Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணியில் சேர விஜயகாந்திடம் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நேரில் வேண்டுகோள்!

க்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்தை மக்கள் நல கூட்டணியில் இணைய வலியுறுத்தினர்.
 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன்  ஆகியோர் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேச உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
 

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, விஜயகாந்தை மக்கள் நல கூட்டணியில் இணைய வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

கடந்த 20 ம் தேதி தமிழக பாஜக தலைவர்களும்  விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close