Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாமாண்டில் அடியெடுத்து வைத்தது 'கோவை புத்தகத் திருவிழா'!

coimbatore book festival 2017

சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக பிராந்திய வாரியாக நடத்தப்படும் புத்தகக் காட்சியில், கோவைக்குத் தனி இடம் உண்டு. 

கோவையில் நடத்தப்படும் புத்தகக் காட்சி, இந்த ஆண்டும் எழுத்தாளர்களின் சிறப்புரை, ஆய்வரங்கங்கள், இன்னிசை நிகழ்ச்சி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என இன்னும் பல சிறப்புகளைக்கொண்டு தொடங்கியது.

கோவையைப் பொறுத்தவரை, புத்தகக் கண்காட்சி நடத்த ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே கோவைவாசிகளிடம் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது, 'கோவை புத்தகத் திருவிழா-2017'.

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், ஜூலை 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதில், இரு பெரும் அரங்கங்கள், 241 விற்பனைக்கூடங்கள், 170 பதிப்பகங்கள் எனப் பிரமிக்கவைக்கிறது CBF-17.


இந்த ஆண்டும் புதுப்புது நிகழ்ச்சிகளுடன் களைகட்டிவிட்டது, புத்தகத் திருவிழா. அதில் சில அட்டகாசங்களாக, கதை சொல்லல் நிகழ்ச்சி, கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலைநிகழ்ச்சிகள், 'குதிரை முட்டை' நாடகம், ஓவியப் போட்டி எனக் கோலாகலமானது.
இன்னும் பல சிறப்புகளாக, எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தகங்களுக்கு என்றே தனி விற்பனைக்கூடம், பழையக் காலச்சுவடு இதழ்களின் சேகரிப்புகள் எனப் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐந்து நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 9,500 பேரின் வருகை, பதிவாகியுள்ளது. இது, சென்றாண்டைவிட அதிகம். குழந்தைகளுக்கான புத்தகங்களில் தொடங்கி நவீன இலக்கியம் வரை ஒரு ரவுண்டு அடிக்கலாம்.

coimbatore book festival 2017

இன்னொரு புறம் வாசிப்பு முகாம், எழுத்தாளர்கள் கருத்தரங்கம், திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை எனத் தமிழின் இளம் வாசகர்களைக் கவரவும் தவறவில்லை.

சமையல் குறிப்புகள் என்பதைத் தாண்டி, தீவிர இலக்கியங்களும் பெருமளவு விற்பனையில் உள்ளதாக விழா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, நவீன இலக்கியத்தின்மீது தமிழ் வாசகர்கள் அதிகக் கவனம் செலுத்துவதாக, இலக்கிய ஆர்வலர்கள் சிலர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

இன்னும் ஐந்து நாள்கள் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழாவில், மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் புத்தகங்களும் காத்திருக்கின்றன.

-மூ.இ.சியாம் சுந்தர்வேல்

படங்கள்: அகிலன்.இல
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close