Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருண் ஜெட்லி ஏன் விசாரணைக்கு பயந்து ஓடுகிறார்: கெஜ்ரிவால் ட்வீட்!

புதுடெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான விசாரணை பயந்து ஏன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓடுகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அப்போது, தனது அலுவலத்திலும் சோதனையிடப்பட்டதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். மேலும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதுதொடர்பாக மாநில அரசிடம் இருந்த விசாரணை அறிக்கையைப் பார்வையிடுவதற்காகவே, சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையில், அருண் ஜெட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து அரவிந்த் கெஜ்ரிவால், ''சில ஊடகங்கள் ஜெட்லியை அப்பாவியாகச் சித்திரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்க ஆர்வமாக உள்ளது. பிறகு ஏன் அவர் விசாரணைக்கு பயந்து ஓட வேண்டும்? விசாரணைக் குழு அளித்த அறிக்கையை தவறாகப் பிரதிபலிக்க பா.ஜ.க. முயல்கிறது" என்று பதிவிட்டு உள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''எனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தினால் எதையும் கைப்பற்ற முடியாது; கணக்கில் வராத 4 மஃப்ளர்களை வேண்டுமானால் அவர்கள் பறிமுதல் செய்யலாம்' என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ