Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளை விளையாட விட வேண்டுமா... விளையாடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? #GoodParenting

குழந்தை

விளையாட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் குழந்தைகள் தங்களை எப்போது விளையாட அனுப்புவார்கள் எனக் காத்துக்கிடப்பார்கள். ஹோம் வொர்க் எழுதிக்கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு நண்பன் விளையாட அழைத்தால் அவ்வளவுதான். அரை குறையாக ஹொம் வொர்க்கை எழுதிவிட்டு விளையாட ஓடிவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல அவர்களின் உடல் மற்றும் ஆரோக்கியத்துக்கும் விளையாட்டு மிகவும் அவசியம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் விளையாட்டு, குழந்தைகளுக்கு உதவியாக இருக்கிறது. 

சில பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்புவதில் தயக்கம் காட்டுவதில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. குழந்தைகளை விளையாடச் செல்கிறேன் எனக் கேட்டதும் அனுப்பி விடுவது சரிதானா... அவர்கள் என்ன விளையாடுகிறார்கள், எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா என்பதே அந்தக் கேள்வி. குழந்தைகள் விளையாடுவதைத் தெரிந்துகொள்வது என்பதைக் கண்காணிப்பது என்று புரிந்துகொள்ளக் கூடாது. 

குழந்தைகள் விளையாடும்போது புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அவை தவறாமல் சரியான விதத்தில் கிடைக்கின்றனவா என்பதைச் சரிபார்க்கும் விதத்தில் பெற்றோர்களின் தெரிந்துகொள்ளல் இருக்க வேண்டும். 

விளையாட்டு விதி: எந்தவொரு விளையாட்டுமே குறிப்பிட்ட விதிகளோடு உருவாக்கப்பட்டவையே. அவற்றை விளையாடும் உங்கள் குழந்தை அவற்றைப் புரிந்துகொண்டு, பின்பற்றுகின்றனரா என்பதைப் பார்க்க வேண்டும். விதிகளை மதிக்காமல் தன் போக்கில் விளையாடுவது சரியானதல்ல. 

children

குழு: பெரும்பான்மையான விளையாட்டுகள் குழுவாக இணைந்து ஆடக்கூடியவை. எனவே தனது குழுவில் உள்ளவர்களோடு உங்கள் குழந்தை இணைந்து விளையாடுகிறார்களா என்பதைச் சோதிக்க வேண்டும். ஒரு சிலரோடு இணைந்து விளையாடுவதில் பிரச்னை என்பதாக இருந்தால், அதை நீங்கள்தான் சரிசெய்ய வேண்டும். 

நேரம்: விளையாடினால் குழந்தைகளுக்கு நேரம் செல்வதே தெரியாது. அதனால் விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அதிக நேரம் விளையாடும்போது உடல் அதிக அளவில் சோர்ந்து, கவனம் சிதறும். அடிபடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே போதுமான நேரம் விளையாடுவதே சரி.

ஒதுக்குதல் கூடாது: விளையாட்டு என்பதே குழந்தைகள் பாகுபாடின்றி ஒன்றாவதற்கான ஒரு வழிதான். ஆனால், சில குழந்தைகளை நிறம், சாதி, உடல் உறுப்பின் அமைப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி ஒதுக்கி வைத்துவிடுவர். அப்படிச் செய்பவர்களில் உங்கள் குழந்தையும் ஒருவராக இருக்கக்கூடும். அப்படியெனில், கவனமாக ஒருவரை ஒதுக்குவது தவறு என்பதைப் புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் அடிப்படை கடமை. 

கற்றுகொடுங்கள்: சில குழந்தைகள் உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் விளையாட்டுப் பொருள்கள் மீது ஆசைப்படுவர். உதாரணமாக, கேரம் போர்டு என வைத்துகொண்டால், உடனே வாங்கித் தருமாறு அடம்பிடிப்பர். நீங்களும் வாங்கிக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால், கேரம் எப்படி விளையாடுவது என்பது குழந்தைக்குத் தெரியாது. அந்த நேரத்தில் பெற்றோர்தான் அவர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

காயம்: உங்கள் பிள்ளைகள் விளையாடும்போது அடிக்கடி காயம்பட்டுக்கொள்கின்றனரா... நிச்சயம் நீங்கள் அவர்கள் விளையாடும் இடத்திற்குச் செல்ல வேண்டும். எதனால் அடிபடுகிறது அல்லது யாரேனும் காயப்படுத்துகிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை விளையாட்டில் மிக மூர்க்கமாக ஆடும்போது பிள்ளைகளுக்குக் காயம்படுகிறது என்றால் நிதானமாக விளையாடப் பழக்கப் படுத்த வேண்டும். 

குழந்தைகள் விளையாடி முடித்ததும் வியர்வை வடியும்வரை காற்றில் அமரச் செய்து, பின் குளிக்கச் செய்வது நல்லது. பிள்ளைகள் விளையாடும் விஷயத்தை விளையாட்டாக விட்டுவிடாதீர்கள். குழந்தை வளர்ப்பில் இதுபோன்ற கவனிப்பும் மிக அவசியம். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close