Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்குப் போட்டியாக பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணி!

`டூகாட்டியை வாங்கியது பஜாஜ்' என்ற அறிவிப்பை, பைக் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், ட்ரையம்ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது பஜாஜ். எனவே, கையாளுமைக்கும் பெர்ஃபாமன்ஸுக்கும் கேடிஎம் பைக்குகள் என்றால், சொகுசான ஓட்டுதலைக்கொண்ட பைக்குகளுக்காக ட்ரையம்ப் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது பஜாஜ். 

என்ன வகை பைக்குகளை எதிர்பார்க்கலாம்?

royal enfield

உலகளவில் ஸ்போர்ட்டியான மற்றும் சொகுசான பைக்குகளைத் தயாரிக்கும் மிகச்சில நிறுவனங்களில் ட்ரையம்ப்பும் ஒன்று. ஏற்கெனவே பல்ஸர் மற்றும் டியூக்/RC போன்ற பெர்ஃபாமன்ஸ் பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது பஜாஜ். ஆனால், க்ரூஸர் & டூரர் பைக் செக்மென்ட்டில், அவென்ஜர் மற்றும் டொமினார் பைக்குகள் பொசிஷன் செய்யப்பட்டிருந்தாலும், அது ட்ரையம்ப் நிறுவனத்தின் போனவில்லி, த்ரக்‌ஸ்டன் பைக்குகளைப் போன்ற சொகுசான ஓட்டுதலைக்கொண்ட தயாரிப்புகள் இல்லை. இதனாலேயே இவற்றின் விலை அதிகமாக இருந்தாலும், உலகளவில் இவை நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ட்ரையம்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைந்த பைக்கான ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஆன் ரோடு விலையே 8.4 லட்சம் ரூபாயைத் தொடுகிறது!  ஆகவே, 400-600சிசி செக்மென்ட்டில், மிட் சைஸ் ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் இந்தக் கூட்டணி வெளியிடலாம்.

ட்ரையம்ப்பின் ப்ளஸ், மைனஸ் என்ன?

triumph

இந்தியாவில் உற்பத்திச் செலவு, ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவை குறைவாக இருந்தாலும், பொறியியல் திறனில் செம ஸ்மார்ட். இதனாலேயே, கடந்த 2014-ம் ஆண்டில் 250சிசி பைக் ஒன்றை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது ட்ரையம்ப். ஆனால், அந்தத் திட்டம் பின்னாளில் கைவிடப்பட்டது அறிந்ததே. எனவே, முன்பு சொன்ன  விஷயங்களை கைவசம் வைத்திருக்கும் பஜாஜ், அந்த வளங்களை டிரையம்ப் நிறுவனத்துக்குக் கொடுத்து உதவும் எனலாம். பஜாஜ் - கேடிஎம் வெளியிட்ட டியூக் மற்றும் RC பைக்குகள், இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. மேலும் டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி தயாரித்த G310R & G310GS ஆகியவை, இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், அவை உலகளவில் பிரபலமான மாடல்களாகவே இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, மிட் சைஸ் ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதுடன், உலகளவில் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பையும் பஜாஜின் உதவியால் ட்ரையம்ப் ஒருசேரப் பெறும் என்பது பெரிய ப்ளஸ்.  

பஜாஜின் ப்ளஸ், மைனஸ் என்ன?

bajaj

இந்தியாவில் டிரெண்டிங்கில் இருக்கும் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் தான் இல்லை என்பதால், அதற்கு அடுத்தபடியான வரவேற்பைப் பெற்றிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவன தயாரிப்புகளின் மீது, தனிக்கவனம் செலுத்திவருகிறது பஜாஜ். மாதத்துக்கு சராசரியாக 40 ஆயிரம் பைக்குகள் என்றளவில் விற்பனையாகும் க்ளாசிக் 350 பைக்குக்குப் போட்டியாக வெளிவந்ததுதான் டொமினார். இது கொடுக்கும் காசுக்கு ஏற்ற மாடர்ன் பைக்காக இருந்தாலும், அது பஜாஜ் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். ட்ரையம்ப்பின் போனவில்லி, இதற்கான மாற்றாக இருந்தாலும் அதன் விலை மிகவும் அதிகம்! எனவே, இந்த பைக்கை அடிப்படையாகக்கொண்டு, ரெட்ரோ டிசைனுடன்கூடிய ஒரு பைக்கைத் தயாரிக்கும் நாள், வெகுதொலைவில் இல்லை! 

எப்போது இவை விற்பனைக்கு வரும்?

பஜாஜ்

டிசைனிலிருந்து ஒரு பைக் டீலர் வசம் வருவதற்கு, கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ, தங்கள் கூட்டணியை 2013-ம் ஆண்டிலேயே அறிவித்தாலும், அவர்களது முதல் தயாரிப்பான G310R, 2015-ம் ஆண்டின் இறுதியில்தான் வெளிவந்தது. அதைப்போலவே, பஜாஜ் - கேடிஎம் நிறுவனங்களும் தங்களது கூட்டணியை 2008-ம் ஆண்டில் அறிவித்தாலும், 2011-ம் ஆண்டில்தான் டியூக் 200 வெளிவந்தது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணியிடமிருந்து புதிய பைக் வெளிவருவதற்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது. இப்போது இந்தியாவில் BS-IV மாசு விதிகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால். 2020-ம் ஆண்டில் BS-VI மாசு விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், தனது தயாரிப்பை அதற்கேற்ப இந்தக் கூட்டணி தயாரிக்குமா என்பதை காலம்தான் உணர்த்தும்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close