Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை நடத்த தயாராகிறது தேர்தல் ஆணையம்!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம்,  துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு, மாவட்ட தேர்தல்அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்சேனா, புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக கூறினார்.

படம்: அ.குரூஸ்தனம்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close