Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று நல்ல நேரம்... இன்று எமகண்டம்... அதிமுகவின் ஆச்சர்ய பேரணி!

தமிழக அரசின் சாதனை விளக்க பேரணி நடத்திட அதிமுக தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில் தலைமை உத்தரவுபடி தமிழகம் முழுக்க இன்று காலை 8.30 மணிக்கு ஆங்காங்கே பேரணி துவங்கியது. வழக்கமாக நல்ல நேரம் பார்த்து நிகழ்ச்சியை நடத்தும் அதிமுக, இன்று காலை 7.30 முதல் 9 மணிவரை எமகண்டம். ஆனால், இந்த நேரத்தில் தமிழகம் முழுக்க பேரணியை துவக்க சொல்லி உத்தரவிட்டதாகவும், நேற்று மதியம் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை கோரி திமுக நடத்திய பேரணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பேரணி நடத்திட உத்தரவிட்டாத தகவல்கள் வெளியாகின.
 

அம்மா பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 65,616 வாக்குசாவடிகளுக்கு உட்பட 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களிடத்திலும் நேரிலே எடுத்துச்சென்று 100 சதவிகிதம் வெற்றி பெற வேண்டி மாபெரும் சாதனை விளக்க லட்சிய பேரணி என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான ப.குமார், அமைச்சர்களான வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமார், பூனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இறுதியில் இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரட்சி துணை மேயரும், அதிமுக மாநகர அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன், முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு எம்.எல்.ஏ.வுமான பரஞ்சோதி, அமைப்பு செயலாளரும் எம்.எல்.ஏ வளர்மதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

திருச்சியில் மலைக்கோட்டை வாசலில் துவங்கிய பேரணி, திருச்சி மார்க்கெட் அருகில் உள்ள கீரைக்கொள்ளையில் முடிந்தது. இந்த பேரணியில் பேசிய  அரசு தலைமை கொறடாவுமான மனோகரன், கனமழையில் அம்மா மக்களை காப்பாற்ற வில்லை என எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. ஆரம்பத்திலிருந்தே மக்களுக்காக, ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கியுள்ளார். தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி கிரைண்டர், மாணவர்களுக்கு மடிக்கணினி என மக்களின் மீது அக்கறை கொண்ட உன்னத ஆட்சியை அம்மா நடத்தி வருகின்றார்.
 

ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் அவதூறுகளை கிளப்பி வருகின்றார்கள். அம்மா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் திருச்சியில் ஒரே ஒரு அரசு கல்லூரி மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது 7 கல்லூரிகள் உள்ளது. அத்தனை கல்லூரிகளும் அம்மா திருச்சி மாவட்டத்திற்காக வழங்கி உள்ளார்கள்.   கம்பீரமாக தமிழகத்தை ஆளும் அம்மாவை வீழ்த்த, பிச்சைக்காரர்கள் போல கூட்டணிக்கு எதிர்க்கட்சிகள் அலைகின்றன. திமுகவில் முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சியில் ஜெயித்துவிடலாம் என சதவித கணக்குகளை போட்டுக்கொண்டு மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். அதையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் திருச்சியும், தமிழகமும் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபித்துக்காட்டுவோம்" என்றார்.

-சி.ஆனந்தகுமார்


படங்கள்:
தே.தீட்ஷித் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close