Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி வெளிநாடு செல்வதால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அமேதி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால், இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமேதியில் பேசும்போது, ''விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். இதற்கு, பா.ஜ. கூட்டணி அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்து–முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசினார். பீகார் தேர்தல் முடிவுக்குப்பின், அந்த மாநிலம் இருப்பதையே அவர் மறந்து விட்டார்.

மேலும், பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை. தற்போது ரஷ்யா சென்றுள்ள மோடியால், இந்திய நாட்டுக்கோ, மக்களுக்கோ கூட எந்தவித நன்மையோ, பலனோ கிடையாது" என்று குற்றஞ்சாட்டினார்.

எடிட்டர் சாய்ஸ்