Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாக்.குடன் நெருக்கம் காட்டினால் அரசியலில் நீடிக்க முடியாது: மோடியை எச்சரிக்கும் சிவசேனா!

மும்பை: பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டிய தலைவர்கள் யாரும் அரசியலில் நீண்டகாலம் நீடித்ததில்லை என்று பிரதமர் மோடியை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா எச்சரித்து உள்ளது.

பாகிஸ்தான், சாபமிடப்பட்ட மண் என்றும் லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் ரத்தம் உறைந்த பூமி அது என்றும் கூறியுள்ள சாம்னா, அங்கு சென்ற இந்திய தலைவர் யாரும், நீண்ட காலம் அரசியலில் நீடித்ததில்லை என தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில், பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டது பற்றி கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்துவதில் அவர் அதிக அக்கறை காட்டியதையும், அதன்பின் அரசியலிலிருந்து வாஜ்பாய் ஒதுங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், பா.ஜ.க. மூத்த தலைவரான அத்வானி பாகிஸ்தான் சென்றதையும் அந்நாட்டின் முதுபெரும் தலைவரான முகம்மது அலி ஜின்னாவை புகழ்ந்தைதையும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள அந்த தலையங்கத்தில், அதன் பின் அத்வானியின் அரசியல் வாழ்க்கை சரிவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close