Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன் பிட்ச், குச்சி ஸ்டம்ப், பை ரன்னர் - இது நம்ம ஏரியா கிரிக்கெட்.

1983-ல உலகக்கோப்பை ஜெயிச்சதும்தான் ஜெயிச்சாங்க, ஊர்ல எல்லாரும் பேட், பாலோட சுத்த ஆரம்பிச்சாங்க. அன்று முதல் இன்று வரை நம் மக்கள் கிரிக்கெட்டுக்கு வெறும் பார்வையாளரா மட்டும் இல்லாம கிடைக்கிற இடத்துல எல்லாம் விளையாடுற பார்வையாளராவும் இருக்காங்க. ரூல்ஸ் மட்டும் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும். அப்படி கிரிக்கெட் விளையாடுறோம்னு நம்ம மக்கள் பண்ணும் அலப்பறைகள் என்னென்ன தெரியுமா?

கிரிக்கெட்

ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே பேட்டிங் பிடிக்குறதுக்கு முன்னாடி எதிரணி பௌலரை ஒரு ட்ரையல் பந்து போடசொல்லமாட்டார். ஆனா நம்ம பயலுக ஏதோ ஆஸ்திரேலியன் பிட்ச்ல பேட்டிங் இறங்க போற மாதிரி ட்ரையல்ஸ் போட சொல்லுவாங்க. ஆனாலும் ஒரு விஷயத்துல நம்ம மக்களை பாராட்டலாம். பேட்டிங் யாருக்கு கொடுக்கவே மாட்டாங்களோ அவங்களுக்குத்தான் இந்த ட்ரையல் பந்தை தானம் பண்ணுவாங்க. முதல் பந்தே அவுட் ஆகிட்டா அது பேட்ஸ்மேன் ட்ரையல்ஸ்னு போங்கு ஆட்டம் ஆடுறதுக்கும் ஒரு கும்பல் கண்டிப்பா இருக்கும். 

அடுத்ததா நம்ம மக்கள் பண்ற அலப்பறை ஸ்டம்ப்புக்குதான்.. விளையாட, ஒரு பாதி உடைஞ்ச பேட், ஒரு ஸ்டம்ப்பர் பால் - இதையெல்லாம் எப்படியாவது உருண்டு புரண்டாவது தேத்திடுவாங்க. ஆனா இந்த ஸ்டம்ப்பை மட்டும் எப்போவதுமே ரெடி பண்ண மாட்டாங்க. க்ரவுண்ட்ல ஏதாவது குச்சி சிக்கிட்டா பிரச்னை இருக்காது. ஆனாலும் அத நிற்க வைக்குறதுக்குள்ள ஸ்.....ப்ப்ப்ப்பா மனுஷன் செத்துடுவான். இதுல பந்து போடும் போது குச்சி காத்துல கீழ விழுந்ததுனா நோ பால் வேற தருவாங்க. அப்படி ஸ்டம்புக்கு எந்த குச்சியும் சிக்கலைனா சில வித்தியாசமான விஷயங்கள நம்ம மக்கள் செயல்படுத்துவாங்க. இது ஊருக்கு ஊர் மாறும். சில இடங்கள்ல தொடர்ந்து மூணு தடவை பந்தை விட்டா அவுட்னு வச்சிருப்பாங்க, சில இடங்கள்ல ஒன் பிட்ச் கேட்ச் கொடுத்தா அவுட்டுனு ரூல் இருக்கும்.

பேட்ஸ்மேன் பக்க ஸ்டம்ப்புக்கே இப்படினா பவுலர் பக்கம் யோசிச்சு பாருங்க. ஏதாவது பெரிய கல்லா எடுத்து பௌலர் பக்கம் வச்சிருவாங்க. அதுல பந்தை எறிஞ்சுதான் ரன் அவுட் பண்ண முடியும். செவன் ஸ்டோன்ஸ் விளையாடுறவங்களுக்குத்தான் அது சுலபமா இருக்கும். இன்னும் சில இடங்கள்ல பீல்டிங் பண்றவங்க மேல பந்து பட்டு அவங்க உடம்பு ஸ்டம்ப்பைத் தொட்டா ரன் அவுட்டுனு ரூல் இருக்கும். இவங்ககிட்ட பேஸ்பால் பிளேயர்ஸ் தோத்துருவாங்க. 

இதையும் தாண்டி அலப்பறைகள் இன்னும் நிறைய இருக்கு பக்கத்துல இருக்குற வீட்டுக்குள்ள பந்தை அடிச்சிட்டா சிக்ஸ் + அவுட் கொடுப்பாங்க. அதுவும் எந்த வீட்டுக்குள்ள அடிச்சா பந்து திரும்ப வராதோ அந்த வீட்டுக்குள்ள அடிச்சா மட்டும்தான் அவுட். பந்தை தொலைச்சவன் புது பந்து வாங்கித் தரணும். பார்த்தீங்களா நம்ம பயலுக புத்திசாலித்தனத்தை.

கிரிக்கெட்

ஸ்டம்ப்பை விடுங்க, க்ரவுண்ட்டே கிடைக்கலைனாலும் கிரிக்கெட் விளையாடாமல் இருக்கமாட்டோம்னு சிலர் இருப்பாங்க. அவங்க கிடைக்குற இடத்துல எல்லாம் புதுசா ரூல்ஸ் போட்டு விளையாட ஆரம்பிச்சிருவாங்க. அப்படித்தான் பாக்ஸ் கிரிக்கெட் வந்தது. ஒன் பிட்ச் கேட்ச், நேராக பந்து பாக்ஸை தாண்டினால் அவுட்ன்னு பாக்ஸ் கிரிக்கெட் விளையாடுறது தனி கலாட்டா. இதுவும் அமையலைன்னா இருக்கவே இருக்கு மொட்டை மாடி கிரிக்கெட்.

இது அடுத்த அக்கப்போர். அம்பயர்னு ஒருத்தன் நிக்குறான்னா அவன்தான் அடுத்த பேட்ஸ்மேன்னு அர்த்தம். அதனாலேயே அம்பயரா நிக்க அந்த போட்டி இருக்கும். அதுவும் உருப்படி கிடையாது. வேணும்னே ரன்னை ஏத்தி, இறக்கி பொய் சொல்லுவாங்க. பேட்டிங் கிடைக்காதுனு தெரிஞ்சா சொந்த டீம் ஆளையே அவுட் கொடுத்து வெளியே அனுப்பவும் செய்வாங்க. பை - ரன்னர்னு ஒரு ஆளை நிற்க வச்சு ஓடவிடுவாங்க. சமயங்கள்ல பேட்ஸ்மேன், பை - ரன்னர் ரெண்டு பேருமே ஓடி ரன் அவுட் ஆகுறதும் உண்டு. 

இப்படி ஏகப்பட்ட அலப்பறைகள் இருந்தாலும் இப்போ யாரும் முன்னாடி மாதிரி விளையாடுறதில்லை. காரணம்., க்ரவுண்ட் எல்லாமே ப்ளாட் ஆயிடுச்சு. வீதியில விளையாடினவங்க எல்லாரும் இப்போ வீடியோ கேம்ஸ்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close