Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் பஜாஜ் அசெம்பிள் செய்யப்போகும் ஹஸ்க்வர்னா 401 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

2013-ல் ஹஸ்க்வர்னா நிறுவனத்தைக் கையகப்படுத்திய கேடிஎம், அதை உலகச் சந்தைகளில் பிரபலப்படுத்தும் பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ - கேடிஎம் ஆகிய பைக் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் ஒன்றிணைந்து ஹஸ்க்வர்னா பிராண்டை, அடுத்த ஆண்டில் உலகளவில் கொண்டு செல்லப்போவதவாகக் கூறியுள்ளார்கள். 114 ஆண்டுகள் பழமை வாய்ந்த பைக் நிறுவனமான ஹஸ்க்வர்னா, 1903-ம் ஆண்டு முதலாக பைக் தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியது. ஸ்வீடனில் இருக்கும் ஹஸ்க்வர்னா எனும் நகரத்தில்தான், இந்நிறுவனத்தின் பைக் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் வித்தியாசமான பெயருக்கான காரணம் புரிந்ததா? எண்ட்யூரோ, மோட்டோ க்ராஸ், சூப்பர் மோட்டோ ஆகிய பைக் செக்மென்ட்களில், பல மாடல்களைப் பொசிஷன் செய்திருக்குகிறது ஹஸ்க்வர்னா. இந்நிறுவனம் 2012-ம் ஆண்டில், 10 ஆயிரம் பைக்குகளை மட்டுமே உலகளவில் விற்பனை செய்திருந்தது;

கேடிஎம்

இது 2016-ம் ஆண்டில் 30 ஆயிரம் பைக்குகளாக அதிகரித்திருக்கிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கும் இந்த விற்பனை எண்ணிக்கையானது, பஜாஜ் ஆட்டோ - கேடிஎம் கூட்டணியின் உதவியால், உலக பைக் சந்தைகளைத் தவிர்த்து, இந்தியாவிலும் கணிசமாக அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! கடந்தாண்டு நடைபெற்ற EICMA மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட Vitpilen 401 (கஃபே ரேஸர் மாடல்), SvartPilen 401 (ஸ்க்ராம்ப்ளர் மாடல்), Vitpilen 701 (நேக்கட் மாடல்) ஆகிய மூன்று பைக்குகளை, முதற்கட்டமாக பஜாஜ் இந்தியாவில் அசெம்பிள் செய்யும் எனத் தெரிகிறது. மேலே சொல்லப்பட்ட 401 மாடல்கள் இரண்டும், தற்போது விற்பனை செய்யப்படும் டியூக் 390 பைக்கை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

husqvarna

இதுவே 701 மாடல், வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கேடிஎம் 690 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே மாடர்ன் மற்றும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஹஸ்க்வர்னா பைக்குகளில் இருப்பவை, கேடிஎம் 390 பைக்குகளின் இன்ஜின் - ஃப்ரேம் - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ்தான் மக்களே! ஆனால் வட்ட வடிவத்தில் இருக்கும் ஹெட்லைட் - ரியர் வியூ மிரர்கள் -  இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்போக் வீல்கள், சிங்கிள் பீஸ் சீட், சைடு எக்ஸாஸ்ட் என ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கே உரிய டிசைன் அம்சங்களும் தொடர்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில், 401 மாடல்கள் இரண்டும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ktm

ஆரம்பத்தில் ஆஸ்திரியாவில் இருக்கும் கேடிஎம்மின் Mattighofen பைக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவுக்கு வரும் என்றாலும், 2018-ன் இறுதிக்குள் இந்நிறுவன பைக்குகளை, டியூக் மற்றும் RC பைக்குகள் தயாரிக்கப்படும் அதே ஃப்ளாட்ஃபார்மில், சக்கனில் இருக்கும் தனது பைக் தொழிற்சாலையில், பஜாஜ் அசெம்பிள் செய்யத் துவங்கிவிடும் எனத் தகவல் வந்துள்ளது. கேடிஎம்மின் ப்ரோ-பைக்கிங் ஷோரூம்களில், டியூக் மற்றும் RC பைக்குகளுடன், ஹஸ்க்வர்னாவின் 401 மாடல்கள் விற்பனை செய்யப்படும் என்பது பெரிய ப்ளஸ்.

ஹஸ்க்வர்னா

ஆனால் கேடிஎம் பைக்குகளைவிடச் சற்றே அதிக விலையில்தான், ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனை செய்யப்படும். சேல்ஸ் & சர்வீஸ் விஷயத்தில் பிரச்னை இருக்காது என்பதால், இந்த பிரிமியம் பொசிஷனிங்கை ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close