Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"பீரியட்ஸின் முதல்நாள் பெண்களுக்கு விடுமுறை தேவையில்லை" சொல்கிறார் டாக்டர் ஷாலினி

பீரியட்ஸ்

மீபத்தில், மும்பையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் 35 சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர் என்றும்... அவர்கள் விரும்பினால் பீரியட்ஸ் முதல் நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வெளியான அன்றே பெண்கள் மத்தியில் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் எழ ஆரம்பித்தது. அத்தோடு நிற்காத அந்தக் கம்பெனி, தங்கள் முடிவை மத்திய அரசின் மனிதவளத் துறைக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துக்கும் பரிந்துரை மனுவாக அனுப்பிருக்கிறது. இத்தாலி, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே பெண்களின் பீரியட்ஸ் காலங்களில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது வரவேற்புக்குரியது. அதே சமயத்தில், இந்தச் சலுகைகள், விடுமுறைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும்தானா? குடும்பத் தலைவி முதல் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் பெண் வரை அனைவருக்கும் உடல்வலி என்பது பொதுவானதுதானே' என்ற வாதமும் பல பெண்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு உளவியல்ரீதியாக விடுமுறை அவசியமா? என்ற கேள்வியோடு மனநல மருத்துவர் ஷாலினியைச் சந்தித்தோம். 

''பீரியட்ஸின்போது விடுமுறை என்பதை ஆப்ஷனலாக வைக்கலாம். மாதவிலக்கு என்பது, எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு அதிக மனநல மருத்துவர் ஷாலினிஅளவு வலியுடன் உதிரப்போக்கு இருக்கும். சிலர் எவ்வளவு வலி வந்தாலும், தாங்கிக்கொண்டு வேலையைச் செய்வார்கள். சில பெண்கள் பலவீனமாக இருப்பதால், அந்த நாட்களில் நிறைய சிரமங்களைச் சந்திப்பாங்க. அந்த மாதிரி பெண்களுக்கு நிச்சயமாக விடுமுறை அவசியம். பீரியட்ஸ் நாட்களின் வலியும், அவஸ்தையும் பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். உளவியல்ரீதியா பார்த்தாலும் பீரியட்ஸ் முதல் நாள் அன்று எல்லாப் பெண்களுக்கும் விடுமுறை என்பது அவசியமில்லை. தேவையானவங்க எடுத்துக்கலாம். ஆண், பெண் சமம் என்பதை நோக்கி நாம போராடிட்டு வர்றோம். ஆண்களைவிடப் பெண்கள் வலிமையானவங்க என எல்லாத் தளத்திலும் நிரூபிச்சுட்டிருக்கோம். இந்தச் சூழலில் 'பீரியட்ஸ் முதல் அன்று விடுமுறை கொடுக்கணும்' எனச் சொல்வதை பெண்களுக்கான பலவீனமாகத்தான் நான் பார்க்கிறேன்‘‘ என்ற ஷாலினி தொடர்ந்தார். 

‘‘எந்த ஒரு விஷயமும் பெண்களுக்குச் சாதகமாக, விமன் ஃப்ரெண்ட்லியாக இருக்கணும் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், பெண்களை இந்த நாளில் 'நீ அழுக்கு, நீ திட்டு' எனச் சொல்லி தான் காலங்காலமா ஒதுக்கிவெச்சுட்டு இருந்தங்க. இப்போ, விடுமுறை என்பதும்கூட பெண்களைப் பார்த்து 'நீ அழுக்கு, தீட்டு' என மறைமுகமா சொல்றதாதான் நினைக்கிறேன். பீரியட்ஸ் முதல் அதீத உடல்வலி, சோர்வு காரணமாக விடுமுறை எடுக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளில் கொடுக்கப்படும் சலுகை சித்தாள் வேலை செய்யும் பெண்கள் வரை பரவினால் மகிழ்வேன். அதை விடுத்து, பீரியட்ஸ் என்பது மேல்தட்டு பெண்களுக்கான உடல்வலி போல சித்தரிக்கப்பட்டால் அது நியாயமில்லை. முன்பே சொன்னதுபோல பீரியட்ஸ் என்பது அனைத்து பெண்களும் ஒவ்வொரு மாதமும் கடந்து போகும் ஒரு விஷயமே. அதைத் தாங்கிக்கிற வலிமை பெண்களுக்கு இருக்கிறது. யாருக்குத் தேவையோ அவர்கள் பீரியட்ஸ் முதல் நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்கிற சிஸ்டம், பெண்கள் பணியாற்றும் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் வரவேற்கிறோம்’’ என தெளிவாக சொல்லி முடித்தார் டாக்டர் ஷாலினி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close