Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பணத்திற்கு அரசியல் செய்யும் விஜயகாந்த், ஏலம்விட்டு கூட்டணி வைக்கலாம்!'

திண்டுக்கல்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பணத்திற்காக அரசியல் செய்து வருகிறார். அவர் ஏலம் விட்டு கூட்டணியை தேர்வு செய்யலாம் என்று  தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார்.

அ.தி.மு.க. அரசின் நான்கரை ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திஜி கலை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, ''விஜயகாந்த் தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நல கூட்டணி போன்ற கட்சிகளுடன் பணம் மற்றும் தொகுதிகளுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார். விஜயகாந்த், பொது ஏலம்விட்டு அதிக தொகை கேட்பவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்" என்று விமர்சித்து பேசினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ